கிறிஸ்துவின் வம்சவரலாற்றில் பிழை என்பதைப் போன்ற சில இணைய பதிவுகளையும், சரியான வசன அஸ்திபாரம் இல்லாமல் இஸ்லாமிய கேள்விகளுக்கு கிறிஸ்துவ சகோதரர்கள் கொடுக்கிற பதில்களையும் காண நேரிட்டது.
மத்தேயுவில் (முதல் அதிகாரத்தில் ) கொடுக்கப்பட்ட 41 பெயர்களும் தொடர்ச்சியானவர்கள் எந்த பெயரும் விடுபடவில்லை. ஏனென்றால் நம் வேதம் குறைவற்றது.
அப்படியானால் மூன்று - பதினான்கு தலைமுறைகளாக தொகுக்கப்பட்ட இப்பெயர்களும் மிகச்சரியானது. மத்தேயு முதலாம் அதிகாரத்தில் கொடுக்கப்பட்ட பெயர்கள் வருமாறு:
Sl.no
பெயர்
Sl.no
பெயர்
Sl.no
பெயர்
1
ஆபிரகாம்
15
தாவீது
29
சலாத்தியேல்
2
ஈசாக்கு
16
சாலொமோன்
30
சொரொபாபேல்
3
யாக்கோபு
17
ரெகொபெயாம்
31
அபியூத்
4
யூதா
18
அபியா
32
எலியாக்கீம்
5
பாரேஸ் (யூதா
தாமாரினிடத்தில் பெற்றான்)
19
ஆசா
33
ஆசோர்
6
எஸ்ரோம்
20
யோசபாத்
34
சாதோக்கு
7
ஆராம்
21
உசியா
35
ஆகீம்
8
அம்மினதாப்
22
யோதாம்
36
எலியூத்
9
நகசோன்
23
ஆகாஸ்
37
எலெயாசார்
10
சல்மோனைப் பெற்றான்;
24
எசேக்கியா
38
மாத்தான்
11
சல்மோன்
25
மனாசே
39
யாக்கோபு
12
போவாஸ்
26
ஆமோன்
40
யோசேப்பு
13
ஓபேத்
27
யோசியா
41
கிறிஸ்து
எனப்படுகிற இயேசு
14
ஈசாய்
28
எகோனியா
ஏர் என்பவனுக்கு யூதா மற்றும் ஓனான் என்னும் யூதாவின் புத்திரர்களை கர்த்தர் அழித்தார்.யூதாவினுடைய இளைய குமாரன் 'சேலா' வளரும் மட்டும் 'தமார்' எனும் ஓனானின் மனைவி அவன் தகப்பன் வீட்டில் இருந்தாள் . சேலா பெரியனானபின்னும் தாமாருக்கு கொடுக்கப்படவில்லை (இது ஒரு தலைமுறையின் காலம்). பின் வேசி என எண்ணி திம்னாவிலே முக்காடிட்டு அமர்ந்திருந்த தாமரை யூதா மருமகள் என தெரியாமல் வயோதிக காலத்தில் அறிந்தான் .ஆனால் மருமகள் யூதா அங்கு வருவதை அறிந்து தான் அங்கு சென்றாள். இதன் மூலம் பாரேஸ் பிறந்தான். இதன் பின் அவளை யூதா அறியவுமில்லை. தன் மகன் சேலாவிற்கு மணமுடிக்கவுமில்லை. யூதா - 'என்னிலும் தாமார் நீதியுள்ளவள்' எனக் கூறுவதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
ஏர் என்பவன் மூலம் இந்த வாமாசாவளி பிறந்திருந்தால் 41 தலைமுறை என வேதம் கூறியிருக்கும். ஆனால் ஏர் என்பவன் மரித்ததில் இருந்து,சேலா பெரியனான கால அளவு(பிறந்ததிலிருந்து வரும் கால அளவு அல்ல, சிறியவனாயிருக்கிறவன் பெரியவனாகும் வரைக்குமான கால அளவு இது ), யூதாவிற்கு பாரேஸ் பிறந்த காலம் வரை ஒரு தலைமுறையின் காலம் (35-40 வருடம்) என வேதம் கணக்கில் கொண்டுள்ளதை எப்படி கணக்கில் கொள்ளாமல் வேதத்தில் பிழை என போகிற போக்கில் கூறி விட முடியும்?
ஆக 41 பேர்கள் வம்சாவளியில் இருந்திருந்தாலும், தலைமுறை 42 தான்!!! வேதம் குறைவற்றது. அதிகமாய் ஆராயப்படவேண்டியது!!!
அல்லேலூயா!! ஆமென்!!
தேவனுக்கு மகிமை உண்டாகுக!!!
-- Edited by JOHN12 on Thursday 27th of June 2019 01:48:35 PM