கேள்வி :- பெண்கள் அவர்களது அப்பாவை மிகவும் விரும்புகிறார்களே ஏன்?
பதில் :- எந்த ஒரு அப்பாவும் தனது மனைவி மீதான அன்பைவிட பலமடங்கு தங்களது மகள்கள் மீது பாசம் கொண்டிருப்பார்கள். எந்த ஒரு ஆணும் தனது வாழ்வில் மூன்று தாய்களை சந்திக்கிறான்.
முதலில் பெற்றெடுத்த தாய்,இரண்டாவதாக பெற்றெடுத்து பரிசளித்த சகோதரி உருவிலான தாய். மூன்றாவதாக தனது மனைவி பெற்றெடுத்து பரிசளித்த மகள் உருவிலான தாய். இதில்,
நேரடியாக தனது இரத்தத்தின் மூலமாக கிடைத்த மகள் என்ற முறையில் இருக்கும் தாய்தான் அப்பாவின் இறப்பு வரை உடன் இருக்கிறாள், பெரும்பாலும்.ஓர் ஆண்மகன் தனது மகளை விரும்ப இவ்வளவு காரணங்கள் இருக்க, மகள்கள் தங்களது அம்மாவை விட அப்பாவை, அதிகம் விரும்ப என்ன காரணங்கள் இருக்கிறது? பிறந்த அந்த நாளில் இருந்து வரும் ஒவ்வொரு நாளும், உலகை கற்றுத்தரும் ஆசான் தந்தைதான். தங்களது வாழ்நாளில் நீண்ட நாட்களாக கண்ட நேர்மையான தோழன் தங்களது தந்தைதான் என்று பெண்கள் எண்ணுகிறார்கள்.
தங்களது எந்த நிலையிலும் தன்னை பாதுகாக்கும் ஒரே நபர் தந்தைதான் என்கின்றனர் பிறந்த அந்த நாளில் இருந்து வரும் ஒவ்வொரு நாளும், உலகை கற்றுத்தரும் ஆசான் தந்தைதான். இது மகன்களுக்கும் கூட கிடைக்கும் என்றாலும், பெண்களுக்கு வாழ்நாள் முழுதும் கிடைக்கும் பரிசு இது.
மகன்களிடம் காண்பிக்கும் அதே கோபத்தை, அப்பாக்கள் தங்களது மகள்களிடம் காண்பிப்பது இல்லை. வீட்டில் சகோதரன் வாங்கிய அளவு அடியை, எந்த மகளும் எப்போதும் வாங்கியது இல்லை. மகள்கள் கேட்கும் எந்த விஷயத்திற்கும் அப்பாக்கள், "முடியாது.." என்ற வார்த்தைகளை பிரயோகம் செய்வதில்லை.
வெளியிடங்களுக்கு சென்று தாமதம் ஆனால், அது எந்நேரமாக இருந்தாலும், கால்கடுக்க காத்திருந்து அழைத்துவரும் காவலன்தான் அப்பா.
யார் மீது எப்படி அன்பு கொள்வது? என்று மெய்யான அன்பிற்கும் பொய்யான அன்பிற்குமான வித்தியாசத்தை கான்பித்து அன்பின் உணர்வுகளை மகளுக்குள் புரிய வைப்பவர் அப்பா.
ஒவ்வொரு மகள்களும் முதலில் அன்பு செலுத்துவது அப்பாவிடம்தான். தங்களுக்கு எத்தனை மோசமான சூழ்நிலைகள் வந்தாலும், அவற்றிலிருந்து கவனமாக மீட்டு வருகின்ற சூப்பர் ஹீரோ அப்பாதான். என்னதான் அம்மா தன் மகளுக்கு அன்பு பாலூட்டினாலும், பெண்களுக்குள் தைரியத்தை ஊட்டுவது அப்பாக்கள்தான்.
அம்மாவுக்கு எப்போதுமே தங்களது குழந்தைகள் மீது அக்கறையுடனான பயம் இருக்கும். ஆதலால், தைரியத்தை ஊட்ட அப்பாக்களால் மட்டும்தான் முடியும். தைரியமா இருமா பார்த்துக்கலாம் என்ற ஓா் வார்த்தையில் ஒரு தைரியம் வரும் பாருங்கள். அதற்கு இணையே இல்லை.
மகளுடைய வாழ்வில் அனைவரும் ஒவ்வொரு சூழ்நிலை வரும் போதும், மாறி, மாறி, தோன்றுவர். அவர்களுள் நிறைய மாற்றங்களை காணமுடியும். ஆனால், அம்மா, அப்பா மட்டும்தான் கடைசி வரை எந்த மாற்றமும் இல்லாமல், மகளை ஏமாற்றம் அடைய வைக்காமல் இருக்கும் உறவுகள்.
கடைசிவரை தன்னுடன் இருக்க ஒவ்வொரு மகளும் விரும்பும் உறவு அப்பா.
அப்பாவின் மறைவு பெண்களின் கண்ணீர் ஊற்றுக்கு காரணமாகிறது. ஓர் மகளின் வாழ்க்கையில் அப்பா என்பவர் ஓர் உறவு அல்ல, தோழன், வழிகாட்டி, ஆசான், ஹீரோ, காவலன், என எண்ணற்ற பாத்திரங்களை தாங்கிக் கொண்டிருப்பவர்தான் அப்பா. ஆதலால்தான் பெண்கள் தங்களது தந்தையை அதிகமாக நேசிக்கிறார்கள்....
இவ்வளவு பாசம்,நேசம்,பரிவு வைக்கும் அப்பாக்கள் "நல்ல துணையை"தேடி வைப்பார்கள் என்ற உணர்வு பெண்மக்களிடம் வளர வேண்டும்,,?
ஆயுள் வரை தன் மகள் நன்றாக வாழ்கிறாள்,,,என்ற சந்தோசமே அப்பாக்களின் ஆயுளை கூட்டும்,,,
படித்ததில் பிடித்தது பிடித்ததை பகுத்தது இது.!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)