பரிசுத்தரே எங்கள் இயேசு தேவா நானிலத்தில் நீர் என்றும் இராஜா உம்மை பாடுவதால் என்னில் தோல்வியில்லை உம்மை துதிப்பதினால் என்னில் குறைவே இல்லை
அல்லேலூயா (2) உம்மை உயர்த்துவதே எங்கள் நோக்கம் ஐயா உம்மைப் பாடுவதே எங்கள் மேன்மை ஐயா
நான் கொண்ட திட்டங்கள் சிறிதாயினும் ஐயா எனக்காய் உம் திட்டங்கள் பெரிதல்லவோ புழுதியிலிருந்தென்னை உயர்த்தினீரே இராஜாக்களோடு அமர்த்தினீரே உந்தன் கிருபைகளை எண்ணி நான் பாடுவேன் உந்தன் மகிமைதனை தினம் நான் ருசிப்பேன் - அல்லேலூயா
ஊழிய எல்லைகள் பெரிதாக்கினீர் அதில் இராஜாக்கள் உதிக்கவும் உதவிசெய்தீர் அறியாத ஜாதியை வரவழைத்தீர் நீர் தந்த வாக்கினை நிறைவேற்றினீர் உந்தன் கிருபைகளை எண்ணி நான் பாடுவேன் உந்தன் மகிமை தனை நான் ருசிப்பேன் - அல்லேலூயா
வருத்தங்கள் பசிதாகம் ஏற்பட்டாலும் எங்கள் விசுவாச கேடகம் வீழ்ந்திடாதே நம்பினோர் நட்டாற்றில் கைவிட்டாலும் என்னை காப்பாற்ற நீர் உண்டு பயமில்லையே உந்தன் கிருபைகளை எண்ணி நான் பாடுவேன் உந்தன் மகிமை தனை நான் ருசிப்பேன் - அல்லேலூயா
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)