Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மெய்யான போஜனத்தின் போஜனம் !!!


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 37
Date:
மெய்யான போஜனத்தின் போஜனம் !!!
Permalink  
 


அன்பு நண்பர்களே!!!

 

கர்த்தாதி கர்த்தராம்  நம்முடைய ஆணடவர் இயேசுகிறிஸ்து  இந்த பூமியில் தாம் வாழும்போது  மெய்யான போஜனம் என்று கூறினதாக பரிசுத்த வேதாகமம் கூறுகிறது.

யோவான் 6:55 என் மாம்சம் மெய்யான போஜனமாயிருக்கிறது, என் இரத்தம் மெய்யான பானமாயிருக்கிறது.

உண்மையில் எந்தவொரு போஜனமானாலும் அது போஜனமாவதர்க்கு முன் அதற்க்கு ஒரு போஜனம் தேவைப்பட்டிருக்கும்.. இதை தான் அறிவியலும் 'உணவு சங்கிலி'யைக்  கொண்டு விவரிக்கிறது..  

பொதுவாக,மனிதன் தாவரம் மற்றும் மிருக வகைகளில் இருந்து உணவு தேடிகொள்ளுகிறான். உதாரணத்திற்கு  தாவர வகையை எடுத்துகொள்ளுவோமானால், அது சூரியஒளி மற்றும் நிலத்தடி நீரைக்கொண்டு தனக்கு உணவை தயாரித்து உண்ணுகிறது. சைவ மிருக ஜீவன்கள் தாவரங்களில் இருந்து தம் உணவை பெறுகின்றன. மனிதன் இவ்விரண்டு வகைகளில் இருந்தும் தம் உணவை பெறுகிறான்.

காரியம் இவ்வாறிருக்க தம்மை மெய்யான போஜனமாக்கின இயேசுவின் போஜனம் என்னவாய் இருந்திருக்கவேண்டும்? 

இயேசுவானவரின் உடனிருந்த சீடர்கள் கூட ஒருகாலத்தில் அந்தக்  காரியத்தை அறிந்துணர்ந்திருக்கவில்லை. ஒருவேளை உடனிருத்த சீடர்களிடம் அவ்வமையம் கேட்டிருப்போமேயானால் அவர்களும் மீனையும்,அப்பத்தையும் அல்லது ஏசாயாவை போல தேனையும்,வெண்ணையையும் இயேசு உண்ட உணவாக கூறி இருப்பார்கள்..

ஆனால் நம்முடைய மெய்யான போஜனமான இயேசுவின் சரீரத்திற்கு உனவாயிருந்தது 'பிதாவின் சித்தம் செய்வதே'!!...

யோவான் 4:32,34 

32. அதற்கு அவர்: நான் புசிப்பதற்கு நீங்கள் அறியாத ஒரு போஜனம் எனக்கு உண்டு என்றார்.

34. இயேசு அவர்களை நோக்கி: நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது.

மாம்சீக உணவில்லாமல் அந்த உணவு தான் நிச்சயம் அவருக்கு நியாயபிரமானதையும்,தீர்க்கதரிசனங்களையும் நிறைவேற்ற இந்த பூமியில் பெலம் தந்திருக்கவேண்டும்!! ஆகவே தான் யேசுவாகிய அந்தத் மெய்யான போஜனம், நமக்கு ஜீவனுண்டாகவும் அது பரிபூரணப்படவும் காரணமானார் !!!

நாமும் கூட தேவசித்தம் செய்தலை இந்த பூமியில் உணவாகக் கொள்ளும்போது அவரது சாயலைபெற்று பூமியில் மனிதபலதொடே அல்லாமல் தேவபெலதொடே கிரியை நடப்பிக்கமுடியும் - ஆமென் 

 

தேவனுக்கு மகிமை உண்டாகுக!!!



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard