உடைந்துபோன பாத்திரம் நான் காயங்களோடு நிற்கின்றேனே நீர் இல்லா உலகில் யாருண்டு - என்னை ஆற்றிட தேற்றிட யாருண்டு -2
மாம்ச எண்ணங்கள் ஈர்த்ததால் உம் கிருபை அன்பை இழந்தேனே இன்று என் குறைகளை உணர்ந்துள்ளேன் தயவாய் என்னை ஏற்றுக்கொள்ளும் இரவு முழுவதும் அழுகின்றேன் செய்த தவறை உணர்ந்துள்ளேன் உம் பெலத்தால் என்னை இடைகட்டும் -உந்தன் பாதை நடக்க தயை செய்யும்.
வியாதியின் பயங்கள் மேற்கொள்ளுதே மரண இருளோ ஆட்கொள்ளுதே வேதத்தில் காணும் அற்புதங்கள் என் ஜெபம் மூலமும் நடக்குமோ என் ஜீவனுள்ள நாட்களெல்லாம் ஜீவிக்கிற தெய்வம் நீர் என்பேன் நிச்சயம் சாட்சியாய் வாழுவேன் உம் அன்பின் சின்னமாய் மாறுவேன்
முயற்சி தோல்வியில் முடிந்ததால் கதவுகள் எல்லாம் அறைந்ததால் உறவுகள் என்னை வெறுத்ததே தனிமையில் நான் நிற்கின்றேனே சோர்ந்து போய் நான் அழுகின்றேன் பெலனில்லாமல் தவிக்கின்றேன் நான் எதிர்பார்க்கும் முடிவை நீர் எனக்காய் துவங்கி வைப்பீரே