அன்பரின் நேசம் பெரிதே அதை நினைந்தே மகிழ்வோம் (2)
(1)
உலகத் தோற்றம் முன்னமே உன்னத அன்பால் தெரிந்தாரே இந்த அன்பு ஆச்சரியமே இந்த இகத்தில் வேறு இல்லை
(2)
அன்பின் அகலம் நீளமும் ஆழம் உயரம் அறிவேனோ கைவிடாமல் காக்கும் அன்பு தூக்கியெடுத்து சேர்க்கும் அன்பு
(3)
பாவச் சேற்றிலெடுத்தென்னைசாபமெல்லாம் தொலைத்தாரேதூய இரத்தம் சிந்தி மீட்கதூய்மையானேன் தேவ அன்பு