என்ன கொடுப்பேன் நான் உமக்கு என்ன கொடுப்பேனோ ? என்னைத் தேடிவந்த தெய்வம் நீரல்லோ ? என்ன கொடுப்பேன், நான் என்ன கொடுப்பேன் ?
(1)
ஆபேலைப் போல் மந்தையின் தலையீற்றையோ நோவாவைப் போல் தகனபலியினையோ ஆபிரகாமைப் போல் தன் ஒரே மகனையோ என்ன கொடுப்பேன், நான் என்ன கொடுப்பேன் ?
(2)
ஞானியாகப் பிறந்திருந்தால் ஞானத்தைக் கொடுப்பேன் ஆயனாகப் பிறந்திருந்தால் மந்தையைக் கொடுப்பேன் தூதனாக இருந்திருந்தால் வாழ்த்து கூறுவேன் என்ன கொடுப்பேன், நான் என்ன கொடுப்பேன் ?
(3)
சிறு உள்ளம் தருகின்றேன் நீர் தங்கிட பரிசுத்தமாய் மாற்றிட நீர் வாருமே என்னையே நான் தருகின்றேன் உம் மகிமைக்கே என்னைக் கொடுப்பேன், நான் என்னை கொடுப்பேன் ?
என்னையே நான் தருகின்றேன் (2) என்னைத் தேடிவந்த தெய்வம் நீரல்லோ ? என்னைக் கொடுப்பேன், நான் என்னைக் கொடுப்பேன் ?
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)