மழைக்காலங்களில் வானத்தில் மின்னல் கீற்றுகள் தோன்றுகின்றன. வான்வெளியில் மின்சாரத்தின் வெளிப்பாடே மின்னல் என அழைக்கப்படுகிறது. மேகங்களிலுள்ள அணுக்கள் மின்னூட்டம் பெற்று, எதிர் மின்னூட்டத்தால் ஈர்க்கப்படும்போது வெளியாகும் மின்சாரப் பாய்ச்சலே மின்னலாகிறது.. இந்த மின்சார பாய்ச்சல் என்பது மின்காந்த கதிர்வீச்சாகும், மின்னலின் வேகம் ஏறக்குறைய மணிக்கு 36 ஆயிரம் கிலோமீட்டர் தூரமாக உள்ளது. வானத்தில் இரு வேறு சக்தியுடைய மின்னூட்ட அணுக்கள் நிறைந்த (+'- charge ) மேகங்கள் உராயும் போது இப்படி ஏற்படுகிறது. ஆனால் அதை ஆடுமாடுகளால் முன்கூட்டியே உணர முடிகிறது. இதை தான் பரிசுத்த வேதாகமத்தில் யோபு 36:32-33-ல் தேவனே கூறியிருக்கிறார்...
32. அவர் மின்னலின் ஒளியைத் தமது கைக்குள்ளே மூடி, அது இன்னின்னதை அடிக்கவேண்டுமென்று கட்டளையிடுகிறார். 33. அதினால் அவர் செய்ய நினைக்கிறதையும், மந்தாரம் எழும்பப்போகிறதையும், ஆடுமாடுகள் அறியப்படுத்தும்.
ஆனால் 5 அறிவு உடைய ஆடுமாடுகளால் எப்படி இதை உணர முடிகிறது ? எப்படியென்றால் , வானத்தில் மின்னல் தோன்றும் முன் மேகங்கள் முதலில் மிகவும் மெதுவாக உரசி செல்லும் அப்போது அதில் இருந்து மிகவும் குறைவான அலைநீளம் (wavelength) உள்ள மின்காந்த கதிர்கள் உருவாகும். அதன் அலைநீளம் குறைவாக இருப்பதால் மனித கண்களுக்கு அது தெரியாது, ஆனால் ஆடுமாடுகளின் கண்களுக்கு அக் கதிர் மிகவும் துல்லியமாக தெரியும், ஏனென்றால் அவைகளின் கண்களில் வெண்படலம் மற்றும் கருவிழி (cornea & pupil) மிகவும் பெரிய அளவில் உள்ளது அதனால் அவைகள் குறைவான அலைநீளம் (wavelength) கொண்ட ஒளிக்கதிர்களை உள்வாங்க முடிகிறது. அது மட்டுமின்றி அவைகளின் கண்களுக்கு பின் பகுதியில் ஒளியை உள்வாங்கி பிரதிபலிக்கும் வடிவில் டேபிடம் (tapetum lucidum) என்ற ஒரு திரை உள்ளது இதுவே அதன் சென்சார்(sensor) ஆகும். இந்த திரை மனித கண்களில் இல்லை, இந்த டேபிடம் சென்சார் மூலம் ஆடுமாடுகளின் விழித்திரை (retina) மிகவும் சிறிய அலைநீளம் உள்ள ஒளி கதிர்களை கண்டுணர முடிகிறது. இதற்கு தேவனால் அருளப்பட்ட இந்த டேபிடம் திரை மனித கண்களை விட 130மடங்கு அதிகமாக ஒளிகளை பார்க்க உதவி செய்கிறது.. -)) முதலில் மெதுவாக உரசி சென்ற மேகங்கள் பூமியின் காற்றழுத்ததினால் மிகவும் வேகமாக உரசி செல்ல ஆரம்பிக்கிறது, அப்போது மிக பெரிய அளவில் மின்கதிர்கள் புறப்படும் அப்போது மட்டும் தான் மனித கண்களுக்கு அது தெரியும்! ஆனால் அந்த கதிர் வீச்சு சிறிய அலை நீளத்தில் இருக்கும் போதே அதை பார்த்து விலங்கினங்கள் உஷாரகிவிடும்.
இதை தான் கர்த்தர் யோபுவின் புத்தகத்தில் கூறுகிறார் ஆடுமாடுகள் மனிதனுக்கு முன்பாகவே மின்னலின் திசையை அறிந்து கொள்ளும். அதனால் தான் அவை மின்னலின் எதிர் திசையில் வெறித்து ஓடும்.. அப்போது தான் மனிதன் புரிந்து கொள்கிறான் மழைவர போகிறது வான்வெளியில் மாற்றம் ஏற்படுகிறது என்று!! ஆடுமாடுகளையும் ஞானமாய் படைத்து தேவன் அதன் கண்களில் இவ்வித சக்தி வாய்ந்த சென்சாரை வைத்து உள்ளார்..என்பது ஆச்சரியம்!! இந்த ஆராய்ச்சி இதோடு முடியவில்லை இந்த இரு வசனங்கள் பின்னே அறிவியலையும் அறியாமையாக்கும் கர்த்தராகிய இயேசுவின் மகத்துவம் மிக்க செயல் உள்ளது என்று விசுவாசிக்கிறேன். விரைவில் அதையும் என்னவென்று அறிந்து கொண்டு சில ஆதாரங்களோடு பதிவிடுகிறேன்.. இந்த வசனத்தை ஆராய்ச்சி செய்ய கொடுத்த அருமை போதகர் பால் பிரபாகர் அவர்களுக்கு மிக்க நன்றி!