Samuel Churchillஇலவச அரிசியை காசுக்கு விற்கக்கூடாது என எந்தச் சட்டம் சொல்கிறது? அதை உங்களால் காட்டமுடியுமா? ///
ரேஷன் அரிசி கடத்தல் குறித்த செய்தி ? நான் உங்களுக்கு ஒரு சவால் வைக்கிறேன்... ஒரு கிலை ரேஷன் அரிசியை உங்களால் எத்தனை ரூபாய்க்கு விற்றுத்தரமுடியும் ? அதை விற்று ஒரு டீ குடிக்கமுடியுமா ? அதை சொல்லுங்கள் முதலில். ஏன் இப்படி நேரத்தை வீணாக்கிக்கொண்டு ?
Samuel Churchill ஹலோ என்னிடமிருக்கும் பொருளை நான் என் இஷ்டப்படி யாருக்கும் கொடுக்கமுடியும். இலவசமாகப் பெற்ற ஒரு பொருளை காசுக்குக் கொடுத்தால் மட்டுமே தவறாகும். மூக்கு நுழைத்த இடம் தவறான இடமாகும். கிளம்புங்க.
Gnana Piragasam //ஹலோ என்னிடமிருக்கும் பொருளை நான் என் இஷ்டப்படி யாருக்கும் கொடுக்கமுடியும். இலவசமாகப் பெற்ற ஒரு பொருளை காசுக்குக் கொடுத்தால் மட்டுமே தவறாகும். மூக்கு நுழைத்த இடம் தவறான இடமாகும். கிளம்புங்க.//
ஹலோ, நான் சொன்னது தவறானால் என்மீது சட்டப்படி நடவடிக்கை எடுங்க. அதையும்தான் பார்த்துவிடுவோமே, யாருடைய மூக்கு அறுபடுகிறது என.
Samuel Churchill எதிராளியின் காமெண்ட்டை நீக்குவதும் ப்ளாக் செய்துவிட்டு ஓடிப்போவதும் உங்களுடைய வழக்கம் தானே ? போகும் முன்பதாக உங்கள் தவறை ஒப்புக்கொண்டு விலகினால் நல்லது. சட்டநெறியும் உண்டு... தார்மீக நெறியும் உண்டு. இவ்விரண்டின் அடிப்படையிலும் நானோ அல்லது எனக்கு ரேஷன் அரிசியை இலவசமாக காணிக்கையாகக் கொடுத்தவர்களோ எந்த குற்றமும் செய்யவில்லை என்பதை மீண்டும் வலியுறுத்தி விடைபெறுகிறேன். இதையும் நீக்கினால் நீக்கிக்கொள்ளவும்.நன்றி.
Gnana Piragasam //ரேஷன் அரிசியை இலவசமாக வாங்கும் ஒருவர் அதை தன் இஷ்டம்போல பயன்படுத்த அவருக்கு உரிமை உண்டு.//
ரேஷன் அரிசி கொடுப்பதன் நோக்கம், சம்பந்தப்பட்ட குடும்பத்தார் அதன்மூலம் பயன்பெற வேண்டும் என்பதே! இந்த நோக்கத்தைச் சிதைக்கும் வண்ணம் எது செய்தாலும் சட்டப்படி தவறே!
Samuel Churchill Gnana Piragasam நான் சொல்றதை நீங்கள் ஏற்கவேண்டிய அவசியமில்லை. சட்டத்தை மதித்து நடந்தால் போதும். ///
நான் சட்டத்தை மீறியதாக நீங்கள் நிரூபிக்காமல் சறுக்கியதை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டியிருக்கிறேன். நீங்கள் நேர்மையாளராக இருந்தால் அதனை இணைத்து பதிலளித்திருக்கவேண்டும். நல்லது.
Gnana Piragasam //நீங்கள் நேர்மையாளராக இருந்தால் அதனை இணைத்து பதிலளித்திருக்கவேண்டும். நல்லது.//
அதான் பதில் சொல்லிவிட்டேனே, ....குடும்ப அட்டையை குடும்பத்தார்தான் பயன்படுத்த வேண்டும் என்றால், அது குடும்ப அட்டை மூலம் கிடைக்கிற எல்லா பொருட்களுக்கும் சேர்த்துதான்..
அரசாங்கம் ஒவ்வொரு குடும்பத்தாருக்கும் தனித்தனியே குடும்ப அட்டை வழங்கி, அந்த அட்டைக்கு இலவச அரிசியும் கொடுப்பது, அக்குடும்பத்தினரின் பயன்பாட்டுக்கேயொழிய, மற்றவர்களுக்கு அள்ளி இறைக்க அல்ல. பொது அறிவுள்ள (common sense) அனைவரும் இதைப் புரிந்துகொள்ளுவார்கள்.
இன்னும் விளக்கம் வேண்டுமானால், ஒரு குடும்பத்தின் நபர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில்தான் பொருட்களின் அளவு தீர்மானிக்கப்படுவது ஏன் என்பதைச் சிந்தித்துப் பார்க்கவும்.
Gnana Piragasam எங்கள் குடும்பத்தில் முன்பு 4 பேர் இருந்தனர் (நான், மனைவி, மகன், மகள்). அப்போது 4X1/2 என 2 கிலோ சர்க்கரை கொடுத்தார்கள். எனது பிள்ளைகள் திருமணமாகிச் சென்றபின்னர், அவர்களின் பெயர்களை எனது குடும்ப அட்டையிலிருந்து நீக்கிவிட்டேன். அதன் பின் 2X1/2 என 1 கிலோ சர்க்கரை மட்டுமே கொடுக்கின்றனர்.
அந்தந்த குடும்பத்தேவைக்குத்தக்கதான் பொருள் வழங்கப்படுகிறது என்பதற்கு இதைவிட வேறு ஆதாரம் வேண்டுமா என்ன?
Gnana Piragasam கட்டுப்பாட்டு விலையில் அல்லது இலவசமாக ஒரு குடும்பத்துக்கு எவ்வளவு பொருள் கொடுக்கவேண்டும் என அரசாங்கம் தீர்மானிக்கையில், அக்குடும்பத்தின் எண்ணிக்கையைத்தான் criteria வாக எடுக்கிறது. இதிலிருந்து தெரியவில்லையா, ரேஷன் பொருட்கள் முழுக்க முழுக்க சம்பந்தப்பட்ட குடும்பத்தின் பயன்பாட்டுக்கு மட்டுமேயானது என்பது?
ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளியன்று என்னை அழைக்கும் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தினர் குடும்ப ஜெபம் முடிந்ததும் இப்படி என்னை போஷிக்கிறார்கள். அவர்களுக்கு என்ன கைம்மாறு செய்வேனோ ? போதாக்குறைக்கு ஒவ்வொரு மாதமும் ரேஷன் அரிசியை எப்படியோ சேகரித்து சுமார் 20 கிலோ அளவுக்கு காணிக்கையாகக் கொடுத்து அனுப்புவார்கள்.
- மேற்காணும் பதிவில் சம்பந்தமே இல்லாமல் மூக்கை நுழைத்த ஞானப்பிரகாசம் எனும் கிறுக்கன் இப்படி கதையை வளர்த்தார்...
அரசாங்கம் ரேஷனில் கொடுக்கிற பொருட்கள் யாவும் அந்தந்த குடும்பத்தின் உபயோகத்திற்கு மட்டுமே. அப்பொருட்களை பிறருக்குக் கொடுக்க அவர்களுக்கு உரிமையில்லை; அப்படி கொடுப்பது சட்டவிரோதமுமாகும்.
தங்களுக்குத் தேவையில்லை எனில், பொருட்களை வாங்காமல் இருந்துகொள்ள வேண்டியதுதான்.
ரேஷனில் காசு கொடுத்து பொருள் வாங்கி, அதை மற்றவர்களுக்கு இலவசமாகக் கொடுத்தாலாவது, அதைச் சற்றாகிலும் சகிக்கலாம். ஆனால் இலவசமாக வாங்குகிற ரேஷன் அரிசியை மற்றவர்களுக்குக் கொடுப்பது, அரசாங்கத்திற்கும் சகமனிதருக்கும் செய்கிற பெருந்துரோகமாகும்.
எப்படி வீட்டு உபயோகத்திற்கான எரிவாயுவை வியாபாரத்திற்குப் பயன்படுத்துவது குற்றமோ, அப்படியே ஒரு குடும்பத்திற்கான இலவச அரிசியை மற்றவர்களுக்குக் கொடுப்பதும் குற்றம்.
ராணுவ வீரர்களுக்கு வரிச்சலுகையில் கொடுக்கப்படும் பொருட்களை, மற்றவர்களுக்குக் கொடுப்பதும் குற்றமே.
ஆனால் இவையெல்லாம் குற்றமென நிதானித்தறியும் அறிவுகூட இவர்களுக்கு இல்லாமற்போனது எப்படி என்பதுதான் ஆச்சரியமாயுள்ளது.
பிற குடும்பத்துக்கு வழங்கப்படும் இலவச அரிசியை வாங்குகிற இந்த சாமுவேலிடம் குடும்ப அட்டை இல்லையா? அதன் மூலமும் தனது குடும்பத்துக்கான இலவச அரிசியை சட்டபூர்வமாக உரிமையோடு வாங்கலாமே! அதை ஏன் இவர் செய்யவில்லை?
கிறிஸ்தவர்களுக்கு வேதநீதியும் தெரிவதில்லை, அரசாங்க நீதியும் தெரிவதில்லை, சமுதாய நீதியும் தெரிவதில்லை. தெரிந்தாலும் அவற்றின்படி நடக்க நினைப்பதில்லை.
ம் .. ம் .. எல்லாவற்றிற்கும் ஒரு நாள் முடிவு உண்டு. அப்போது:
இதோ, சூளையைப்போல எரிகிற நாள் வரும்; அப்பொழுது அகங்காரிகள் யாவரும் அக்கிரமஞ்செய்கிற யாவரும் துரும்பாயிருப்பார்கள்; வரப்போகிற அந்த நாள் அவர்களைச் சுட்டெரிக்கும்; அது அவர்களுக்கு வேரையும் கொப்பையும் வைக்காமற்போகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். (மல்கியா 4:1)
Samuel Churchillபெரியவரே தாங்கள் கட்டம்போட்டு காட்டியிருப்பது பொருள் அல்லவே. ரேஷன் கார்டு என்பதை கவனிக்கவும். அடுத்து அரசு கொடுக்கும் பொருளை அவரவரே பயன்படுத்தவேண்டும் என்பது மரபு தானே ஒழிய அது சட்டமல்ல. மிக்ஸி க்ரைண்டர் டிவி லாப்டாப் ஆடு ஆட்டுக்குட்டி ஆகியவற்றின் நிலைமையை சற்று யோசிக்கவும். ரேஷன் அரிசியை பெறுபவர் மட்டுமே சாப்பிடவேண்டும் என்ற சட்டம் ஏதும் இருந்தால் அதை சொல்லவும். ஐயா இதெல்லாம் உங்களுக்கு பிரச்சினையில்லை... உங்களைப் போன்றவர்களை நாங்கள் இந்த இணைய உலகுக்கு தோலுரித்து காட்டினோமோ அந்த பகைமை உணர்வே இதில் தெரிகிறது.நன்றி.
Samuel Churchillதிரு.ஞானப் பிரகாசம் அவர்களை ஆரம்பத்திலிருந்தே பெரியவர் என்று விளிப்பது என் வழக்கம்... ஆனால் அவர் இ(எ)ப்போதும் சிறுபிள்ளைத்தனமாகவே நடந்துகொள்ளுகிறார். உபதேசரீதியில் நான் அவரை இணையத்தில் பகிரப்படுத்திய எரிச்சல் என்மீது அவருக்கு பகைமை உணர்ச்சியை தேங்க வைத்திருப்பது மட்டுமே இதிலிருந்து தெரிகிறது. நான் எனது அனுபவ சாட்சியாகக் குறிப்பிட்ட ரேஷன் அரிசி விஷயத்தைக் குற்றஞ்சாட்டி இப்படி கட்டங்கட்டி காட்டுகிறார். ஆனால் இது ரேஷன் கார்டு பயன்பாட்டைக் குறித்த விதிமுறைகள் என்பதை அவர் அறிந்திருக்க வில்லை போலும்... ஐயோ, பாவம் !!!
Gnana PiragasamMr Samuel Churchill, ஒன்று சுயபுத்தி வேண்டும், அல்லது சொல்புத்தி வேண்டும். இரண்டும் இல்லாத மூடரான உங்களுக்காகப் பரிதாபப்படத்தான் முடியும்.
Mr Samuel Churchill, ஒன்று சுயபுத்தி வேண்டும், அல்லது சொல்புத்தி வேண்டும். இரண்டும் இல்லாத மூடரான உங்களுக்காகப் பரிதாபப்படத்தான் முடியும்.
மற்ற விஷயங்களுக்கும் இப்பதிவுக்கும் முடிச்சி போடுவதிலிருந்தே தெரிகிறது, உங்களின் அற்பப்புத்தி இன்னமும் போகவில்லை என்பது.
குடும்ப அட்டையை குடும்பத்தார்தான் பயன்படுத்த வேண்டும் என்றால், அது குடும்ப அட்டை மூலம் கிடைக்கிற எல்லா பொருட்களுக்கும் சேர்த்துதான்.
நியாயசிந்தை இல்லாத உங்களுக்கு இதெல்லாம் புரிந்திருக்க நியாயமில்லை. இனிமேல் எனது பதிவு சம்பந்தமாக மட்டும் எழுதவும். பதிவுக்கு சம்பந்தமில்லாத விஷயங்களை இனி எழுதினால் அப்பதிவு நீக்கப்படும்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)