அற்புத பானம் : எளிய முறையில் நாமே தயாரித்து பருகக்கூடிய பானம். இந்த பானத்தை குடித்தால் உண்டாகும் நன்மைகள் - உடலில் கேன்சர் உருவாக காரணமாக உள்ள செல்களை வளர விடாமல் தடுக்கும். கல்லீரல், சிறுநீரகம், கணையம் ஆகிய உறுப்புகள் தொடர்பான நோய்களைத் தடுக்கும். நுரையீரலைப் பலப்படுத்தி மாரடைப்பையும் அதிகமான இரத்தக் கொதிப்பையும் கட்டுப்படுத்தும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும். மலச்சிக்கலை அகற்றும். மாதவிடாய் வலியினை குறைக்கும். தூசிகளால் ஏற்படும் காலை நேரத் தும்மல் மற்றும் அது தொடர்பாக வரும் பிரச்னைகளைத் தீர்க்கும். இதை அருந்துவதால் பக்கவிளைவுகள் எதுவுமில்லை. உடல் எடை குறைப்பிற்கு பயன்படுத்தலாம். இரண்டு வாரங்கள் தொடர்ந்து பயன்படுத்தினால் நமது உடலில் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளதை உணரலாம். இதை தயாரித்த உடனே குடித்து விட வேண்டும் என்பதில் மட்டும் கவனமாக இருக்க வேண்டும். தேவையான பொருட்கள் : காரட்-1, பீட்ரூட்-1, ஆப்பிள்-1. இந்த மூன்றையும் சுத்தமாக கழுவியதும் தோல் சீவாமல் சிறு துண்டுகளாக்கி சிறிது தண்ணீர் சேர்த்து மிக்சியில் போட்டு அரைக்கவும். பின் வடிகட்டாமல் அப்படியே குடிக்க வேண்டும். சற்று சுவை வேண்டுவோர் சிறிது எலுமிச்சம் பழச்சாற்றை சேர்த்துக் கொள்ளலாம். இதை 4 பேர் அருந்தலாம். எப்போது குடிப்பது : சாறு எடுத்த உடனே காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதனை அருந்தியதும் ஒரு மணி நேரம் கழித்து காலை உணவு உட்கொள்ளலாம். தினமும் இரண்டு வேளை பருகலாம். அதாவது காலையிலும், மாலையில் ஐந்து மணிக்கு முன்பாகவும் பருகலாம். தமிழாக்கம் செய்தது. எஸ்.பழனிச்சாமி, 95667 99911, ஸ்பைசஸ் இந்தியா, செப்டம்பர் 2014. தகவல்: "பூர்வீகம் ஆய்வு அறக்கட்டளை' இது புதுச்சேரியில் நடைபெற்று வரும் பாரம்பரிய மக்களை ஒருங்கிணைத்து அவர்களிடையே தகவல் பரிமாற்றத்திற்கான பாலமாக செயல்பட்டு வரும் இயக்கம்.