>|| முகம்மது நபி "நீங்கள் எவரும், 'என் அடிமை, என் அடிமைப் பெண் " என்று சொல்லாதீர்கள், "என் பணியாள், என் பனிப்பெண்" என்று சொல்லுங்கள்" என்றாராம். என்னய்யா பெரிய ஸ்தானம் கொடுத்து கௌரவிக்கப்பட்டது? அடிமையோம், பணியாளோ, இட்ட கட்டளையை நிறைவேற்ற வேண்டும். அது தானே. கட்டளை எதுவானாலும் இருக்குமல்லவா? அது தான் வஹாபியே சொல்லி விட்டாரே, " என் மனைவியின் உரிமையாளன் நான்." என்று. உரிமை எதற்கு? பொருளுக்குத் தானே. வஹாபி, சொல்லும், செயலும் ஒன்றேயான சிந்தனை கொண்டவர். கஷ்டமென்னவென்றால், அது ஏழாம் நூற்றாண்டு அராபிய சிந்தனை. 2009 தமிழ் நாட்டில்கூட "என் வாழ்க்கைத் துனைவி" என்று சொல்லமாட்டேன் என்கிறார். இது தானே பெண் என்றாலே போகப் பொருள் என்ற மனக் கட்டமைப்பு.
முகம்மது நபி யூத இனத் தலைவரின் மகள் ச·பியாவை முதலில் திய்யா தனக்கு வேண்டும் என்று எடுத்துக்கொள்ள, நபியின் தோழர், "ச·பியா உங்களுக்குத் தான் ஏற்றவள், மற்றவர்களுக்கு அல்ல" என்று சொல்ல, முகம்மது நபி, ச·பியாவைத் திரும்ப அழைத்து வரச்செய்து, அவளை மறுபடியும் ஒரு தடவை நன்றாகப் பார்த்து, தோழரின் தேர்வை மெச்சி, ச·பியாவை தனக்கு என்று எடுத்துக் கொள்கிறார். இது, நான் வஹாபியின் வாக்குமூலத்திலிருந்து எடுத்துக் கொள்கிறேன். சரி. அப்படி யென்றால் இது ஒரு தலைவன் கைப்பற்றிய பொருளில் தனக்கு வேண்டியதை எடுத்துக்கொள்ளும் முன்னுரிமையை, கைது செய்யப்பட்டவர்கள் மனிதர்கள் அல்ல, "என் பணியாட்கள்" என்பதும், அதிலும் இளம் பெண்கள், தலைவனுக்கு முதல் உரிமை உள்ள பொருள் என்பதும் தானே ருதுவாகிறது? திய்யாவோ, முகம்மது நபியோ, அந்தப் பெண்ணின் விருப்பம் என்ன என்பதைக் கேட்டார்களா? இல்லை. ///