Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஒரு குற்றம் கூட செய்யாத ஒரே ஒரு தெய்வம் - அகத்தியன்


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 330
Date:
ஒரு குற்றம் கூட செய்யாத ஒரே ஒரு தெய்வம் - அகத்தியன்
Permalink  
 


ஒரு குற்றம் கூட செய்யாத
ஒரே ஒரு தெய்வம் இயேசு மட்டும் தான்
தன் எதிரிகளுக்காய் உயிரையே கொடுத்த
ஒரே ஒரு தெய்வம் இயேசு மட்டும் தான் 

கோரஸ் : இயேசு மட்டும் தான் 

எங்கும் நிறைந்த எல்லாம் அறிந்த எல்லாம் வல்ல தெய்வம்
உலகத்தைப் படைத்தவர் வணக்கத்துக்குரியவர் ஒரே ஒரு தெய்வம்
பச்சைத் தண்ணியை பழரசமாக்கி பரவசப்படுத்திய தெய்வம்
மேல்ஜாதி கீழ்ஜாதி வித்தியாசம் பார்க்காத ஒரே ஒரு தெய்வம்

பாவம் இல்லாத மனிதரின் இதயத்தில் வாழும் சுத்த தெய்வம்
பாவத்தை மன்னிக்கும் அதிகாரமுடைய ஒரே ஒரு தெய்வம்
இலவசமாக நோயை போக்கி பேயை ஓட்டும் தெய்வம்
கொதித்தெழுந்த கடலைக் கூட அடக்கி நிறுத்திய தெய்வம்

செத்துப்போன உடலுக்குள்ளே உயிரை வைத்த தெய்வம்
ஆதரவில்லாத அனாதைகட்கு அடைக்கலமான தெய்வம்
கடலின்மீது தரையைப் போல நடந்த அதிசய தெய்வம்
பூட்டப்பட்ட வீட்டுக்குள்ளே கடந்துவந்த தெய்வம்

சிலுவையில் தன்னை அறைந்தவரைக் கூட மன்னித்த பெரிய தெய்வம்
மரித்தபின்பு உயிரோடெழுந்த ஒரே ஒரு தெய்வம்
முப்பத்துமூன்று கோடிகளுக்குள் இப்படி இல்லை ஒரு தெய்வம்
கையெடுத்து கும்பிடுவதற்கு பாத்திரமான தெய்வம்

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard