பல்லவி உனக்கு நிகரானவர் யார் ? - இந்த உலக முழுவதிலுமே .
அனுபல்லவி தனக்கு தானே நிகராம் தாதை திருச் சுதனே மனுக்குலம் தன்னை மீட்க மானிடனாக வந்த -உனக்கு
சரணங்கள் 1.தாய் மகளுக்காக சாவாளோ - கூடப் பிறந்த தமையன் தம்பிக்காய் மாய்வானோ? நேயன் நேயர்க்காய் சாவானோ? தனதுயிரை நேர் விரோதிக்காய் ஈவானோ? நீ இம் மண்ணுலகில் நீசர்கட்காக வந்து காயும் மனமடவர்க்காக மரித்தாய் சுவாமி .- உனக்கு .
2. கந்தை உரிந்தெறிந்தனை - நீதியின் ஆடை கனக்க உடுத்துவித்தனை, மந்தையில் சேர்த்துவைத்தனை , கடும் வினைகள் மாற்றி எந்தனைக் காத்தனை; கந்த மலர்ப் பாதனே ,கனக ரத்ன மேருவே , சிந்தை உவந்து வந்த தியாக ராசனே , சுவாமி - உனக்கு