ஒரு இளவரசன் வேட்டைக்கு சென்றான். அவன் வழிதவறி வேறு நாட்டின் எல்லைக்குள் புகுந்து விட்டான். அந்த நாட்டின் காவலாளிகள் அவனைப் பிடித்து சிறையில் அடைத்து விட்டார்கள்.
அந்த நாட்டின் இளவரசிக்கு பிறந்த நாள் வந்தது, சிறையில் உள்ள கைதிகளுக்கு விருந்து வைக்கப்பட்டது.
விருந்தை உண்ட இளவரசன் கண்கலங்க ஆரம்பித்தான். இதை கண்ட ராஜா ஏன் அழுகிறாய் என்று கேட்டான்?.
நானும் இளவரசன்தான் என் பிறந்த நாளையும் என் தந்தை இதைபோல் விருந்து வைத்துதான் கொண்டாடுவோம், அந்த ஞாபகம் வந்து விட்டது என்றான்.
அப்படியா என கேட்ட ராஜா நீ இப்போ என்ன சாப்பிடுகிறாய் என்று கேட்டார்?. கோழிகறி என கூறினான்! நீ உண்மையில் இளவரசன் என்றால் கோழியில் எந்தப் பகுதி ருசியானது என கேட்டார்?. கைதியாக இருந்த இளவரசன் கோழியில் அதன் தோல் பகுதியே சுவையானது என்று கூறினான்.
இதை கேட்ட ராஜா நீ உண்மையில் இளவரசன்தான் என்று கூறி அவனை விடுதலை செய்தார்.
இதைப்பார்த்துக் கொண்டிருந்த மற்றொரு தந்திரகார கைதியும் இளவரசன் கூறியது போலவே கூறினான்!. அவனிடம் ராஜா கேட்டார், நீ இப்போது என்ன சாப்பிடுகிறாய்?.
கைதி முயல் கறி என்றான், முயலில் எந்தப் பகுதி ருசியாக இருக்கும் என்று ராஜா கேட்டார், கைதியும் ரொம்ப கூலாக இளவரசன் கூறியது போலவே தோல் என்று கூறினான்.
கைதி பொய் சொன்னதுக்காக இன்னும் தண்டனையை அதிகப்படுத்தினார். ஏனெனில் முயலை தோலோடு சமைக்க முடியாது..!