மாற்றம் வேண்டி புரட்சிசெய்த மார்ட்டின் லூதர் நினைவாகக் கட்டப்பட்ட திருச்சபைக்குள் இஸ்லாமிய தொழுகை நடக்கிறது. அங்கே வைராக்கியத்துடன் எழுந்த ஒரு சகோதரி அல்லா கடவுளல்ல, இயேசுவே ஆண்டவர், பொய்களை நம்பாதீர், வஞ்சிக்கப்படாதீர் என்று கோஷமிட்ட நிலையில் வெளியேற்றப்பட்டிருக்கிறார். கிறிஸ்துவுக்கு விரோதமான இமாம் வெளியேற்றப்படாமல் விசுவாசியான தான் தனது திருச்சபையைவிட்டு வெளியேற்றப்பட்டது குறித்து அந்த சகோதரி வியக்கிறார். மாற்றம் விரும்பும் சமுதாயத்தின் இலக்கு ஏமாற்றமாக இராதிருந்தால் சரி.