”மீதியான திருச்சபை” என்றொரு பக்கம். அதனை திரு.விஜயகுமார் பக்கத்தில் கவனித்து உள்சென்று பார்க்கையில் அதிர்ச்சிகரமான முறையில் பல புதிய நண்பர்கள் அவர்களோடு ஐக்கியமாயிருந்தார்கள். அண்மையில் நல்ல பதிவுகளைக் கொடுத்துவரும் அவர்கள் அங்கு தொடர்பிலிருப்பது உள்ளபடியே என்னை குழப்பியது. பிறகு ஒவ்வொரு பக்கத்தையும் ஓரளவுக்கு பார்த்து நிதானித்ததில் இந்த ”மீதியான திருச்சபை” எனும் ஐடிக்கு சொந்தக்காரர் ஒரு ஏழாம்நாள்காரர் என்பது தெரியவந்தது.இதனை சற்றும் பொருட்படுத்தாது தனது திருச்சபை விரோதப் பதிவுகளுக்கு லைக் வாங்கினால் போதும் என்ற ஒரே நோக்கத்தில் பலர் ஓடுவதால் அப்படிப்பட்டவர்கள் நிழலில்தானே இந்த களைகளும் வளர்கிறது. இன்னாருடன் தொடர்பிலிருந்தால் அது பெருமையும் கௌரவமும் என்று சிலர் நினைத்து திட்டமிட்டே செயல்படுகிறார்களோ என்று தோன்றுகிறது. யாரையும் பகைக்கக்கூடாது, மாற்றுக் கருத்து இருந்தாலும் அவரை பகைக்கக்கூடாது, அவருடைய கருத்தையும் நாம் மதிக்கவேண்டும், நட்பே முக்கியம், நன்மதிப்பே பிரதானம் என்று சிலர் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் ஃபேஸ்புக் என்பது அவர்களைப் பொறுத்தவரையிலும் ஜஸ்ட் டைம் பாஸிங், அவ்ளோதான். எனவே அவர்கள் எதையும் சீரியஸாக எடுத்துக்கொள்ளாமல் எல்லோருடனும் அரட்டையடித்துக்கொண்டு ஜாலியாக இருக்கவே விரும்புகிறார்கள். அது அவர்கள் பாணியாக இருக்கலாம், இருக்கட்டும்.
ஆனால் நமக்கென்று சில கொள்கைகளையும் கட்டுப்பாடுகளையும் வைத்திருக்கிறோம். அதன்படி கையில் பைபிளை வைத்துக்கொண்டு மாறுபாடு செய்யும் யாருடனும் நமக்கு நட்பு கிடையாது. அவ்வாறு குழப்பம் விளைவிப்போருடன் கள்ள உறவு வைத்திருப்பவரையும் எமது வட்டத்தில் அனுமதிக்கமுடியாது. இதினிமித்தமே நாம் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறோம். அதுபற்றி நமக்கு கவலையில்லை. எமது பதிவுகள் அனைத்தும் பொதுவிலே பதிக்கப்படுவதால் எமது படைப்புகளை வாசிக்க தடையில்லை. ஆனாலும் நண்பர்கள் மட்டுமே பின்னூட்டமிடமுடியும். ஆக, இரண்டு இடத்திலும் தொடர்புடையோரைவிட்டு நாம் விலக விரும்புகிறோம். ஏனெனில் மாறுபாடான உபதேசம் உடைய ஒருவரோடு நாம் நட்பில் இருந்து நமது படைப்புகள் டாக் செய்யப்பட்டு அங்கே பகிரப்பட்டாலோ அல்லது அவர்கள் நமது படைப்புகளில் லைக் இட்டாலோ தேவையற்ற குழப்பங்கள் உண்டாகும். எனவே சிலசமயம் நாம் கடினமாக நடந்துகொள்ளவேண்டியிருக்கிறது. இப்படி எத்தனையோ அனுபவங்களையும் எதிர்ப்புகளையும் இன்னல்களையும் தூஷணங்களையும் மிரட்டல்களையும் சந்தித்து வந்தாலும் தனிமையில் நின்றாலும் நாம் ஒருபோதும் சோர்ந்துபோகிறதில்லை. ஏனெனில் நாம் இங்கே உலகப் பிரகாரமான நட்புக்காக இல்லை, சத்திய பரனுக்காகவும் அவர்தம் அருள்மொழிக்ககாவுமே நிற்கிறோம்.
இப்போதைக்கு நம்மிடம் சிக்கியிருக்கும் நபருடைய முகப்பை இங்கே பதித்திருக்கிறோம். அதில் எழுதப்பட்டிருக்கும் வார்த்தைகளை கவனித்தாலே மாறுபாடு விளங்கிவிடும். அது இதுதான், “பத்து கட்டளை ஒழியவில்லை, அதை இயேசுவின் மரணம் காட்டுகிறது.” இதன் நோக்கம் நான்காம் பிரமாணமான ஓய்வுநாளைப் பிரதானப்படுத்தி புதியவர்களை வஞ்சிப்பதே. இது நாம் ஏற்கனவே அறிந்த பழைய செய்தியே. இதில் புதினம் ஒன்றுமில்லை. 18-ம் நூற்றாண்டில் தலையெடுத்த இந்த இயக்கம் பல துருபதேசங்களுக்கு ஆரம்பமாக இருக்கிறது. இதிலிருந்தே அனைத்து கள்ள உபதேசங்களும் பரவியது. இவர்களையும் மார்மன்ஸ் எனும் இயக்கத்தையும் தவிர்த்து கடந்த 300 வருடங்களில் வேறு இயக்கம் தோன்றவில்லை. இவ்விரண்டு இயக்கங்களின் பாதிப்பு மற்ற எல்லா வேதப் புரட்டர்களிடமும் இருக்கிறது. எனவே ஏழாம்நாள்காரரை நாம் கடுமையாக எதிர்க்கிறோம்.எனவே அவர்களோடு தொடர்பிலிருக்கும் எமது 18 நண்பர்களும் விரைந்து அங்கிருந்து வெளியேற அன்போடு வேண்டுகிறேன். உங்கள் பதிவுகளையும் அந்த பக்கத்திலிருந்து நீக்கிவிட வேண்டியது.
**இப்படிப்பட்ட பிரித்தெடுத்தல் சீனாய் மலையின் அடிவாரம் முதலாக திருச்சபையின் எல்லா காலத்திலேயும் நடந்தே வந்திருக்கிறது. எனவே இது ஒன்றும் புதிதல்ல.
/// எனது Timeline ல் ரகசிய வருகை குறித்த பதில் இருக்கிறது., ///
பரிசுத்த வேதாகமத்தில் எல்லாம் இருக்கிறது. உங்கள் நம்பிக்கையின் ஆதாரம் என்ன அதை சொல்லுங்கள். என்னமோ ஸ்கூல் பையன் மாதிரி அங்கே இருக்கு இங்கே இருக்கு என்று சொல்லக்கூடாது.... ப்ளீஸ்.
மீதியான திருச்சபை முதலில் இந்த பதிவை நன்றாக படியுங்கள்.,அதில் நான் கேட்ட வேத பகுதிகளுக்கு நீங்கள் விளக்கம் தாருங்கள்,தெரியும் என்றால் எழுதுங்கள்,
/// வேதம் எல்லோருக்கும் ஒன்றுதான், இதில் வெளிநாட்டுகாரன், உள்நாட்டுகாரன் என்ற பேதம் எங்கே வந்தது, நீங்கள் வார்த்தைகளை சரியாக பயன்படுத்துங்கள் ///
ச்சும்மா ஜோக்கடிக்காதீங்க, மிஸ்டர். நீங்கள் எங்கிருந்து காப்பியடிக்கிறீங்க என்பது உங்கள் மனசாட்சிக்கே தெரியும்.
Yauwana Janam வேதம் ஒன்றாக இருந்தால் அதன் மக்களும் ஒன்றாகத் தான் இருந்திருப்பார்கள். வேதம் ஒன்றாக இருந்தும் அதில் பேதம் செய்து பேதைகளை வஞ்சிக்கும் குள்ளநரிகளை அடையாளம் காட்ட விரும்புகிறோம்.
மீதியான திருச்சபை நீங்கள் வேத ஆதாரத்தோடு எழுதுங்கள்.,நான் காத்திருக்கிறேன் சகோதரரே
Yauwana Janam இது உங்கள் பக்கம்... இங்கே உங்கள் நம்பிக்கையைப் பற்றி கேட்டுவிட்டு பதிலுக்காக காத்திருக்கிறேன். உங்களுக்காக வேண்டுமானால் ஒரு வசனத்தைப் போடுகிறேன்...
I பேதுரு 3:15 கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள்; உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்.
Yauwana Janam வேதம் ஒன்றுதான், ஆனால் அது எல்லோருக்கும் ஒன்றாக இருக்கிறதா ? இல்லை. காரணம் பேதம் செய்யும் கள்ளர்கள்.
மீதியான திருச்சபை நான் என் முடிவை முன்னே சொல்லியிருக்கிறேன், முதலில் என் பதிவில் கேட்ட கேள்விகளுக்கு விளக்கம் தாருங்கள்,
மீதியான திருச்சபை 1) தானியேல் 7ம் அதிகாரம் 2) தானியேல் 8ம் அதிகாரம் 3) 2300 ராப்பகல் செல்லும் பின்பு பரிசுத்தஸதலம் சுத்திகரிக்கப்படும்,...See More
Thumilan Jacob M இரகசிய வருகை என்று ஒன்று இல்லை என்பதே இந்த கள்ள உபதேசியின் கருத்து... 7ம் நாள் சபை ஆசாரிப்பாளர்களின் ஒட்டு மொத்த உபதேசமும் இது தான். விசுவாசிகள் கர்த்நருடைய வருகைக்கு ஆயத்தமாக இருப்பது சாத்தானுக்கு விருப்பம் இல்லாத விஷயம் ஆகும். விசுவாசிகள் கர்த்தருடைய வருகைக்கு ஆயத்தம் ஆகாமல் தடை செய்யும் எந்த உபதேசமும் சாத்தானின் உபதேசமே.
Yauwana Janam உம்மோடு விவாதம் செய்தால் அது நான் எழுப்பியிருக்கும் மூன்று கேள்விகளின் அடிப்படையிலேயே இருக்கும். மற்றபடி உங்களோடு எனக்கு ஒட்டுமில்லை உறவுமில்லை. உம்மிடம் சத்தியத்தைக் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமும் எனக்கில்லை. கிறிஸ்தவ அடிப்படை விசுவாசம் தொடர்பான காரியமன்றி உங்கள் வசதிக்கு நீங்கள் எழுப்பும் பொருளில் விவாதிக்க நாங்கள் உங்களுக்கு எந்த வகையிலும் கீழ்ப்பட்டவர்களல்ல. நீங்கள் 10 கட்டளைகளோடு போராடிக்கொண்டிருக்கும் மாம்ச ஜாதி என்றால் நாங்கள் அதை சிலுவையில் ஆணியடித்து வென்றவரின் பிள்ளைகள் என்பதால் அடிமைகள் பிள்ளைகளைக் கேள்வி கேட்கமுடியாது.
Yauwana Janam கேள்வியைத் திருப்பிவிட்டு சிக்ஸர் அடிக்கப்பார்க்கும் ஃபேஸ்புக் டெண்டுல்கரா நீர் ? க்ளீன் போல்டு ஆக்காமல் விடப்போவதில்லை. எந்த அடிப்படையில் சனிக்கிழமையை ஏழாம்நாள் என்கிறீர் என்று கேட்டால் உரிய பதில் சொல்லுவதே விசுவாசிக்கு அழகு.ஆனால் நீங்கள் யார் என்பதுஇன்னும் 2 நாட்களில் ஃபேஸ்புக் தளம் முழுவதும் தெரிந்துவிடும்,பாருங்கள். அடிப்படையற்ற வெளிநாட்டு போலி சரக்குகளை இங்கே கடைவிரித்து அப்பாவிகளை வஞ்சிக்க ஒருபோதும் அனுமதிக்கமுடியாது.
Yauwana Janam நான் நினைத்தது சரியாகிவிட்டது. இப்படி மற்றவர்களின் பக்கத்தில் நாம் நேரமெடுத்து எழுதுபவற்றை அவர்கள் நீக்கிவிடுவது வழக்கம் தான். போதாக்குறைக்கு ஒருகட்டத்தில் நம்மை ப்ளாக் பண்ணுவார்கள். என் அனுபவத்தில் இது 10+1 அவ்ளோ தான்.
Yauwana Janam சபை எடுத்துக்கொள்ளப்படுமா அல்லது ஆண்டவர் வரப்போகிறாரா ? அந்தி கிறிஸ்துவின் ஆட்சி எப்போது அமையும் ? அப்போது சபையின் நிலை என்னவாக இருக்கும் ?
மீதியான திருச்சபை ஏழாம் நாள் சனிக்கிழமை இல்லை என்பதற்கு நீங்கள் ஆதாரம் தாருங்கள், நான் கேட்ட கேள்விகளுக்கு வேதத்தில் இருந்து மட்டும் பதில் தரவும்., தேவையில்லாதா வார்த்தைகளை பயன்படுத்த வேன்டாம்
Yauwana Janam ஏழாம் நாளை பிரதானப்படுத்தும் உங்களுக்கே அந்த அரும்வாய்ப்பை நான் விட்டுக்கொடுக்கிறேன்.
மீதியான திருச்சபை நான் கேட்ட கேள்விகளூக்கு நீங்கள் முதலில் பதில் சொல்லுங்கள்
1) தானியேல் 7ம் அதிகாரம் 2) தானியேல் 8ம் அதிகாரம் 3) 2300 ராப்பகல் செல்லும் பின்பு பரிசுத்தஸதலம் சுத்திகரிக்கப்படும், இந்த வேத பகுதிக்கு விளக்கம் தெரிந்தால் மட்டும் இங்கே பேசவும்,
Yauwana Janam 10 கட்டளை / ஏழாம் நாள் / வருகை - இதில் ஒரு முடிவுக்கு வருவோம்.
/// வார்த்தைகளை சரியாக பயன்படுத்துங்கள் பிரதர் ///
நண்பரே, இது உங்கள் பக்கம். எனக்கு அட்வைஸ் பண்ணுவதைவிட்டு விட்டு நேரடியாக விஷயத்துக்கு வாருங்க..ப்ளீஸ்.
மீதியான திருச்சபை என்னிடத்தில் நீங்கள் எதை விவாதிக்க வேன்டும் என்று விரும்புகிறீர்கள்
Yauwana Janam நான் ஏற்கனவே எனது கேள்விகளை முன்வைத்திருக்கிறேன். அதற்கு பதிலளிக்க விருப்பமில்லாவிட்டால் பிரச்சினையில்லை.ஆனால் எதிர்கேள்வி கேட்பது உங்கள் பெலவீனத்தையே காட்டுகிறது.
மீதியான திருச்சபை என்னுடைய கேள்விகளூக்கு நீங்கள் பதில் சொல்லுங்கள்.,
இப்போது கிறிஸ்துவின் வருகை ரகசியமாக இருக்குமா? என்ற தொடரை எழுதி வருகிறேன், இது முடீந்தவுடன் "அமெகெதோனை நோக்கி" என்ற தொடர் எழுதுகிறேன்., இது முடிந்தவுடன் பிரமானம். ஓய்வுநாள் பற்றி எழுதுகிறேன் நான் நேர் விவாதத்திற்கு தயார்.,ஆனால் எப்போது சந்திப்பது என்பதை பிறகு முடிவு செய்வோ
இப்போது கிறிஸ்துவின் வருகை ரகசியமாக இருக்குமா? என்ற தொடரை எழுதி வருகிறேன், இது முடீந்தவுடன் "அமெகெதோனை நோக்கி" என்ற தொடர் எழுதுகிறேன்., இது முடிந்தவுடன் பிரமானம். ஓய்வுநாள் பற்றி எழுதுகிறேன் ///
இதையெல்லாம் யாரும் சொந்தமாக ஆராய்ச்சி செய்து கஷ்டப்பட்டு எழுதுகிறதில்லை. இவையெல்லாம் ஏற்கனவே எவனோ ஒரு வெளிநாட்டுக்காரன் செய்து வைத்தது தான். அவையெல்லாவற்றையும் தோலுரிப்போம்.
மீதியான திருச்சபை வேதம் எல்லோருக்கும் ஒன்றுதான், இதில் வெளிநாட்டுகாரன், உள்நாட்டுகாரன் என்ற பேதம் எங்கே வந்தது, நீங்கள் வார்த்தைகளை சரியாக பயன்படுத்துங்கள்