சமீபத்தில் ஒரு குறிப்பிட்ட வேத விளக்க கூடத்தில் இத்தலைப்பைக் குறித்த தியானத்தின் செய்தியை சகோ.அகஸ்டின் பாலன் அவர்கள் வழங்கி இருகிறார்கள். அவரது விளக்கங்கம் உண்மையில் மிகவும் பிரயோசனமானது. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!!!
ஆனால் சமாரிய ஸ்திரியுடன் இயேசு தலைக்கவிழ்ந்தபடி கீழே எதையோ தேடியபடி பேசினார் என்றார். நானும் கண்களின் இச்சையைப்பற்றிய ஒரு உண்மையை சகோதரார் இயேசுவை முன்னிறுத்தி வெளிபடுத்தினார் என்பதாக கருதி மகிழ்ந்தேன். பின் மனதில் ஒரு நெருடல். தெளிவாக வேத வெளிச்சத்தில் காரியத்தை ஆராயும் போது காரிய தெளிவுபட்டு, புரிதல் மேம்பட்டது.
கவனியுங்கள்..
யோவான் 4 ஆம் அதிகாரத்தில் 8 ஆம் வசனத்தில் ஆரம்பித்து 26 ஆம் வசனம் வரை சமாரிய பெண்ணுடன் இயேசு பேசியது வேதத்தில் காணப்படுகிறது!!வேதாகமத்தில் சகோ.பாலன் அவர்கள் முன்வைத்த வசனம் ...
யோவான் 4:27 அத்தருணத்தில் அவருடைய சீஷர்கள் வந்து, அவர் ஸ்திரீயுடனே பேசுகிறதைப்பற்றி ஆச்சரியப்பட்டார்கள். ஆகிலும் என்ன தேடுகிறீரென்றாவது, ஏன் அவளுடனே பேசுகிறீரென்றாவது, ஒருவனும் கேட்கவில்லை.
மூலபாஷைகளில் (கிரீக்)வேதத்தை ஆராய்ந்ததில் 'ΖΗΤΕΙΣ' என்கிற பதத்தை மொழிபெயர்த்ததில் வந்த தவறான புரிதல் என்பது தெளிவானது.
ΚΑΙ ΕΠΙ ΤΟΥΤΩ ΗΛΘΑΝ ΟΙ ΜΑΘΗΤΑΙ ΑΥΤΟΥ ΚΑΙ ΕΘΑΥΜΑΖΟΝ ΟΤΙ ΜΕΤΑ ΓΥΝΑΙΚΟΣ ΕΛΑΛΕΙ ΟΥΔΕΙΣ ΜΕΝΤΟΙ ΕΙΠΕΝ ΤΙ ΖΗΤΕΙΣ; Η ΤΙ ΛΑΛΕΙΣ ΜΕΤ ΑΥΤΗΣ;
ΖΗΤΕΙΣ' என்கிற பதத்திற்கு பின்வருமாறு விளக்கங்கள் தரப்பட்டுள்ளன...
ΖΗΤΕΩ,v \{dzay-teh'-o}
1) to seek in order to find 1a) to seek a thing 1b) to seek [in order to find out] by thinking, meditating, reasoning, to enquire into 1c) to seek after, seek for, aim at, strive after 2) to seek i.e. require, demand 2a) to crave, demand something from someone
to seek என்கிறதாக உணரப்பட்ட பதம் 'தேடு' என்பதாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. இது' to seek in order to find ' அல்லது 'what He was looking for' என்பதாக மொழிபெயர்த்திருக்க பட்டிருக்க வேண்டும். அவ்வாறு மொழிபெர்யக்கபட்டிருக்கும் பட்சத்தில் எதை முன்னிட்டு , என்ன தேவைக்காக , எதை பெறுவதற்காக அவளிடத்தில் (குடத்தில் தண்ணீர் மொள்ளும் பெண்ணுடன் ) பேசுகிறார் என்பதாக பொருள் வரவேண்டியது.
ஆனால் சரியாக அறிய,ஆராய படாமல் ஏசு தனிமையில் ஒரு பெண்ணுடன் பேசும்போது அவர் தரையைபார்த்து பேசினதாக அவரது பரிசுத்தம் தவறாய் புரிந்துகொள்ளபடுகிறது.. ஏனென்றால் இயேசு இப்போமியில் வாழும்போது பரிசுத்தத்தில் நிச்சயமற்றவராய் இருக்கவில்லை. பிசாசுகளும் அவர் மனிதரில் பரிசுத்தர் என குறிப்பிடாமல், தேவனுடைய பரிசுத்தர் என்கின்றனவே!!
மேலும்,பின்வரும் வேத அடிப்படைகளும், தரை பார்த்து பேசினதாக கூறப்படும் காரியத்தை தவறு என்கின்றன.
1) வசனத்தின் போக்கை ஆராயும் போது (முந்தைய வசனகளையும் சேர்த்து ) இறைவணக்கத்தை குறித்து பேசிய இயேசு, சமாரிய ஸ்திரியின் கணவனை அழைத்துவரும்படி கூறினார் பின் அவர் தீர்க்கதரிசனம் உரைத்து சமாரிய ஸ்திரியுடன் வாழ்ந்த ஆடவர்களின் எண்ணிக்கையை கூறுகிறார்.எந்த தேவ வார்த்தையை பேசும் தீர்க்கதரிசியும் தரைபார்த்து தீர்க்கதரிசனம் உரைத்ததில்லை. அவ்வாறிருக்க பிரதானதீர்கதரிசியான இயேசு எவ்வாறு தரைபார்த்து தீர்க்கதரிசனம் கூறி இருக்க இயலும்?
2) இயேசு சமவயது மதிக்கத்தக்க 'உதிரத்தின் ஊறல் இருந்த பெண்ணை' மகளே என்று அழைத்தார்!! அவ்வாறு இருக்க அதை போன்ற இன்னொரு மகளான சமாரிய ஸ்திரியினிடத்தில் அவர் தரைப்பார்த்து பேச அவசியம் இல்லை !!!
3) இந்த வேத பகுதியின் ஆரம்பம் தெளிவாய் இயேசு 'தாகத்திற்கு தா' என இயேசு கேட்பதிலிருந்து தொடங்குகிறது. இயேசு ஒரு தாகத்தின் நிமித்தம் அவளை அணுகி இருக்க,'to seek inorder to find ' என்ற மொழிபெயர்ப்பே மூல பாஷையின் புரிதலுக்கு சரியானதாய் இருக்கிறது.
4) அந்த சமாரிய ஸ்திரி இறுதி வரை நம் கர்த்தராகிய இயேசுவிற்கு தண்ணீர் தரவில்லை. அவர் குடித்தார் என்று வேதம் சொல்லாமல்,அவள் குடத்தை வைத்துவிட்டு போனாள் என வேதம் சொல்லுகிறது. ஆகவே முகபாவம் அறிந்திருக்க வேண்டிய சீடர்கள் 'என்ன தேவையின் நிமித்தம் பேசினார் ' எனக்கருதினதே மூல பாஷையின் புரிதல்!!
5) ஒருவைரை குறித்தும் சாட்சி தேவைபடாத இயேசு அனைத்தையும் அறிந்தவர், தனிமையில் உபவாசத்தில் இருக்கும்போதே அணைத்து விதமான சோதனைகளையும் வல்லமையை ஜெயித்தவர், உலகத்தை ஜெயித்தேன் என ஜெயித்த பின் கூறினவர்.இப்படியான் தேவன் ஒரு ஸ்திரியின் முகத்தை இச்சை ஏற்படும் என்பதற்காக பார்க்கவில்லை எனக்கூறுவது, இந்துத்துவ பிரமச்சரிய (பீஷ்மர் கங்கையை தொடவிரும்பாமல் போனதை போன்றது!!) கதைகளுக்கு ஒத்தது.
6) அனைவருக்காகவும் ஜீவனை தந்தவர்,ஒரு பாவமுமில்லாதவர் மறைவானவைகளை வெளிபடுதுபவராய் சிமியோனால் அறியப்பட்டவர். வேதம் சொல்லுகிறது அவரது பார்வைக்கு சிருஷ்டி ஒன்றும் இல்லை என்பதாக!!
எபிரெயர் 4:13 அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்.
7) மனுஷன் பார்க்கிற பிரகாரமாய் இயேசு பார்பதில்லை!! ஏனென்றால் அவர் உயர்விலிருந்து உண்டானவர்
யோபு 10:4 மாம்சக் கண்கள் உமக்கு உண்டோ? மனுஷன் பார்க்கிறபிரகாரமாய்ப் பார்க்கிறீரோ?
I சாமுவேல் 16:7 கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீரவளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்; நான் இவனைப் புறக்கணித்தேன்; மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார்.
யோவான் 8:23 அவர் அவர்களை நோக்கி: நீங்கள் தாழ்விலிருந்துண்டானவர்கள், நான் உயர்விலிருந்துண்டானவன்; நீங்கள் இந்த உலகத்திலிருந்துண்டானவர்கள், நான் இந்த உலகத்திலிருந்துண்டானவனல்ல.
அகவே குறிப்பிட்ட வசனத்தை பொருத்தமட்டில் (தி வாய்ஸ் ) எனும் ஆங்கில மொழிபெயர்ப்பு சரியானதாய் இருக்கிறது!!
John 4:27The Voice (VOICE)
The disciples returned to Him and gathered around Him in amazement that He would openly break their customs by speaking to this woman, but none of them would ask Him what He was looking for or why He was speaking with her.
தேவஆவி நம்மொவ்வொருவரையும் நடத்துவாராக !!!
http://lordoflords.activeboard.com/
---------------------------------
GLORY TO LORD THE GOD!!!
-- Edited by JOHN12 on Tuesday 1st of July 2014 09:52:24 PM