Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கலங்கின நேரங்களில்...நீங்க தாம்பா என் நம்பிக்கை - லேவி


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 330
Date:
கலங்கின நேரங்களில்...நீங்க தாம்பா என் நம்பிக்கை - லேவி
Permalink  
 


கலங்கின நேரங்களில் கைதூக்கி எடுப்பவரே
கண்ணீரின் பள்ளத்தாக்கில் என்னோடு இருப்பவரே
உறவுகள் மறந்தாலும் நீர் என்னை மறப்பதில்லை
காலங்கள் மாறினாலும் நீர் மட்டும் மாறவில்லை

நீங்க தாம்பா என் நம்பிக்கை
உம்மையன்றி வேறு துணையில்லை

தேவைகள் ஆயிரம் இன்னும் இருப்பினும்
சோர்ந்துபோவதில்லை என்னோடு நீர் உண்டு
தேவையைக் காட்டிலும் பெரியவர் நீரல்லோ
நினைப்பதைப் பார்க்கிலும் செய்பவர் நீரல்லோ

நீங்க தாம்பா என் நம்பிக்கை
உம்மையன்றி வேறு துணையில்லை

மனிதனின் தூஷணையில் மனமடிவடைவதில்லை
நீர் எந்தன் பக்கமுண்டு தோல்விகள் எனக்கில்லை
நாவுகள் எனக்கெதிராய் சாட்சிகள் சொன்னாலும்
வாதாட நீர் உண்டு ஒருபோதும் கலக்கமில்லை

நீங்க தாம்பா என் நம்பிக்கை
உம்மையன்றி வேறு துணையில்லை



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard