Sam Daniel /// சத்தியத்தை விட்டு உங்கள மனம மதிமயக்கி போய்யிருக்கிறது. ///
உங்கள் பதிவில் எந்த குற்றமும் இல்லை. அதனுடன் வேத வசனங்களைப் பொருத்தமின்றி சேர்க்கவேண்டாம் என்கிறேன். நன்றி.
மத்தேயு 4:8 மறுபடியும் பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து:
9. நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான். 10. அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.
Past is past and let him account to God if he has done anything wrong, but now by God's plan only he has become the P.M of our great nation. We should honor him not as a ordinary man but as the elected leader of the nation. Let's pray for him and his Cabinet, so that as a team let them do good governance.
Honoring is one thing..but using word of God to praise him is unbecoming of a student of the word.பதிவில் குறிப்பிட்டது போல் ஒரு சிலரே இந்த உயர்வினைப் பெற்றுள்ளனர். ஆனால் பலரோ அவருடைய நாமத்தில் விசுவாசம் உள்ளவர்களாய் அவருடைய புத்திரராய் மாறியுள்ளனரே? இதைவிட மிகப் பெரிய பதவி உயர்வு வேறு எது உண்டு? இவ்விதமான உலகப் பிரகாரம் தரப் படும் முன்உதாரணங்கள் தவறான வழிக்குக் கொண்டு செல்லுமே அன்றி தேவனிடத்தில் வந்து சேர்க்காது.
இந்த பதிவின் நோக்கம் யாரையும் புகழ்வது அல்ல. யாரையும் நீதிகரிப்பதுமல்ல. ஏழ்மையிலிருந்து அமெரிக்காவின் உயர் பதவிக்கு மதிப்புக்குரிய ஒப்பாமாவும், இந்திய பிரதம பதவிக்கு மதிப்புக்குரிய மோடி அவாகளும் உயர்த்தப்பட்டிருக்கிறார்கள்.தேவனால் யாரையும் உயர்த்த முடியும் என்பதை தான் சுட்டிகாட்டி ஏழ்மையில் உள்'ளவர்களை உற்சாக மூட்டுகிறோம் அவ்வளவு தான்.
தானியேல் 2:21 படி ராஜாக்களை தேவன் தான் ஏற்படுத்துகிறார். தேவனின் ஆளுகைக்கு எங்களை முழுவதுமாய் ஒப்புக்கொடுக்கிறோம். அவ்வளவு தான். தேவனை அறியாமல் தேசத்தில் தீங்கு நடக்காது என்று வேதம் சொல்லுகிறதே. ( ஆமோஸ் 3:6)
Sam Daniel /// இந்த பதிவின் நோக்கம் யாரையும் புகழ்வது அல்ல. யாரையும் நீதிகரிப்பதுமல்ல. ஏழ்மையிலிருந்து அமெரிக்காவின் உயர் பதவிக்கு மதிப்புக்குரிய ஒப்பாமாவும், இந்திய பிரதம பதவிக்கு மதிப்புக்குரிய மோடி அவாகளும் உயர்த்தப்பட்டிருக்கிறார்கள். தேவனால் யாரையும் உயர்த்த முடியும் என்பதை தான் சுட்டிகாட்டி ஏழ்மையில் உள்'ளவர்களை உற்சாக மூட்டுகிறோம் அவ்வளவு தான். ///
இவர்கள் உயர்த்தப்பட்டது தேவனால் என்று நீங்கள் உறுதியாக நம்பினால் அதற்காக வருந்துவதைத் தவிர வேறொன்றும் செய்ய இயலாது. பழைய ஏற்பாட்டிற்கும் புதிய ஏற்பாட்டிற்கும் இடையேயுள்ள வித்தியாசத்தை இன்னும் பல கிறிஸ்தவ போதகர்களே கூட அறிந்திராதது சற்று வியப்பாகவே உள்ளது.
என்னைப் பொறுத்தவரையில் இவ்விருவர் மாத்திரமல்ல, இவ்வுலகின் ஆட்சியாளர் யாராக இருப்பினும் போப்பாண்டவர் உட்பட அவர் பாபிலோனின் நியமனமே என்றால் அது மிகையல்ல.
இதுகுறித்து நான் ஏற்கனவே எழுதியிருக்கும் கருத்து...
இந்த அளவுக்கு ஒரு இந்துத்வா தலைவரை தரணி காக்கவந்த இரட்சகரைப் போல கிறிஸ்தவ மக்களே போற்றுவதற்கு என்ன காரணம் இருக்கமுடியும் ? இது செம்மறியாட்டு மனப்பான்மை அல்லவா ? மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவதைப் போல தங்களை நிலைப்பாட்டுக்கு வேத வசனங்களையும் மேற்கோள் காட்டும் அவசியமென்ன ? ஆம், கடைசி நாட்களில் இவையெல்லாம் சம்பவிக்கும் என்று நம் ஆண்டவர் ஏற்கனவே சொல்லியிருக்கிறார். வெகுஜன விரோதியாக இருப்பதை யார் தான் விரும்புவார் ? எனவே காற்றடிக்கும் திசையில் செல்லும் ஓடத்தைப் போல முந்திரிக்கொட்டையைப் போல முந்திக்கொண்டு எதிரிகளுக்கும் சாமரம் வீச ஆயத்தமாகிவிடுகிறார்கள் கிறிஸ்தவ தலைவர்கள். காரணம், விசுவாச துரோகம் முந்தி நேரிட்டாலே பாவ மனுஷன் வெளிப்படுவான் என்று வேதம் சொல்லியிருக்கிறதே. அதன் அடையாளமாகவே தேர்தல் அறிவிக்கப்பட்டு பிரதமர் வேட்பாளராக (ஆர்எஸ்எஸ் இயக்கத்தினால் முன்னிறுத்தப்பட்டு) மோடி அறிவிக்கப்பட்டதும் பால் தினகரன் ஓடோடிச் சென்று அவரை சந்தித்து வாழ்த்தினார். அதற்கு விளக்கமாக எல்லோருக்கும் ஜெபம் செய்ய வேதம் சொல்லுவதாக ஒரு விளக்கமும் கொடுத்தார். அடுத்து மோகன் சி லாசரஸ் நாகர்கோவிலில் வைத்து மோடியைப் புகழ்ந்தார். இவையெல்லாம் எதைக் காட்டுகிறது ? இவர்கள் ஆண்டவருடைய இதயத் துடிப்புக்காக ஓடவில்லை...மக்கள் மனஓட்டத்தை சார்ந்தே ஓடுகிறார்கள். இதன்மூலம் எதை சாதிக்கமுடியும் ? சாத்வீகமான அணுகுமுறையினால் தாங்கள் சேர்த்திருக்கும் சொத்துக்களுக்கு பங்கமேற்படாமல் காத்துக்கொள்ளலாம். ஊடகங்கள் மூலம் மூளை சலவை பணியையும் தொடரலாம் என்பதே.
(தொடரும்...)
-- Edited by Yauwana Janam on Saturday 7th of June 2014 06:30:44 PM
ஃபேஸ்புக் எனும் வதனநூல் தளத்தில் பின்வருமாறு ஒரு படத்தைப் பதித்து அதில் வேத வசனங்களையும் இணைத்து பிரதமர் மோடியை ஆண்டவரே நியமித்தது போன்ற தோரணையில் ஒரு நண்பர் எழுதியிருந்தார். எந்தவொரு பதிவையும் வாசிக்கையில் ஆவியானவருடைய துணையுடன் அதனை ஆய்வுசெய்கிறோம். அது ஆவியின் நிறைவினால் எழுதப்படாதது மற்றும் வேதத்தின் நியமங்களுக்கு எதிராக இருப்பின் உடனுக்குடன் அதனை எதிர்க்கிறோம். மற்றபடி எல்லாரையும் எதிர்க்கவேண்டும் என்றெல்லாம் நமக்கு வேண்டுதல் ஏதுமில்லை. இதனால் நாம் தனிமைப்படுத்தப்பட்டாலும் அதுகுறித்து கவலைப்படுகிறதில்லை. அதன்படி இந்த பதிவு முற்றிலும் சத்தியத்துக்கு விரோதமான பாதையில் ஒரு விவாதமாக செல்லுவதால் அதுகுறித்து வேத வெளிச்சத்தில் ஆய்வுசெய்ய முற்பட்டோம். இதில் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க விரும்பும் நண்பர்கள் தாராளமாக பங்கேற்கலாம். ஆனாலும் யாரும் யாரையும் தனிப்பட்ட முறையில் புண்படுத்தி எதையும் எழுதிவிடவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஏனெனில் குறிப்பிட்ட பதிவிலும் கூட நாம் முன்வைத்த மாற்றுக் கருத்தை ஆராயாமலே நம்மை தனிப்பட்ட முறையில் தாக்குதல் செய்ய நண்பர் துணிந்துவிட்டார். ஆனாலும் நாம் நிதானமாக நம் கருத்தை முன்வைத்திருக்கிறோம்.
தொடருவது பதிவில் நடைபெற்ற விவாதங்களின் தொகுப்பு...
He raise up the poor out of the dust, and lift up the beggar from the dunghill, to set them among the princes. and make them to inherit the throne of glory. ( 1 Samuel 2:6)
அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து , எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துக்கிறார்.அவர்களை பிரபுக்களோடு உட்காரவும் மகிமையுள்ள சிங்காசனத்தை சுதந்தரிக்கவும் பண்ணுகிறார்.( 1 சாமுவேல் 2:6)
தேவன் பட்சபாதமுள்ளவரல்லவென்றும், எந்த ஜனத்திலாயினும் அவருக்கு பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன். ( அப்போஸ்தலர் 10;34.35)
உலகப் பிரகாரமான ஒருவரைப் புகழ்வதற்கு வேத வசனங்கள் பயன்படுத்தப்படுவதை நான் எதிர்க்கிறேன்.உங்களுக்கு பொறுமையிருப்பின் இதுகுறித்து விளக்கம் கூறவும்.நன்றி. 7 hours ago · Like
Yauwana Janam ராஜாக்களை தள்ளி ராஜாக்களை ஏற்படுத்துகிறவர் நம் தேவனே. தானியேல் 2:21. அந்திய தேசத்து பாபிலோன் ராஜாவை தேவன் என் தாசன் என்று அழைத்தார். கோரேசை என் மேய்ப்பன் என்கிறார். இதையெல்லாம் குற்றம் சொன்னால் என்னையும் சொல்லுங்கள். நான் எந்த மனுசனையும் புகழவிலலை. தேவனால் ஏழையை உயர்த்த முடியும் என்று தான் சொல்லுகிறேன்.
இந்த உலகம் அந்தி கிறிஸ்துவின் ஆட்சிக்கு நேராக ஓடிக்கொண்டிருக்க அந்தி கிறிஸ்துவையும் என் தாசன் என்றும் என் மேய்ப்பன் என்றும் வேதம் புகழுமா என்ன ? பிறகு புதிய ஏற்பாட்டின் நோக்கம் தான் என்ன ?
தேவன் சாத்தானிடமே 7 ஆண்டுகளின் ஆட்சியை கொடுக்கப் போகிறார். அதற்கு என்ன சொல்லப போகிறீர்கள்.இந்த காலத்தில் இந்தியா மிகப்பெரிய எழுப்புதலை சந்திக்கப போகிறது. இன்னும் 10 ஆண்டுகளில் இந்தியாவில் அதிகமானபேர் கிறிஸ்தவாகளாக போகிறார்கள். தேவன் செய்கிறதை புரிந்துக் கொள்ளுஙகள்.
நாகர்கோவில் மாவட்டம் ஏறக்குறைய மோடியின் மகுடிக்கு மயங்கியிருப்பதாகத் தெரிகிறது. அதற்காக சாத்தானையும் அவன் சேனையையும் என் மேய்ப்பன் என்றோ என் தாசன் என்றோ வேதம் வர்ணிப்பதாக சொல்லமுடியாதுங்க.
சத்தியத்தை விட்டு உங்கள மனம மதிமயக்கி போய்யிருக்கிறது. தேவன் தரும் ஆளுநர்களை ஏற்றுக்கொள்ளும் மனம் தேவப்பிள்ளைகளுக்கு தேவை. நமக்கு மோடியோ, பி.ஜே.பியோ எதிரியல்ல. சாத்தானே எதிரி. தேவனுடைய சபையை துன்பப்படுத்தின சவுல் பவுலாக மாற முடியுமானால் தேவனால் யாரையும் மாற்றக் கூடும்.