ஊழியங்களிலிருக்கும் குறைகளை அன்போடு சுட்டிக்காட்டுவதற்கும் ஒரு ஊழியத்தையே காய்மரத்தோடு பகைப்பதற்கும் வித்தியாசமுண்டு. பிந்தைய செயலானது நம்முடைய சமுதாயத்தில் குழப்பதையே உண்டாக்கிவிடும். அதினால் பலரும் சீர்கெட்டு சிதறுண்டு போவார்கள். இதுபோன்ற அக்கிரமத்தின் பலனானது ஒவ்வொரு வீட்டின் வாசலுக்கும் வந்துசேரும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இங்கே அதுபோன்றதொரு அருவருப்பான முயற்சியில் - அவிசுவாசிகளும் உலகத்தாரும் கூட அஞ்சி நடுங்கும் செயலில் கிறிஸ்தவர்கள் என்ற போர்வையில் உலவிக்கொண்டிருக்கும் மேட்டுக்குடி பொறுக்கிகள் ஈடுபட்டிருக்கின்றனர். இப்படிப்பட்டவர்களின் முயற்சிகள் அனைத்தும் அவர்களோடு நாசமாய் போகட்டும்.
Ponnudurai Josephஒரு ஊர்ல ஒரு நரி கிரமத்துக்கு வெளியே வசித்து வந்ததாம். ஒவ்வொரு நாளும் இரவில் ஊருக்குள் புகுந்து ஆட்டுக்குட்டி அல்லது கோழி என்று எதையாவது திருடிக்கொண்டு சென்றதாம். அதை கையும் களவுமாக பிடிக்க அந்த ஊரில் சில வாலிபர்கள் பிளான் பண்ணினார்களாம்.
ஆனால் தந்திரமுள்ள இந்த நரியோ அந்த ஊர் பெண்களிடம் சொன்னதாம் தான் யார் வீட்டிலிருந்து கோழியையோ அல்லது ஆடையோ எடுத்து செல்கிறேனோ அந்த வீட்டுக்கு கடவுள் ஒரு பெரிய புதையலை வைத்திருக்கிறார் என்று புருடாவை அவிழ்துவிட்டதாம். அதை நம்பிய கிராமத்து ஜனங்கள் ஒவ்வொருவரும் ஒரு கோழியையோ அல்லது ஆட்டையோ தங்கள் வீட்டின் முற்றத்தில் கட்டிவைத்துவிட்டு தங்கள் வீட்டில் இன்றைக்கு நரி திருட வராதா என்று ஆவலோடு எதிர்பார்த்தார்களாம் காரணம் அவர்களுக்கு ஏதோ ஒரு பெரிய புதையல் கிடைக்கும் என்ற நம்பிக்கை. இதை கவனித்துக்கொண்டிருந்த வாலிபர்கள் தங்களுக்கு ஆடோ கோழியோ வேண்டுமென்றால் தைரியமாக இரவில் யார் வீட்டிலாவது திருடிக்கொள்வார்கள். அந்த வீட்டுக்காரர்களும் புதையல் நரிதான் எடுத்து சென்றிருக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார்களாம்.
இந்த திருட்டை அறிந்துகொண்ட தந்திரமுள்ள நரி ஒரு பிளான் பண்ணி இன்னொரு புருடா விட்டதாம். அதாவது தான் தங்கியிருக்கின்ற இடத்திற்கே வந்து கோழியையும் ஆட்டையும் கொடுத்துவிட்டு சென்றால்தான் அந்த புதையல் கிடைக்கும் என்றும் அப்படி செய்த பக்கத்து ஊரில் உள்ள ஒருவருக்கு மிகப்பெரிய தங்கப்புதையல் கிடைத்துவிட்டதாகவும் அதை பெயர் சொல்ல விரும்பவில்லையெனவும் nஅவர் பெயர் தெரிந்தால் போலீஸ் அந்த புதையலை எடுத்துக்கொள்ளும் என்று சொல்லி பெயரை வெளியிட விரும்பவில்லையென உருக்கமாக சொல்லியதாம். அதையும் உண்மை என்று நம்பிவிட்ட கிராமத்து மக்கள் அந்த நரியின் இருப்பிடத்திற்கே ஆடையும்கோழியையும் கொண்டுசென்று கொடுத்தார்களாம். இந்த புதையல் நம்பிக்கை வெளியூரில் உள்ளவர்களுக்கும் பரவி வெளியூரிலிருந்தும் கோழியும் ஆட்டுக்குட்டியும் கொண்டுவருகின்ற மக்கள் அதிகரித்துக்கொண்டே இருந்தார்களாம். வெளியூர்காரர்களுக்கு வழி தெரிவதற்காக ஊரின் நுழைவு பாதையில் அந்த நரி ஒரு போர்டும் வைத்துவிட்டதாம்.
நரிக்கு கொண்டுசெல்லப்படுகின்ற ஆட்டையும் கோழியையும் திருடுகின்ற கும்பல் தற்போது வெளியூரிலிருந்து ஆட்களையும் ஆடுகளையும் கோழிகளையும் கொண்டுவருகின்ற அந்த நரியின் டிராவல் ஏஜெண்டுகளாக மாறிவிட்டார்களாம். இந்த திருட்டு கும்பல் இப்போது வெளியூரிலிருந்து வருகின்ற ஆடுகளையும் கோழியளையும் அவ்வப்போது திருடி தங்கள் வாழ்கiகையை நடத்திக்கொண்டிருதனர். இதை அறிந்த நரியும் கண்டுகொள்வதில்லை காரணம் இதற்கு ஆடுகளும் கோழிகளும் வந்துகுவிந்தவண்ணமாக இருக்கின்றது அது பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்ற எண்ணியது.
ஓருநாள் அந்த வழியாக சென்ற நண்பர்ஒருவர் அந்த ஊரின் நுழைவு வாயிலில் இருந்த அந்த வழிகாட்டி போர்டை ஃபோட்டோ எடுத்து புதையல் இங்கே இருக்கிறது என்று யார் சொன்னது? அந்த புதையல் உள்ள இடத்திற்கான மேப் எங்கே இருக்கின்றது என்ற உண்மையை 'டமால்' என்று போட்டு உடைத்துவிட்டாராம். அதை அறிந்துகொண் திருட்டு கும்பல் ஆக்கிரோஷமாகி ..... (தொடரும்...)