Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கும்மியடி பெண்ணே...கும்மியடி, குலுங்க குலுங்கி கும்மியடி..!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 347
Date:
RE: கும்மியடி பெண்ணே...கும்மியடி, குலுங்க குலுங்கி கும்மியடி..!
Permalink  
 


  • Jasmine Golda >>அந்த புகைப்பட பதிவின் சாராம்சம் ஓரளவு ஏற்றுக்கொள்ளக்கூடியது என்றாலும்,

    கமெண்ட் போட்டவங்க எல்லாம் ஊரில் உள்ள எல்லா மாடர்ன் ட்ரெஸையும் போடுபவர்களாகத்தான் இருக்கும்.

    >> அதற்கு கொடுக்கப்பட்ட தரக்குறைவான மறுமொழிகள் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது.

    ஆம்.நன்றி.
  • Jasmine Golda அதிகமாக ஒரு கருத்து மட்டும் சொல்கிறேன். அவர் சகோ தினகரனைப் பற்றிப் பாராட்டி முன்பே (activeboard) எழுதியிருக்கிறார். மீடியா மிருகங்கள் என்று இன்னும் குறை பேசத்தான் செய்கிறார்.

    அத்துடன் முரண்பாடாய் எழுதும் FB கிறிஸ்தவர்கள் வேறு யாருமே கிடையாதா? யாருக்குமே இன்னொரு ஐடி கிடையாதா? ஏன் சிலரை மட்டும் குறி வைத்து தாக்குகிறார்கள்? இதுவும் துக்கமே. அத்துடன் மர்மமே.
  • Paul Prabhakar கடந்த டிசம்பர் 2013 மூன்றாம் வாரம் நான் Samuel Churchill அவரிடம் 1:35 மணி நேரங்கள் கைபேசியில் பேசினேன் . அவருடையதே தனி உலகம் . யார் போன் பண்ணினாலும் பேச்சுக்கள் ரெகார்டிங் பண்ணுகிறார். அனைவருடைய முகநூல் எழுத்துக்கள ஸ்கிரீன் ஷாட் எடுத்து பத்திரப்படுத்தி வைக்கிறார் .எல்லார் பெயரிலும் Folder வைத்திருக்கிறார்ராம். நாமே ஒதுங்கி இருந்தாலும் நமக்காக ஒசி விளம்பரம் செய்வது . இணையத்தின் பிரபலமும் இவரே . பிராப்ளமும் இவரே . இப்படி ஒருத்தர் இருப்பதால் தான் இணயம் கலகலப்பு குறையாமல் இருக்கிறது . இவரிடம் நீண்ட நாட்கள் நட்பு பாராட்டமுடியாது . இவரும் யாருடனும் நீண்ட நாள் நட்பாக இருக்கவும் முடியாது . இவருடைய நீண்ட நாள் ஆசை எப்படியாவது பேஸ்புக் ஒழியணும் . ஆக்டிவ் போர்டு வாழணும். -- தொடரும்
    4 hours ago via mobile · 1
  • எக்காள சத்தம் அண்ணண் Paul Prabhakar, என்னுடைய இந்த பதிவின் நோக்கமே, திரும்பவும் அவர்கள் கர்த்தருக்குள் நண்பர்களாக ஐக்கியப்படவேண்டும் என்பதுதான். குறைகள் நம் எல்லாரிடத்திலும் இருப்பதுதானே. அவரிடத்தில் ஒருவித குறையிருந்தால் என்னிடத்தில் வேறு விதத்தில் இருக்கும். தயவுசெய்து அவைகளை பெரிதுபடுத்த வேண்டாமே.
  • சாணக் யன் 40 நாள் உபவாச ஜெபம் பண்ணுவார் போல இருக்கே

    Paul Prabhakar


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 347
Date:
Permalink  
 

நல்லெண்ணம் கொண்டோரின் தவிப்பு...

 

எக்காள சத்தம்

ஒரு குறிப்பிட்ட புகைப்பட பதிவும், அதற்கான மறுமொழிகளும் சில ஆண்டுகள் நல்ல நண்பர்களாய் இருந்தவர்களை பிரித்து வைத்திருக்கிறது. இதுமட்டும்தான் அந்த போட்டோ பதிவினால் வந்த பலனென்று நான் நினைக்கிறேன். நமக்கு கொடுக்கப்பட்ட சுயாதீனத்தை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதை ஆண்டவர் மிக கவனமாக பார்த்துகொண்டிருக்கிறார். கவனம் தேவை. ஆதாமின் தவறை நாமும் செய்யவேண்டாம்.

அந்த புகைப்பட பதிவின் சாராம்சம் ஓரளவு ஏற்றுக்கொள்ளக்கூடியது என்றாலும், அதற்கு கொடுக்கப்பட்ட தரக்குறைவான மறுமொழிகள் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. எந்த ஊழியரையும் ஊழியத்தையும் அவர்களது குறைகளை வசன ஆதாரங்களோடு, கண்ணியமாக எடுத்துக் கூற ஒவ்வொரு விசுவாசிக்கும் உரிமை உள்ளது. ஆனால் மிகவும் கவனமாய் செய்யப்பட வேண்டிய ஒன்று. ஏனெனில் நாமெல்லாரும் ஒரே சரீரத்தின் அவயவங்களாய் இருக்கிறோம். நம் விரலகளில் அதிகம் வளர்ந்துவிட்ட நகத்தை கத்தரிக்கும்போது எவ்வளவு கவனம் செலுத்துகிறோம். சதை துண்டிக்கப்பட்டு இரத்தம் வர விரும்புகிறோமா? அதே கவனம், கரிசனை நம்முடைய கடிந்துகொள்ளுதலில் இருக்கவேண்டும். அப்படிச் செய்ய தவறும்போது இப்படிப்பட்ட விபத்துகள் நடக்க நாமே காரணமாகிவிடுவோம்.

அன்பு சகோதரர்கள், Peter Samuel S மற்றும் Samuel Churchill இருவருக்கும் என் தாழ்மையான வேண்டுகோள், ஏற்கனவே நமக்குள் இருக்கும் பிரிவினைகள், கருத்து வேறுபாடுகள் போதும். அவைகளை இன்னும் வளரவிட வேண்டாம். ஒருவருக்கொருவர் மாறி மாறி எதிரெதிர் விமர்சனங்களை தெரிவிக்காதீர்கள். மன்னித்து மறந்துவிடுங்கள், தவறு யாருடையதாய் இருப்பினும். உடைப்பது எளிது, வினாடியில் செய்துவிடலாம். நல்ல நண்பர்களாய் மாறுவதற்கு பல வருடங்கள் ஆகியிருக்கும், அவைகளை சற்று நினைத்துப்பாருங்கள். மீண்டும் ஐக்கியப்படுங்கள். ஆண்டவருடைய நாமத்தினிமித்தம் கேட்கிறேன்.

"நம்மிடம் உள்ள ஐக்கியமே வெற்றியும் தோல்வியும் ஆக்கிடுமே..."

(ஒருவேளை என் தகுதியையும், எல்லையும் மீறி வார்த்தைகளை கூறியிருந்தால் என்னை மன்னிக்கவும்...)



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 347
Date:
Permalink  
 

அன்று இயேசுவை சிலுவையிலறையும் சூழலில் எதிரும் புதிருமாக இருந்த ஏரோதுவும் பிலாத்தும் நட்பானார்களாம்;அதேபோன்று இன்றும் போலி பெந்தெகொஸ்தே பெருச்சாளியான இம்மானுவேல் ஆபிரகாமும் ப்ளாக் ஷீப் விஜய்யும் ஒரே திரியில் என்னொருவன் நிமித்தமாக இணைந்து கும்மியடித்திருக்கிறார்கள். இந்த ஆட்டத்தை முன்னின்று நடத்துவதில் பலரும் இணைந்து பாடுபட்டிருக்கிறார்கள். முக்கியமாக சில வாரங்கட்கு முன்னர் போஸ்டர் வியாபாரி தொலைபேசி மூலம் சொன்ன ஒரு இரகசியம் - எச்சரிக்கை - நிபந்தனை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அவர் குறிப்பிட்டிருப்பது போல அவர் செலவில் பேசவில்லை. அவர் முதலில் நம்மை அழைத்து சுருக்கமாக பேசிவிட்டு கட்’ பண்ண பிறகு நாம் அவரை அழைத்து நம் செலவில் 1.5 மணி நேரம் பேசினோம். அதினால் நம்மிடமிருந்த சொற்ப இருப்பு காணாமற் போனது தனி சோகமாகும். முன்பு இதே திரு.பீட்டர் சாமுவேல் ஜெயக்குமார் ஹோசன்னாவை சமாளிக்கவும் திரு.விஜய் இமமானுவேல் ஆபிரகாமை சமாளிக்கவும் என்னை பயன்படுத்திக்கொண்டதை பழைய நண்பர்கள் நன்கு அறிவார்கள். எது எது எங்கே சேரணுமோ அது அது அங்கே சரியாகவே சேர்ந்துவிடுகிறது. இதுவே இயற்கையின் அற்புதமான அநுகூலமாகும்.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 347
Date:
Permalink  
 

திருக்குறளில் கூடா நட்பு எனும் தலைப்பில் அதிகாரம் 83-ல் வரையப்பட்டுள்ள 10 குறள்களும் இந்த நேரத்தில் அருமருந்தாக இனிக்கிறது. biggrin

சீரிடங் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு. (821)
 
விளக்கம்: உள்ளத்தால் நெருக்கமில்லாமல் பழகுகிறவரின் நட்பானது நம்மை அழிப்பதற்கான இடம் கண்டால் எறிவதற்கு மறைந்துள்ள பட்டடை போன்றது ஆகும்.

இனம் போன்று இனமல்லார் கேண்மை
மகளிர் மனம்போல வேறு படும். (822)
 
விளக்கம்: நம் இனத்தார் போலவே உறவுகாட்டி, உள்ளத்திலே நம் இனம் அல்லாத கீழோரின் நட்பானது, விலை மகளிர் மனம் போலப் பெறுகிற பயனுக்குத் தகுந்தபடி மாறிவிடும்.
 
பலநல்ல கற்றக் கடைத்தும் மனநல்லர்
ஆகுதல் மாணார்க் கரிது. (823)
 
விளக்கம்: பலவான நல்ல அற நூல்களை எல்லாம் கற்றிருந்தாலும், தம் மனத்திலே நல்ல பண்பினர் ஆகுதல் என்பது, பெருந்தன்மைப் பண்பு இல்லாதவருக்கு அரிய செயலாகும்.
 
முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
வஞ்சரை அஞ்சப் படும். (824)
 
விளக்கம்: முகத்திலே இனிமை தோன்றச் சிரித்துப் பேசினபோதும அகத்திலே துன்பத்தையே நினைக்கும் வஞ்சகரின் உறவை, விளையும் தீமைக்கு அஞ்சி, விட்டுவிட வேண்டும்.
மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்
சொல்லினால் தேறற்பாற் றன்று. (825)
 
விளக்கம்: மனத்தாலே நம்மோடு நெருக்கம் கொள்ளாதவரை எந்த ஒரு வகையாலும் அவர் சொல்லினால் மட்டுமே நல்ல நண்பராகத் தெளிந்து கொள்ளக் கூடாது.
 
நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
ஒல்லை உணரப் படும். (826)
 
விளக்கம்: நம்மிடம் பேசும் போது நமக்கு நண்பரைப் போலவே நல்ல பேச்சுக்களைச் சொன்னாலும் நம்மோடு ஒட்டாதவரின் வஞ்சகத்தை விரைவிலேயே அறிந்து விடலாம்.
 
சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
தீங்கு குறித்தமை யான். (827)
 
விளக்கம்: நம்மிடம் பேசும் பேவில்லின் வளைவு தீமையைக் குறியாகக் கொண்டதே. இவ்வாறே பகைவரிடத்திலிருந்து வரும் வணக்கமான பேச்சையும் தீமை தரும் என்று தள்ளிவிட வேண்டும்.
தொழுதகை யுள்ளும் படையொடுங்கும்
ஒன்னார் அழுதகண் ணீரும் அனைத்து. (828)
விளக்கம்: நம்மைத் தொழும்போது கூடப் பகைவரது கையினுள் கொல்வதற்கான படை மறைக்கப்பட்டிருக்கும். பகைவர் அழுது வடிக்கும் கண்ணீரும் அந்தத் தன்மையதே.
 
மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து
நட்பினுள் சாப்புல்லற் பாற்று. (829)
 
விளக்கம்: வெளிப்பட மிகுதியாக நட்புச் செய்து உள்ளத்திலே நம்மை இகழுகிறவர்களை நாமும் மகிழ்ச்சியடையச் செய்து, நம் உள்ளத்தில் அந்த நட்பை அழித்து விடல் வேண்டும்.
 
பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு
அகநட்பு ஒரீஇ விடல். (830)
விளக்கம்: பகைவரும் நட்பாகப் பழகுவதற்கு ஏற்ற காலம் வருங்காலத்திலே, அவருடன் முகத்தளவால் நட்புச் செய்து உள்ளத்திலே போற்றாது நீக்கிவிடுதல் வேண்டும்.

Read more at: http://tamil.oneindia.in/art-culture/kural/83.html


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 347
Date:
Permalink  
 

  • Vijay Kumar அன்பு சகோ. Peter Samuel S
    திரு.சர்ச்சில் சாமுவேல் (யௌவனஜனம்) அவர்களை தாங்கள் தற்போது புரிந்துகொண்டது நல்லது. விரைவில் இவர் அனைவராலும் அடையாளம் காணப்படுவார். எல்லோரும் அவரை விட்டு விலகினாலும் அவருக்கு கவலையில்லை காரணம் அவர் யௌவனஜனம் என்ற மிகப்பெரிய குழு
     வைத்திருக்கிறார். அவர்கள் அவருக்கு ஆதரவாக கமெண்ட் எழுதியும் லைக் போட்டும் உற்சாகப்படுத்துவார்கள். அவரது குழு என்ன என்பது அனைவருக்கும் தெரியும். அவரே அந்தக் குழுவாகவும் அந்தக் குழுவே அவராகவும் இருக்கிறார்கள்.

    ஒரே ஒரு சிறிய விளக்கம் //விஜய் போன்றோருடன் இணைந்திருந்தபோது அன்னிய பாஷை பேசும் எல்லோரையும் குண்டலினி ஆவி என்று விமர்சித்த இவர்//

    அந்நிய பாஷை பேசுவோரெல்லோரும் குண்டலினி என்று நான் சொல்லவில்லை. அப்படி ஒருபோதும் சொல்லமாட்டேன். பிரச்சனைக்கு காரணமான எனது "கவரிங் கிறிஸ்தவம்" என்ற கட்டுரையில் சொல்லப்பட்ட கிறிஸ்தவத்தை வியாபாரமாக்கும் தேவபயமற்ற நபர்கள் தங்கள் கூட்டங்களில் இறக்கும் ஆவியையே "அந்நிய அக்கினியாகிய குண்டலினி" என்று விமர்ச்சித்திருந்தேன். இதை இங்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன். நன்றி!

    தொடர்புள்ள பதிவு: http://wp.me/pSfJW-ei
  • Immanuel Abraham //இவரது எதிரிகள் அனைவரையும் என்னுடைய எதிரிகளாகவும் நான் ஆக்கிக்கொள்ளவேண்டும் என்பதுதான் இவரது எதிர்பார்ப்பு // Peter Samuel S 

    கலியாணம் பண்ணிக் கொண்ட பொண்டாட்டியிடம் எதிர்பார்க்க வேண்டியதை வெளியில் எதிர்பார்த்தால்..இ இவரை என்ன செய்வது ..!? கீழ்பாக்கம் மனநல் மத்துவமனையில் உள் நோயாளியாய் சேர்க்கப்பட வேண்டிய நபர்தான் இந்த சாமுவேல் சர்ச்சில் என்ற Yauwana Janam
    3 hours ago · Edited · 1
  • Immanuel Abraham இவரது பொழுதுபோக்கு என்ன என்று தெரியுமா? கீழே அவருடைய வாக்குமூலத்தைப் பாருங்க..,
    Immanuel Abraham's photo.
  • Peter Samuel S Dear Brother Vijay Kumar, இவரை நான் ஏற்கனவே புரிந்துகொண்டிருந்தாலும், நட்புக்கு களங்கம் வரக்கூடாதே என்று தான் சகித்து, அமைதலாயிருந்துவந்தேன். 
    //அந்நிய பாஷை பேசுவோரெல்லோரும் குண்டலினி என்று நான் சொல்லவில்லை. அப்படி ஒருபோதும் சொல்லமாட்டேன்.//ஆம். நீங்கள
    ் அந்நிய பாஷை குறித்து என்ன கருத்தைக் கொண்டிருக்கிறீர்கள் என்றும், அப்படி சொல்லமாட்டீர்கள் என்றும் எனக்குத் தெரியும். தங்கள் சமீபத்திய கட்டுரை மூலம் தங்களை இன்னும் புரிந்துகொண்டிருக்கிறேன். நான் எழுதியிருக்கும் கருத்து : உங்களோடு சேர்ந்திருந்தபோது அவர் அந்த கட்டுரைக்கு ஆதரவாக வெளியிட்ட கருத்து அடிப்படையிலான அவரைக்குறித்த விமர்சனம்.
  • Vijay Kumar மிக்க நன்றி சகோதரரே! சிலர் நம்மை விட்டு விலகுவதும் நமக்கு நன்மைதான் 
  • Paul Prabhakar யௌவன ஜனம் தன்னுடைய மாபெரும் குழுவுடன் ஒரு மாபெரும் தாக்குதல் நடத்த ஆலோசனை நடத்துவதாக அறிகிறேன் . ஏஏஏ யாருய்யா அது வழிய மறிச்சுகிட்டு.தள்ளி நில்லுய்யா .. யௌவன ஜனம் காமெடிப்படை வருது ஈட்டி அம்போட வாறாங்க .எங்கயாவது படாத எடத்தில குத்திடப்போது . தள்ளி நில்லுங்கய்யா ...
    2 hours ago via mobile · 3
  • Philip Seelan Seelan YAUEANA JANAM விசித்திரமான ஜென்மம்,
    எதிரியை கூட மன்னிக்கலாம்,
    சதிகாரனை மன்னிப்பது கடினம்.
    2 hours ago via mobile · 2
  • Immanuel Abraham Yauwana Janam கிறிஸ்தவனாக இருக்கவே முடியாதுங்கறேன்.https://www.facebook.com/photo.php?fbid=569521859798141...
  • Paul Prabhakar விஜிபி ஊழியத்தில் சில நாட்கள் இருந்துவிட்டு வெளியேறி அதே விஜிபி யை மறைந்திருந்து தாக்கியிருக்காப்ல .யௌவனா ஒரு கேள்விக்குறி .
    2 hours ago via mobile · 2


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 347
Date:
Permalink  
 

பின்னூட்டங்கள்...


  • Paul Prabhakar //// இவரது புகைப்படம் முகநூலில் வெளியாகும்வரை தன்னை ஒரு , சத்தியமல்லாத எல்லாவற்றையும் எதிர்ப்பவராகவும் காட்டிக்கொண்டிருந்த இவர் டிஜிஎஸ், மோசிலா, சாது, விசெ போன்றவர்கள் உட்பட எல்லா பிரபல ஊழியர்களையும் விமர்சித்திருக்கிறார். மிகக் கடினமாக எல்லோரையும் தாக்கியிருக்கிறார். இவரது புகைப்படம் வெளியான பின் எல்லா பிரபல ஊழியர்களுக்கும் ஆதரவாளனாக தன்னை காண்பிக்க ஆரம்பித்தார்./// 100% உண்மை .
    5 hours ago via mobile · 4
  • எக்காள சத்தம் Are "Yauwana Janam" "Samuel Chuchil" "Chillsam" same person? Just for a clarification...
  • Madona Meon ஆதாரமில்லாமல் அவதூறு செய்யாதிருப்பது யாவருக்கும் நலம்...
  • Paul Prabhakar மடோனா மேடத்துக்கு கோபம் வந்திருச்சு .வாங்க எல்லாரும் ஓடிப்போய் ஒளிஞ்சிக்கலாம்
    5 hours ago via mobile · Edited · 8
  • Paul Prabhakar இன்னும் ஒரு வாரத்துக்கு யௌவன ஜனம் காமெடி பண்ணுவாப்ல. செம காமெடியாக இருக்கும் . ஜாலி தான் .
    5 hours ago via mobile · 4
  • Johnson Kennedy அருமை சகோதரன்.பீட்டர் சாமுவேல் அவர்களை யௌவன ஜனம் என்பவன் பகைத்தான் என்றால் இவன் மனிதனே இல்லை..........
  • Paul Prabhakar கடந்த டிசம்பர் 2013 மூன்றாம் வாரம் நான் Samuel Churchill அவரிடம் 1:35 மணி நேரங்கள் கைபேசியில் பேசினேன் . அவருடையதே தனி உலகம் . யார் போன் பண்ணினாலும் பேச்சுக்கள் ரெகார்டிங் பண்ணுகிறார். அனைவருடைய முகநூல் எழுத்துக்கள ஸ்கிரீன் ஷாட் எடுத்து பத்திரப்படுத்தி வைக்கிறார் .எல்லார் பெயரிலும் Folder வைத்திருக்கிறார்ராம். நாமே ஒதுங்கி இருந்தாலும் நமக்காக ஒசி விளம்பரம் செய்வது . இணையத்தின் பிரபலமும் இவரே . பிராப்ளமும் இவரே . இப்படி ஒருத்தர் இருப்பதால் தான் இணயம் கலகலப்பு குறையாமல் இருக்கிறது . இவரிடம் நீண்ட நாட்கள் நட்பு பாராட்டமுடியாது . இவரும் யாருடனும் நீண்ட நாள் நட்பாக இருக்கவும் முடியாது . இவருடைய நீண்ட நாள் ஆசை எப்படியாவது பேஸ்புக் ஒழியணும் . ஆக்டிவ் போர்டு வாழணும். அம்புட்டு தான் .- தொடரும் .
    3 hours ago via mobile · 5
  • Immanuel Abraham // சுய பெருமையில் சிக்கிவிட்ட இவரிடம், மாற்றுக்கருத்தை சொல்லும் யாராயினும் எதிரியாகிவிடவேண்டிய துர்பாக்கிய நிலை.// Peter Samuel S 

    சரியாய்தான் சொல்லியிருக்கீங்க .. ஆனாலும் இவர் மனநிலை பாதித்த நபர் என்று அந்த பாஸ்டர் சொன்னது உண்மைதான் என்பது நிரூபிக்கப்படுகிறது.
  • Immanuel Abraham // தன்னை மிகவும் நேசித்து, அவருக்காக மற்றவரிடம் போராடிய ஒரு இளைஞரை இவர் நடத்திய விதம் எனக்கு மிகவும் அதிர்ச்சி.// Peter Samuel S 

    அருமையான வளரும் எழுத்தாளரை எழுதவிடாமலே தடுத்து துரத்திய இவரது செயலை எல்லாரும் பாராட்ட வேண்டுமென்று எதிர்பார்க்கிறார் என்றால் அது பைத்தியக்காரத்தனத்தின் உச்சமல்லவா?


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 347
Date:
கும்மியடி பெண்ணே...கும்மியடி, குலுங்க குலுங்கி கும்மியடி..!
Permalink  
 


திரு.பீட்டர் சாமுவேல் அவர்களிடமிருந்து ஒரு அறிக்கை..!

நண்பர் Yauwana Janam அவர்களிடம் அவர்களது எழுத்து, கருத்து, உறுதியான மனோபாவம் போன்றவை எனக்குப் பிடித்தமானவை. அதன் அடிப்படையில் அவரிடம் நேரில் அறிமுகமாகி உண்மையான நட்பு பாராட்டி வந்தேன். 

அவர் துருபதேசங்களை எதிர்த்து போராடி வருவதால் அவரோடு இணைந்து நானும் போராடியிருக்கிறேன். கிறிஸ்தவத்திலுள்ள பலவிதமான குழப்பங்களைக்குறித்து இணைந்து பேசியும் எழுதியும் இருக்கிறோம். பல விஷயங்களில் ஒத்த கருத்துடையவர்களாய் இருந்திருக்கிறோம். 

எந்த மனிதனிடமும் சுமூகமான உறவை விரும்புபவன் நான். உபதேச ரீதியான கருத்துக்களில் வரும் விவாதங்களில் கூட அமைதியாக வேத அடிப்படையில் என் கருத்தை அமைதியாகக் கூறவும், ஆனால் அந்த மனிதரிடம் அன்பாக இருக்கவுமே பெரும்பாலும் நான் முயல்வேன். வேண்டுமென்றே என்னை சீண்டி கோபப்படுத்தி, என்னிடம் ஆவியின் கனி இல்லையென்று விமர்சித்த ஒரு சிலரிடம் தவிர யாரிடமும் சண்டையிடும் விருப்பம் எனக்கு எப்போதுமே இல்லாதிருந்தது. எந்த மதத்தவனாயினும் மனிதரை சமமாக நேசித்து, அவர்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் பண்புடன் இருக்கவே எப்போதும் விரும்புவேன். பிழையான உபதேசத்தை சுட்டிக்காண்பிக்கும்போது அவர்களின் விசிறிகள் வேண்டுமென்றே என்னை சீண்டினாலொழிய நானாக யாரிடமும் பிணக்கு கொள்வதில்லை. யாரையும் தனிப்பட்ட தாக்குதல் நடத்தவும் விரும்புவதில்லை. 

என்னுடைய குணத்திற்கு நேரெதிரான குணமுடைய நண்பர் அவர்கள், என் நண்பர்கள் பட்டியலில் உள்ள அநேகரிடம் பல விஷயங்களில் மோதிக்கொண்டிருப்பவர். அவர் ஆதரித்த சிலரைக்கூட பின்னாட்களில் தொடர்ந்து தனிப்பட்ட முறையில் தாக்கிக்கொண்டிப்பதை விருப்பமான பொழுதுபோக்காக கொண்டிருப்பவர். தன்னை மிகவும் நேசித்து, அவருக்காக மற்றவரிடம் போராடிய ஒரு இளைஞரை இவர் நடத்திய விதம் எனக்கு மிகவும் அதிர்ச்சி. இவரிடம் யாரும் தொடர்ந்து நட்புறவில் இருந்துவிட முடியாது. யாரையும் நேசிக்கும் பண்பு என்பது இவரிடம் இல்லையே என்று நான் பலமுறை வருந்தியதுண்டு. இவருக்கு ஆலோசனை சொல்பவர்களை உடனடியாக எதிரியாக்கிக் கொள்வது இவரது கொள்கை. 

தான் மட்டுமே பெரியவன். தன்னுடைய கொள்கையே உயர்ந்தது. தன்னிடம் வெளிப்படும் கருத்துக்கள் மட்டுமே ஆவியானவர் தருவது என்ற சுய பெருமையில் சிக்கிவிட்ட இவரிடம், மாற்றுக்கருத்தை சொல்லும் யாராயினும் எதிரியாகிவிடவேண்டிய துர்பாக்கிய நிலை. 

இவரது நட்பு வளையத்தில் புதியவர்கள் மட்டுமே இருப்பார்கள். ஏனெனில் யாரோடும் அன்பு பாராட்ட அறியாத, அன்பு என்றால் என்னவென்றே அறியாத இவரது குணத்தை அறியாதவரை, இவரது எழுத்துக்களை நம்பி வரும் புதியவர்கள் இவரிடம் சிலகாலம் நட்பாக இருப்பார்கள். மற்றப்படி முகநூலில் இவரிடம் அதிகநாள் நட்பாக இருப்பவர்கள் இவரது போலி முகவரிகளும் முகநூலில் அதிகமாக வராமல் இவருக்கு தங்கள் முகவரியை தாரை வார்த்தவர்களுமே. 

என்னிடம் இவரது எதிர்பார்ப்பு என்பது இவரது எதிரிகள் அனைவரையும் என்னுடைய எதிரிகளாகவும் நான் ஆக்கிக்கொள்ளவேண்டும் என்பதுதான். ஆனால் அது என்னால் இயலாது. என் ஆண்டவர் அன்பு பாராட்டவே சொல்லியிருப்பதால் நீங்கள் வேண்டுமானால் என் நண்பர்கள் அனைவரையும் நண்பராக்கிக்கொள்ளுங்கள் என்று நான் கூறுவேன். 

எப்படியோ, நட்புக்கு துரோகம் செய்யக்கூடாது என்ற உணர்வில் மாத்திரம் நான் இருந்ததால் இவரது எந்த தவறையும் கண்டுகொள்ளாமல் இருக்கப் பழகிக்கொண்டேன். 

இவரது புகைப்படம் முகநூலில் வெளியாகும்வரை தன்னை ஒரு சத்தியவானாகவும், சத்தியமல்லாத எல்லாவற்றையும் எதிர்ப்பவராகவும் காட்டிக்கொண்டிருந்த இவர் டிஜிஎஸ், மோசிலா, சாது, விசெ போன்றவர்கள் உட்பட எல்லா பிரபல ஊழியர்களையும் விமர்சித்திருக்கிறார். மிகக் கடினமாக எல்லோரையும் தாக்கியிருக்கிறார். இவரது புகைப்படம் வெளியான பின் எல்லா பிரபல ஊழியர்களுக்கும் ஆதரவாளனாக தன்னை காண்பிக்க ஆரம்பித்தார். 

விஜய் போன்றோருடன் இணைந்திருந்தபோது அன்னிய பாஷை பேசும் எல்லோரையும் குண்டலினி ஆவி என்று விமர்சித்த இவர், விஜய் யை விட்டு விலகினபின் விஜய் யை விமர்சிக்க குண்டலினி என்ற வார்த்தையை பயன்படுத்திக்கொண்டார். அப்போதே இவர் நம்பகத் தன்மையை இழந்துவிட்டார். 

விஜய் பயன்படுத்திய மீன் சின்னத்தைக் குறித்து மிகக் கேவலமான பதிவை வெளியிட்டதிலிருந்து இவர்மீதிருந்த நன்மதிப்பு அடியோடு சிதைந்துவிட்டது. ஆனாலும் பொறுமையாகவே இருந்தேன். சாதாரண மனிதனாக இருந்தால் நட்பு அடிப்படையில் குற்றத்தை சுட்டிக்காட்டி திருத்த முயன்றிருக்கலாம். ஆனால் இவரிடம்தான் அது பலிக்காதே. 

அதன்பின் தொடர்ச்சியாக அவர் முன்பு எழுதிய பல கருத்துக்களுக்கு முரணாக நேரெதிர் கருத்துக்களை எழுத ஆரம்பித்தார். சிலரை திடீரென ஆதரிப்பார், திடீரென எதிர்ப்பார். ஏன் ஆதரிக்கிறார், ஏன் எதிர்க்கிறார் என்று ஒன்றும் புரியாது. 

சமீப காலங்களில் இவர் ஆண்டவருக்காக எழுதியதை விட, தன்னை எதிர்ப்பவர்களை விமர்சித்து எழுதியவைகளே அதிகம். பகல் முழுவதும், இரவும் முழுவதும் கண்விழித்திருந்து தன் நியாயத்தை நிலைநாட்ட போராடிய நேரங்களே அதிகமாக இருந்தது. தன்னுடைய புகைப்படம் வெளியாக்கப்பட்ட ஒரே காரணத்தினால் ஒரு குறிப்பிட்ட பெந்தேகொஸ்தே பாஸ்டரை எதிர்க்கும் இவர், அவரை வேறு எந்த வகையிலும் அறிந்திராதவர், நானும் அவரை எதிர்க்கவேண்டுமென்று எதிர்பார்த்தார். 

வாச்மன் பிரதர்ஸ், தங்கள் விசுவாசத்தை தெளிவாக வெளியிட்டிருக்கிறார்கள். அதில் எந்த தவறும் நான் காணவில்லை. அப்படியிருக்க, அவர்களில் ஒருவரை எப்போதும் பிளாக் ஷீப் என்று கூறி விமர்சித்தாலும் அவர்கள் கண்டுகொள்வதில்லை. அவர்களை நானும் எதிர்க்கவேண்டுமென்று எதிர்பார்த்தார். நான் உடன்படாததால் என்னை விட்டு சிறிது சிறிதாக விலக ஆரம்பித்தார். 

இவர் தன்னை ஒரு பெந்தேகொஸ்தே பாஸ்டர் என்று தான் அறிமுகமாகியிருந்தார். இவரது சுயசரிதை புத்தகத்தில் பாஸ்டர் என்றுதான் தன் பெயரை எழுதியிருக்கிறார். இவர் காண்பித்த கன்வென்ஷன் நோட்டிசில் கூட பாஸ்டர் என்றுதான் எழுதப்பட்டிருந்தது. ஆனால் இவர் ஒட்டுமொத்த பெந்தேகொஸ்தே பாஸ்டர்களையும் தவறாக விமர்சித்தார். இது என் மனதை மிகவும் புண்படுத்தியது. 

பால் தினகரன் போன்றோர், ஏழைகளிடம் பல வித்தைகள் காண்பித்து காணிக்கை வாங்கி தங்கள் வாழ்வை மேம்படுத்திக்கொண்டு வாழ்வதை இவர் இப்போது ஆதரிக்கிறார். இவரது புகைப்படம் வெளியாகுமுன் புனை பெயரில் அவர்களை எதிர்த்தவர், இவரது புகைப்படம் முகநூலில் வெளியான பின் இப்படி செயல்படுவது, இவர்மேல் இருந்த நம்பகத்தன்மையை முற்றிலும் நீக்கிவிட்டது. 

ஏன் இப்படி முரண்படுகிறீர்கள் என்று கேள்விகேட்ட ஒரே காரணத்துக்காக என்னையும் பகைத்து, என் புகைப்படம் போட்டு என்னை விமர்சித்திருக்கிறார். இவர் நேர்மையாளராக இருந்திருந்தால் என் அனுமதி பெற்று என் புகைப்படம் வெளியிட்டிருக்கலாமே. அல்லது குறைந்தபட்சம் எனக்கு விளக்கமளித்து கருத்து எழுதவாவது அந்த பக்கத்தில் வாய்ப்பு தந்திருக்கலாம். 

என் புகைப்படத்தை பயன் படுத்துவதால் நான் ஒன்றும் குறைந்துபோகவில்லை. ஆனால் இவரது புகைப்படம் வெளியானபோது எப்படி குதித்தார் என்பது முகநூல் உலகம் அறியுமே. 

உண்மையில் நான் இவரை வெறுக்கவில்லை. என்னைப்பற்றி எழுந்த விமர்சனத்துக்கு பதிலாகவே இதை எழுதியுள்ளேன். என் இதயத்தில் யாரைக்குறித்தும் எந்த வெறுப்பும் கசப்பும் இல்லையென்பதை ஆண்டவர் மட்டுமே அறிவார்.

அறிக்கையின் பின்னணி...

Fb.Peter.Unfriend.JPG



Attachments
__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard