அத்தனை எளிதானல்ல தீட்டான பொழுதுகள்..வயித்தை முறுக்கி முறுக்கி வலிக்கும்... இடது காலொடிந்து போற மாதிரி வலி முடக்கிவிடும்..இடுப்பொடைந்து அந்த மூன்று நாட்கள் அத்தனை எளிதல்ல.......சமயத்தில் வயித்தால போகும் வாந்தியும் வரும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.. சுமார் 14 வயதில் இருந்து ஆராம்பிச்சிடுது எங்களுக்கான இந்த பெரும் அசிரத்தை......................சுமார் 45 வயது வரை.. மாதம் 5 முதல் 7 நாட்கள் உதிரப்போக்கு.............முதல் மூன்று நாள் வலிகள்
வாழ்க்கை இம்சையான தருணங்களை மாத மாதமென சுமார் 30 ஆண்டுகள் அனுபவிக்கும் பெரும் பாக்கியம் எங்களுடையது....அந்த தீட்டு துணி நனைந்தவேளை இருக்கும் அருவெறுப்பும் அதை மாற்றும் சக்தியும் மாற்றாமல் இருக்கவும் இயலாமல் இருக்கும் கொடுமை இருக்கே......அசிரத்தையின் உச்சம்...அதை அகற்றி அடுத்தொன்று பயன்படுத்தி இந்த இடைப்பட்ட நொடிகள் தான் பெண்ணாய் பிறந்த எங்கள் நொடிகளை நாங்களே போற்றிக்கொள்வோம்.......இன்னும் கொடுமை அதை டிஸ்போஸ் பண்ணுவது.. எங்கள் உதிரம் தான் எங்களுக்கே சகிக்காது..அதை கடந்து அத்தனை எளிதல்ல நாகரீகம் கண்ட எங்கள் நிலை வீட்டில் இருக்கும் அப்பா, அண்ணன், கணவன், தம்பி, மாமா, சித்தப்பா, என இத்தியாதி ஆண்களின் பார்வைக்கு படாமல் அதை நகர்த்தி செல்வது...............
எல்லாம் எங்களுக்கும் தெரியும் என்ற போதிலும் தீட்டுத்துணியை ஆணின் எதிரில் கொண்டு செல்லும் பக்குவமும் திடமும் பொதுவாக்கும் எண்ணமும் பரவாலாகவில்லை எங்கள் பார்வையில்...
இதை அறியாது கேள்வி கேட்கும் குழந்தைகள்.. உடனே புரியவைக்கனும் என்ற கேள்வி அம்பை எய்ய வேண்டாம்...அதன் சங்கடம் கொடுமை.. என்ன சொல்வோம் 5ல் இருந்து 10க்குள் இருக்கும் குழந்தைகளுக்கு .. பாத்ரூமில் டஸ்ட்பின்னும் இட்டாலும் அதை அடுத்து செல்பவர் பார்வையில் படுமே என்ற மனச்ச்ங்கடம் உதிரப்போக்கை விட சங்கடம்....
அதிலும் வேலைக்கு செல்லும் பெண்கள் வெளியூர் பயணப்பொழுதுகளில் இதன் இடையூறு சொல்லில் மாளாது... எங்கே அணிந்து இருக்கும் உடையில் நனைந்திடுமோ என்ற் எண்ணம் மட்டுமே... எழும் உக்காரும் போது பின் பக்கம் உடையை சரி செய்வது போல் தொட்டுப்பார்த்துக்கொள்வதும்.. நாஃப்கினை சரியான நேரத்திற்கு மாற்ற இயலாமல் படும் அவதி இருக்கிறதே........எல்லாம் முடிந்த அந்த 6 வது நாள் இரண்டு கால்களின் இடுக்கும் இறுக்கத்தில் எரிந்து புண்ணாகி இருக்கும்...................போதும்ய்யா இந்த பொம்பளை ஜென்மம்..............................
பெண்ணை கடவுளாய், தாயாய், மகளாய், சினேகிதியாய்,தமக்கையாய், சித்தி பெரியம்மாவாய், வழிகாட்டியாய் இன்னுமின்னும் சிறப்பாய் நோக்கும் எல்லா பார்வைகளுக்கும்
இதே பெண்ணை.. பிகராய், பார்ட்டியாய், கூப்பிடா படிவா மச்சியாய், ஆண்டியாய், வேசியாய், புருஷபசிகொண்டவளாய், மிருகமாய் இன்னுமின்னும் கேவலமாய் பார்க்கும் அனைத்து துஷ்பிரயோகப்பார்வைக்கும் சொல்லிக்க ஆசை பட்டது இது
தீட்டுத்துணி நனைந்து நாங்களிருக்கும் தருணங்கள் கொடிது இதை கடந்து பெரிசல்ல எங்களை வார்த்தைகளாய், பிண்டங்களாய், உறுப்புகளாய் மிக கேவலமாய் கொள்ளும் பார்வைகள்..........!