Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஒரு கதையினால் கத்தோலிக்கரை பரியாசம்பண்ணும் பெந்தெகொஸ்தே பாஸ்டர்


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: ஒரு கதையினால் கத்தோலிக்கரை பரியாசம்பண்ணும் பெந்தெகொஸ்தே பாஸ்டர்
Permalink  
 


இதுபோன்ற கதைகளால் கத்தோலிக்க மக்களை ஆதாயப்படுத்தமுடியுமா என்று தெரியவில்லை. இப்படியே பெந்தெகொஸ்தே சபைகளிலும் சத்தியத்தை சத்தியமாக சொல்லாமல் மற்ற சபைகளைப் பரியாசம்பண்ணி அதன்மூலம் தங்களை உயர்த்திக்கொள்ள்வே பார்க்கிறார்கள். அதுபோன்ற செயல்களால் ஒரே தேவனை ஆராதிக்கும் மக்களுக்குள் தேவையற்ற கசப்பும் பிரிவினையுமே பெருகியிருக்கிறது. இதனை சிந்திக்கும் திறனுடையோர் உடனே நிறுத்தவேண்டும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோரைக் கண்டிக்கவும் முன்வரவேண்டும்.

Story.JPGStory2.JPGStory3.JPG

 

Immanuel Abraham's photo.

Story4.JPGStory5.JPG

 

Immanuel Abraham's photo.

Story6.JPGStory7.JPG



Attachments
__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
ஒரு கதையினால் கத்தோலிக்கரை பரியாசம்பண்ணும் பெந்தெகொஸ்தே பாஸ்டர்
Permalink  
 


21 December 2013 at 09:44

(படித்ததில் பிடித்தது)

 

பெந்தேகோஸ்தே ‘பாஸ்டர்’ ஒரு குதிரை வைத்திருந்தாராம். அந்தக்குதிரை மேல் ஏறி அமர்ந்து கொண்டு ‘இயேசுவுக்குப் புகழ்’ என்றால்.. அது ஓடுமாம். அல்லேலுயா.., அல்லேலுயா.., எனச் சொல்ல, சொல்ல அந்தக்குதிரை வேகமெடுக்குமாம்.

 

அதன் மேல் சவாரி செய்யும் பாஸ்டர் ‘ஆமென்’ என்று சொன்னவுடன் அந்தக்குதிரையும் நின்று விடுமாம். அந்தக்குதிரையில் பாஸ்டர் போவதைப் பார்ப்பதற்காகவும், வாய்ப்பு கிடைத்தால் நாமும் பயணிக்கலாமே என்றும், அநேக மக்கள் கூட்டம், கூட்டமாகப் பாஸ்டரிடம் போவார்களாம். இதைப் பார்ப்பதற்காக பக்கத்தில் உள்ள மலைப்பகுதியில் உள்ள மாதா கோவிலில் உள்ள கத்தோலிக்க பக்தர்களும் வரத்துவங்கி விட்டனர். பூசை நடத்த வந்த கத்தோலிக்க குருவுக்கு பயங்கர அதிர்ச்சி...!

 

ஒரு சில வயதானவர்கள் தவிர யாருமே மாதா கோவிலில் இல்லை..! இப்படியேப் போனால் நமது கத்தோலிக்க கூடாரமே காலியாகி விடுமே..! என பயந்த கத்தோலிக்கச் சாமியார் பாஸ்டருடைய குதிரையை வாங்கி விட வேண்டுமென முடிவெடுத்தார். எப்படியோ மிகவும் கஷ்டப்பட்டு கெஞ்சிக்கூத்தாடி பாஸ்டரிடமிருந்து அந்தக் குதிரையையும் வாங்கி விட்டாராம். அக்குதிரையை எப்படி ஓட்டுவது? எப்படி நிறுத்துவது? என்று மிகத் தெளிவாகப் பாஸ்டரிடம் கற்றுக்கொள்ளவும் செய்தார்.மறுநாளே கத்தோலிக்க சாமியார் அந்தக் குதிரையின் மேல் ஏறி அமர்ந்தார். மாதா புகழ் மட்டுமே பாடிப்பழக்கப்பட்ட குரு ‘இயேசுவுக்குப்புகழ்’ என்று சொன்னதும், அந்தக்குதிரை மிகவும் வேகமாக மலை உச்சியை நோக்கி ஓடியது.

 

முன்பின் பழக்கமில்லாத வார்த்தைதான் என்றாலும் மக்களை மீன்டும் இழுக்கனுமே..! என கஷ்டப்பட்டு அல்லேலுயா...! அல்லேலுயா என இவர் சொல்லச் சொல்ல அந்தக்குதிரை வேகமெடுத்தது.

 

முதலில் மகிழ்ச்சி அடைந்த கத்தோலிக்கக் குருவுக்கு இப்போது உடலெல்லாம் நடுங்கி வேர்த்துக்கொட்டியது. காரணம், இன்னும் சில மீட்டர் முன்னே சென்றால்.., பாதாளத்தில் விழவேண்டியிருக்கும். இப்படிப்பட்ட ஆபத்தான நிலையில் எப்படியோ ‘ஆமென்’ என்று சொல்லி குதிரையை நிறுத்திவிட்டார். இரண்டே அடி தூரத்தில் பெரிய பள்ளம். அப்பாடா..! பேராபத்திலிருந்து தப்பி விட்டோம்…! இனி மிகவும் கவனமாக இருக்கனும்.

 

பாஸ்டரிடம் போய்விட்ட மக்களை எல்லாம் மீன்டும் நம்மிடம் கொண்டு வந்து விட வேண்டும். என்ற முடிவுடன் தப்பித்து விட்டோம் என்ற மகிழ்ச்சியில் என்ன செய்கிறோம் என்ன சொல்லுகிறோம் என்று கூட யோசிக்காமல்…, “இயேசுவுக்குப் புகழ்” என்று சொல்லி விட்டார். உடனே அந்தக்குதிரை, கத்தோலிக்க குருவுடன் பாதாளத்தில் குதித்துவிட்டது.

 

இது கற்பனைக் கதையாக இருந்தாலும் இதன் உள்ளே ஒரு அருமயான செய்தி இருக்கிறது.பாடல் பாடுவதும் சத்தமாய் துதிப்பதும் மட்டுமே ஆவிக்குரிய சபைகளின் ஆராதனை முறை… அதற்காகத்தான் திரளான மக்கள் ஆவிக்குரிய சபைகளில் ஐக்கியமாகிறார்கள் என நினைத்துக்கொண்ட கத்தோலிக்கர்களும், சி.எஸ்.ஐ-க்காரர்களும், வேதவசனம் உட்பட யாருக்கும் கட்டுப்படாத சுவிஷேசகர்கள் மற்றும் பெந்தெகோஸ்தே வேடம் தரித்த குள்ள நரிகளும்…  ஆவிக்குரிய சபைகளைப்போல நாமும் நடத்துவோம் என,

 

நம்மைப் (ஆவிக்குரிய சபையினரை) போல துதி, ஆராதனை நடத்த முயற்சிக்கிறார்கள். அநேகர் நடத்திக் கொண்டும் இருக்கிறார்கள். இதனால் ஏதோ பெரிய ஊழியம் செய்து விடுவதாக கனவு காண்கிறார்கள். கடைசியில் நடக்கப் போவது என்னத் தெரியுமா? இவர்களும் இவர்கள் செய்யும் ஆவிக்குரிய சபையினரைப்போன்ற ஆராதனை முறைகளும் கூட, பாதாளத்தில் தள்ளுண்டு போகும். விவரம் அறியாமல் இவர்களுடன் ஆராதிப்பவர்கள் தப்புவிக்கப்படலாம். 

 

வேத வசனம் நம்மைத் தெளிவாக எச்சரிக்கிறது. ...அதிக ஆக்கினை அடைவோம் என்று அறிந்து, உங்களில் அநேகர் போதகராகாதிருப்பீர்களாக. (யாக் 3:1)  இதை அவர்களுக்கு மட்டும்  நினைவுபடுத்தி எச்சரிப்பது அல்ல நமக்குமே இது அவசியம் என்பதினாலே இதை எழுதுகிறோம்.

 

1524782_560307220719605_1203066934_n.jpg



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard