கூத்தாடி பாட்டைக் கெடுத்தான் கதையாக நுட்பமானதொரு உணர்வில் சிக்கியிருக்கும் கத்தோலிக்க மக்களுடன் வாதிட்டு வெல்ல முயற்சிக்கும் அரைவேக்காட்டு பெந்தெகொஸ்தே பாஸ்டர் இம்மானுவேல் ஆபிரகாம் கத்தோலிக்க வேதத்திலிருந்து கத்தோலிக்கர்களுக்கு சத்தியத்தை சொல்ல முயற்சித்திருக்கிறார்.அவர் எடுத்துக்கொண்ட களம் கானாவூர் கலியாண வீட்டின் சம்பவம். அதில் ஒரு வசனத்தைக் குறிப்பிட்டு அதிலிருக்கும் ஒரு வார்த்தையைப் பிடித்துக்கொண்டு இயேசுவுக்காகப் போராடுகிறாராம். இவர் போராடியிருக்காவிட்டால் இன்றோடு இயேசுவின் மாட்சிமையே காணாமற் போயிருக்கும் போல. அந்தோ அந்த நண்பரைப் புண்படுத்தி அவரை இழந்துவிட்டார். நாமறிந்தவரையில் எத்தனையோ கத்தோலிக்க நண்பர்கள் இன்றைக்கு சத்தியத்தை தாமாகவே உணர்ந்து அவரவர் பகுதியில் சாட்சியாக விளங்குகின்றனர்.ஆனால் இந்த அரைவேக்காட்டு பெந்தெகொஸ்தே பாஸ்டரோ இதுவரை யாரிடமும் எந்தவொரு பொருளிலும் ஒரு கௌரவமான விவாதம் நடத்தி யாரையும் ஆதாயப்படுத்தியதில்லை. இவரை அழைத்துக்கொண்டு இஸ்லாமியரோடு விவாதிக்கச் சென்றவர்கள் மூக்குடைபட்டு திரும்பியதாகக் கேள்வி. கிறிஸ்தவம் ஒருபோதும் மூர்க்கத்தனமான விவாதங்களில் நம்பிக்கை கொண்டதல்ல.அதேநேரம் அதில் சூழ்ச்சியோ பரியாசமோ அல்லது வேறெந்த மதியீனமோ இருப்பதில்லை. அது முழுவதும் சத்தியம் அல்லவா ? ஆனால் சிலருடைய ஆர்வக் கோளாறினால் காரியம் கெட்டுப்போய் பிரிவினையே அதிகமாகிறது. இது பூனையை மடியில் கட்டிக்கொண்டு ஒருத்தன் ஜோசியம் பார்க்கச் சென்றது போலவே இருக்கிறது. இங்கே பெருமதிப்பிற்குரிய பெந்தெகொஸ்தே பெருமான் திரு. இம்மானுவேல் ஆபிரகாம்நடத்திய வீர விளையாட்டு பதிக்கப்படுகிறது. கண்டு மகிழவும்...