ஈவிரக்கமின்றி தேவ அன்பில்லாமல் என்னிடம் கடினமாக நடந்துகொண்டார் ஒரு பெந்தெகொஸ்தே பாஸ்டர். அவர் பெயர் இம்மானுவேல் ஆபிரகாம். அவரைப் பற்றி பலர் சொன்னவற்றைக் கேட்டு அவரை நான் மனதார நேசித்தேன். ஆனாலும் என்னைப் பற்றி எப்போதும் ஒருவித கசப்புடனே கருத்தை வெளியிட்டு வந்த அவருக்கு எதிராக கடந்த இரண்டு வருடங்களில் எதையும் எழுதியதில்லை. அவரோ ஒருவரை எதிர்த்தால் கடைசிவரை எதிர்க்கும் கொள்கையுடையவராம். அது எனக்கு தெரியாது. ஒரு வாய்ப்பு கிடைத்தால் அவரோடு சகஜநிலையை உருவாக்க விரும்பி ஜெபத்துடன் காத்திருந்தேன். அண்மையில் அவருடைய போன் வந்தது அத்தனை மகிழ்ச்சியுடன் அவருடைய போனை எதிர்கொண்டேன். இதனை சற்றும் எதிர்பாராத அவர் மீண்டும் தொடர்புகொள்ளுவதாகக் கூறி வைத்துவிட்டார். எனக்கோ இருப்புகொள்ளவில்லை. எதற்கு அழைத்தார் என்று தெரியவில்லையே என்று தவித்துக்கொண்டிருக்கையில் அவரே மீண்டும் அழைத்து என்னுடைய அன்பை எள்ளி நகையாடி என்னைப் புறக்கணித்து என்னிடமே விசாரணை செய்தார். உடனே என்னுடைய கனிவை மாற்றிக்கொண்டு அவருக்குரிய பதிலைக் கொடுத்தேன். எங்கள் அலைபேசி உரையாடல் குறித்து தனது பக்கத்தில் எழுதியிருந்த அவர் தவறான தகவல்களை அதில் பதித்திருக்க நான் எதிர்ப்பு தெரிவித்து எங்கள் உரையாடலின் ஒலிப்பதிவை வெளியிட அனுமதி கேட்டிருந்தேன். அதற்கு பதில் சொல்லாமல் அமைதி காத்தவர் இன்று வேறொரு பிரச்சினையில் என்னோடு மோதி மீண்டும் அதே பாணியில் தூஷித்துவிட்டு என்னை ப்ளாக் பண்ணியிருக்கிறார். அவர் என்னை பளாக் பண்ணும் முன்பு இருந்த பக்கத்தை சேமித்து இங்கே பதித்திருக்கிறேன். இதில் அவர் உண்மைக்கு மாறாக எழுதியிருப்பவற்றையும் என்னுடைய மறுப்பையும் ஒப்பிட்டு பார்க்க நண்பர்களை வேண்டுகிறேன். இந்த ஆளுடன் செய்யும் இதுபோன்ற வாக்குவாதங்கள் உண்மையிலேயே எனக்கு வெட்கமாக இருக்கிறது. இது காற்றுடன் போடும் சண்டைபோலவே இருக்கிறது. மாயையிலும் லேசான ஒரு மனுஷனுடன் மோதி அவனைப் பற்றி எழுதிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நல்ல செய்திகளையும் வசன அட்டைகளையும் தயாரித்து பதிக்கவே எனக்கு விருப்பம். புதிய வருடத்திலாவது இதுபோன்ற களைகளை என்னைவிட்டு கர்த்தர் அகற்றிப்போட தயவாக ஜெபிக்கவும். நன்றி.