நாம் இங்கு பதித்திருக்கும் பதிவின் பின்னணியில் இழையோடும் உணர்வைப் புரிந்துகொள்ளாமலே கருத்து தெரிவிப்பது சரியல்ல. பாஸ்டர்கள் தசமபாகத்தில் கொழிப்பது போலவும் விசுவாசி வயிறு காய்ந்து பரம ஏழையாக இருப்பது போலவும் ஒரு கிறிஸ்தவனே கேலி சித்திரம் வரையும் நோக்கமும் அவசியமும் என்ன ? அதில் கொஞ்சமாவது உண்மை இருக்கிறதா ? தசம பாகம் என்பது என்ன ? வருமானத்தில் 10% சதவீதம் அலல்வா ? வருமானத்தில் பத்து சதவீதம் கொடுத்தவன் எப்படி இப்படி பரம ஏழையாக இருப்பான் ? அப்படியானால் அவன் வேலைக்கே போகவில்லை என்று அல்லவா பொருள் ? வேலைக்கே போகாதவன் எப்படி தசமபாகம் கொடுப்பான் ? அப்படிப்பட்ட குடும்பங்களுக்கு பாஸ்டர்களே உதவி செய்கிறார்கள். கிராமங்களில் ஏழை எளிய பாஸ்டர்கள் சபையைக் கட்டமுடியாமலும் இந்து தீவிரவாதிகளிடம் சிக்கிக்கொண்டும் படும் வேதனைகளும் பாடுகளும் ஒருபுறமிருக்க அதையெல்லாம் சென்று விசாரிக்க ஆண்மையில்லாத இந்த பேடிகள்குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்துகொண்டும் அதிநவீன செல்போன் கருவிகளை கையில் வைத்துக்கொண்டும் செய்தும் ஓயாமல் செய்துவரும் இதுபோன்ற செயல்களின் பலனை அவர்கள் அடைந்தார்கள் என்ற செய்தியும் இதே தளத்தில் பகிரப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை.
//திருச்சபையின் மேய்ப்பர்கள் தொடர்பான தங்கள் சொந்த அறிவை இங்கே வெளிப்படுத்தாதிருங்கள். முக்கியமாக உங்கள் உங்கள் சொந்த உபதேசம் என்ற கலர் கண்ணாடியைத் தூக்கியெறிந்துவிட்டு மேய்ப்பன் எனும் அதிகாரத்தின் உரிமைகளையும் வரம்புகளையும் சலுகைகளையும் பற்றி முதலில் வேதத்திலிருந்து வாசித்தறியுங்கள். மற்றபடி உங்கள் எல்லா முயற்சிக்கும் என் வாழ்த்துக்கள் எப்போதும் உண்டு.//
நான் வேத வசன ஆதாரம் கொடுத்திருக்கிறேன். நீங்கள் வேத வசன ஆதாரம் எதையும் தராமலேயே பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.
மேலும் வேத வசன ஆதாரத்தோடு கொடுத்ததை சொந்த உபதேசம் என சொல்லி வேத வசனத்தையும் அவமாக்குகிறீர்கள்.
"திருச்சபை", "மேய்ப்பர்" என பெரிய வார்தைகளை உபயோகப்படுத்துவதால், அதன் பின்னே பெரும் கூட்டம் இருப்பதால் அதற்கு பயந்து சரியான கருத்தை கூறாமல் இருக்க முடியாது.
//மேய்ப்பன் எனும் அதிகாரத்தின் உரிமைகளையும் வரம்புகளையும் சலுகைகளையும் பற்றி முதலில் வேதத்திலிருந்து வாசித்தறியுங்கள்.//
இயேசு கிருஸ்து, பேதுருவை, தன்னுடைய ஆடுகளை மேய்க்கும்படிக்கு சொன்னார்.
யோவான்.21.17. மூன்றாந்தரம் அவர் அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னை நேசிக்கிறாயா என்றார். என்னை நேசிக்கிறாயா என்று அவர் மூன்றாந்தரம் தன்னைக் கேட்டபடியினாலே, பேதுரு துக்கப்பட்டு: ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர் என்றான். இயேசு: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார்.
ஆனால் பேதுருவோ தன்னை மேய்ப்பர் என சொல்லி கொள்ளாமல், மூப்பர் என அழைத்துக் கொள்வதை கீழ் வரும் வசனங்களில் இருந்து அறிந்து கொள்ளலாம். மேலும் அவர் மந்தையை தேவனுடைய மந்தை என்றும் சொல்கிறார்.
1.பேதுரு 5.1. உங்களிலுள்ள மூப்பருக்கு உடன்மூப்பனும், கிறிஸ்துவின் பாடுகளுக்குச் சாட்சியும், இனி வெளிப்படும் மகிமைக்குப் பங்காளியுமாயிருக்கிற நான் புத்திசொல்லுகிறதென்னவென்றால்: 2. உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து, கட்டாயமாய் அல்ல, மனப்பூர்வமாயும், அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல, உற்சாக மனதோடும், 3. சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல, மந்தைக்கு மாதிரிகளாகவும், கண்காணிப்புச் செய்யுங்கள். 4. அப்படிச் செய்தால் பிரதான மேய்ப்பர் வெளிப்படும்போது மகிமையுள்ள வாடாத கிரீடத்தைப் பெறுவீர்கள். 5. அந்தப்படி, இளைஞரே, மூப்பருக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.
இதிலிருந்து மேய்க்கும் தொழிலை செய்பவர்களை மூப்பர் என அழைக்க வேண்டும் என்பது தெளிவாகிறது.
இங்கு எழுதப்படும் பதிவுகளுக்கு பதில் சொல்ல முடியாதபடி பிளாக் செய்யப்பட்டுள்ளேன் என்பதை இந்த தள் பொறுப்பாளருக்கும், வாசகர்களுக்கும் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
-- Edited by SANDOSH on Monday 2nd of December 2013 12:39:48 AM
இயேசு கிருஸ்து மேய்க்கத்தான் சொல்லியிருக்கிறாரே தவிர, மேய்ப்பர் என தங்களை அறிவித்து கொள்ள சொல்லி சொல்லவில்லை. அதாவது இது ஸ்கூலில் லீடர்கள் வகிக்கும் பொறுப்பு போன்றது. லீடர் என்பவர் தன்னை டீச்சர் என சொல்லி கொள்ள முடியாது. ஆனால் டீச்சருக்கு கட்டுப்பட்டு, மாணவர்கள் மேல் அதிகாரம் செலுத்த முடியும்.
இயேசு கிருஸ்துவின் சார்பில், மந்தையை மேய்க்கும் வேலையை செய்பவர்களை வேதம் ஆடு மேய்க்கும் ஆடாகவே பார்க்கிறது. வேண்டுமானால் அவர்கள் தங்களை "ஆடு மேய்க்கும் ஆடு" என அழைத்து கொள்ளலாம். மேய்ப்பர் என தங்களை அழைத்து கொள்ள வேதத்தின்படி அதிகாரம் இல்லை.
மேலும் யோவான் 10,11 ஐ சொன்ன இயேசு கிருஸ்து, அதை சீரியஸாக சொல்லாமல், சும்மா ஜோக் அடித்தாரா எனவும் சொல்லவும்.
//அவரே பாஸ்டர்கள், அதாவது மேய்ப்பர்களை நியமித்துச் சென்றார் என்பதை நீங்கள் அறியவேண்டும். உங்கள் உபதேசத்தில் அது இல்லாவிட்டால் வேதத்தில் இல்லையென்று பொருளாகாது.//
தங்களை மேய்ப்பர்கள் என அழைத்து கொண்டவர்கள் / அழைக்கப்பட்டவர்கள் பற்றி வேத ஆதாரம் இருந்தால் தாருங்கள்.
திருச்சபையின் மேய்ப்பர்கள் தொடர்பான தங்கள் சொந்த அறிவை இங்கே வெளிப்படுத்தாதிருங்கள். முக்கியமாக உங்கள் உங்கள் சொந்த உபதேசம்என்ற கலர் கண்ணாடியைத் தூக்கியெறிந்துவிட்டுமேய்ப்பன் எனும் அதிகாரத்தின் உரிமைகளையும் வரம்புகளையும் சலுகைகளையும் பற்றி முதலில் வேதத்திலிருந்து வாசித்தறியுங்கள். மற்றபடி உங்கள் எல்லா முயற்சிக்கும் என் வாழ்த்துக்கள் எப்போதும் உண்டு.
இயேசு கிருஸ்து மேய்க்கத்தான் சொல்லியிருக்கிறாரே தவிர, மேய்ப்பர் என தங்களை அறிவித்து கொள்ள சொல்லி சொல்லவில்லை. அதாவது இது ஸ்கூலில் லீடர்கள் வகிக்கும் பொறுப்பு போன்றது. லீடர் என்பவர் தன்னை டீச்சர் என சொல்லி கொள்ள முடியாது. ஆனால் டீச்சருக்கு கட்டுப்பட்டு, மாணவர்கள் மேல் அதிகாரம் செலுத்த முடியும்.
இயேசு கிருஸ்துவின் சார்பில், மந்தையை மேய்க்கும் வேலையை செய்பவர்களை வேதம் ஆடு மேய்க்கும் ஆடாகவே பார்க்கிறது. வேண்டுமானால் அவர்கள் தங்களை "ஆடு மேய்க்கும் ஆடு" என அழைத்து கொள்ளலாம். மேய்ப்பர் என தங்களை அழைத்து கொள்ள வேதத்தின்படி அதிகாரம் இல்லை.
மேலும் யோவான் 10,11 ஐ சொன்ன இயேசு கிருஸ்து, அதை சீரியஸாக சொல்லாமல், சும்மா ஜோக் அடித்தாரா எனவும் சொல்லவும்.
//அவரே பாஸ்டர்கள், அதாவது மேய்ப்பர்களை நியமித்துச் சென்றார் என்பதை நீங்கள் அறியவேண்டும். உங்கள் உபதேசத்தில் அது இல்லாவிட்டால் வேதத்தில் இல்லையென்று பொருளாகாது.//
தங்களை மேய்ப்பர்கள் என அழைத்து கொண்டவர்கள் / அழைக்கப்பட்டவர்கள் பற்றி வேத ஆதாரம் இருந்தால் தாருங்கள்.
-- Edited by SANDOSH on Sunday 1st of December 2013 10:55:49 PM
தேவபயம் என்பது சிறிதுமின்றி வரைமுறையில்லாமலே பட்டங்கள் மூலம் இயேசு கிருஸ்துவுக்கு இணையாக தங்களை பாஸ்டர் எனவும், போதகர் எனவும் அழைத்து கொள்ளும் வரையில் ஏற்கனவே துணிகரம் பெருகியிருக்கிறது. இயேசு கிருஸ்துவுக்கே இணை வைக்கிறவர்கள் இருக்கும் போது, இது போன்று கேலி சித்திரம் வரைபவர்கள் எப்படி இல்லாமல் இருப்பார்கள்.
நண்பரே, இயேசுகிறிஸ்துவுக்கு இணையாக யாரும் பாஸ்டர் என்று போட்டுக்கொள்ளவில்லை. அது இயலாத காரியமாகும். அவரே பாஸ்டர்கள், அதாவது மேய்ப்பர்களை நியமித்துச் சென்றார் என்பதை நீங்கள் அறியவேண்டும். உங்கள் உபதேசத்தில் அது இல்லாவிட்டால் வேதத்தில் இல்லையென்று பொருளாகாது.
தேவபயம் என்பது சிறிதுமின்றி வரைமுறையில்லாமலே பட்டங்கள் மூலம் இயேசு கிருஸ்துவுக்கு இணையாக தங்களை பாஸ்டர் எனவும், போதகர் எனவும் அழைத்து கொள்ளும் வரையில் ஏற்கனவே துணிகரம் பெருகியிருக்கிறது. இயேசு கிருஸ்துவுக்கே இணை வைக்கிறவர்கள் இருக்கும் போது, இது போன்று கேலி சித்திரம் வரைபவர்கள் எப்படி இல்லாமல் இருப்பார்கள்.
யோவான்.10,11. நானே நல்ல மேய்ப்பன்: நல்லமேய்ப்பன் ஆடுகளுக்குக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான். 12. மேய்ப்பனாயிராதவனும், ஆடுகள் தனக்குச் சொந்தமல்லாதவனுமான கூலியாள் ஓநாய் வருகிறதைக் கண்டு ஆடுகளைவிட்டு ஓடிப்போகிறான்; அப்பொழுது ஓநாய் ஆடுகளைப்பீறி, அவைகளைச் சிதறடிக்கும். 13. கூலியாள் கூலிக்காக வேலைசெய்கிறவனாகையால் ஓடிப்போகிறான், ஆடுகளுக்காக அவன் கவலைப்படான். 14. நானே நல்ல மேய்ப்பன்; பிதா என்னை அறிந்திருக்கிறதுபோலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறதுபோலவும், 15. நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன்; ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன். 16. இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு; அவைகளையும் நான் கொண்டுவரவேண்டும், அவைகள் என் சத்தத்துக்குச் செவிகொடுக்கும். அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும்.
1.பேதுரு.2.24. நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள். 25. சிதறுண்ட ஆடுகளைப்போலிருந்தீர்கள்; இப்பொழுதோ உங்கள் ஆத்துமாக்களுக்கு மேய்ப்பரும் கண்காணியுமானவரிடத்தில் திருப்பப்பட்டிருக்கிறீர்கள்.
//இது கேலி சித்திரம் போட்டவர்களுக்கு நீங்கள் சொன்னது. இதுபோன்ற அக்கிரமக்காரர்களை அடக்க ஆளில்லாமல் போய்விடாது. கர்த்தர் நீதியுள்ள நியாயாதிபதி என்பதும் இவர்களுடைய காரியம் நியாயத்தீர்ப்புக்கு முந்திகொள்ளும் என்பதும் இவர்களுக்குக் கொடுக்கப்படும் எச்சரிப்பின் சத்தமாகும்.//
”ஆண்டவரே, எங்கள் அயலார் உம்மை நிந்தித்த நிந்தையை, ஏழத்தனையாக அவர்கள் மடியிலே திரும்பப்பண்ணும்.” -சங்கீதம் 79:12
தேவபயம் என்பது சிறிதுமின்றி வரைமுறையில்லாமலே கேலிசித்திரங்கள் மூலம் தேவ சபையின் மேய்ப்பர்களை பரியாசம் பண்ணும் வரையில் துணிகரம் பெருகியிருக்கிறது. இதுபோன்ற அக்கிரமக்காரர்களை அடக்க ஆளில்லாமல் போய்விடாது. கர்த்தர் நீதியுள்ள நியாயாதிபதி என்பதும் இவர்களுடைய காரியம் நியாயத்தீர்ப்புக்கு முந்திகொள்ளும் என்பதும் இவர்களுக்குக் கொடுக்கப்படும் எச்சரிப்பின் சத்தமாகும்.
மிகவும் நாகரீகமானவர்கள் என்று வேஷம் போடும் இவர்கள் இஸ்லாமிய தளத்தில் ஒரு வருடத்துக்கு முன்பு வெளியிடப்பட்ட ஒரு படத்தை திருடியெடுத்து அதில் இவர்களுடைய கேடான சிந்தையில் உதித்த காமெண்டுகளைப் போட்டு சபையின் மேய்ப்பர்களைப் பொத்தாம்பொதுவில் தூஷித்திருக்கிறார்கள்.
இதோ அவர்களின் தூஷிக்கும் (போலி) கேலி சித்திரமும் அதன் அசலும்...