கிறிஸ்தவம் வியாபாரமயமாகி வருவதன் சரியான அடையாளம் இதுவே. இதுபோன்ற உலகப் பிரகாரமான காரியங்களுக்கு விலகியிருக்கவே பலர் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தை எதிர்க்கிறார்கள். உண்மையான கிறிஸ்மஸ் என்பது கிறிஸ்துவைப் பற்றி அறியாதோர்க்கு அவரை அறிவிப்பதாகும்.
செக்கு மாட்டைப் போல பெருநகரங்களையே சுற்றிசுற்றி வந்து பருத்து பெருத்துவிட்ட பெருச்சாளிகளைக் குறித்து நாம் நிச்சயம் எச்சரிக்கவும் எச்சரிக்கப்படவும் வேண்டும். சர்க்கஸ் கோமாளிகள் கூட தனிப்பட்ட வாழ்க்கையில் கொஞ்சம் யோக்கியமாக இருப்பார்கள். ஆனால் இவர்களோ தொப்பையும் முகமூடியும் அணியாமலே கிறிஸ்மஸ் தாத்தா போல கலாட்டா பண்ணுகிறார்கள்.
தீனி விளையாட்டு கொண்டாட்டம் எல்லாம் இலவசமா என்றால் நிச்சயம் இருக்காது. எல்லாமே பிஸினஸ் தான். எப்படி ஒரு இஸ்லாமியர் தான் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் போன வருடம் வாங்கி விற்காமல் போன அட்டை நட்சத்திங்களை எடுத்து வியாபாரத்துக்காகத் தொங்க விடுகிறாரோ அதேபோல இவர்களும் சீஸனுக்கேற்ற வியாபாரத்தில் பின்னியெடுக்கிறார்கள். ஹோலி லேண்ட் டூர் முதலாக அனைத்துமே சீஸன் பிஸினஸ் தான் இவர்களுக்கு. மேலும் இதைவிட தூய்மையாகவே கத்தோலிக்கர்கள் பண்டிகை கொண்டாடுவார்கள். இவர்கள் அதிலிருந்து பிரிந்தவர்களும் அல்ல. இவர்கள் யாரோ எந்த சந்ததியோ தெரியவில்லை. இவர்களுடைய சரியான பெற்றோர் யார் என்றும் தெரியவில்லை.
உபாகமம் 32:5 அவர்களோ தங்களைக் கெடுத்துக்கொண்டார்கள், அவர்கள் அவருடைய பிள்ளைகள் அல்ல; இதுவே அவர்கள் காரியம்; அவர்கள் மாறுபாடும் தாறுமாறுமுள்ள சந்ததியார்.
II கொரிந்தியர் 6:17 ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானவைகளைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.