/// இங்கு எதற்க்காக பெயரைக்குறிப்பிட்டு பேசவேண்டும். என் கருத்து வசன அடிப்படையிலான பொதுவானது. எல்லாருக்கும் பொருந்தும். விற்பதை தவறென்று சொல்லவில்லை அதை ஊழியம் என்ற எல்லைக்குள் கொண்டுவரக்கூடாது. ஆப்பிள் போன் விற்பனையை நாம் எதிர்ப்பதில்லையே. ///
பெயரைக் குறிப்பிட்டு பேசுவதனால் மட்டுமே தெளிவுண்டாகும். மர்மமாக பேசுவதே அயோக்கியத்தனமாகும். தன் மாம்சமானவனுக்கு தன்னை ஒளிக்காதிருப்பது குறித்தும் வசனம் சொல்லுகிறது, அதை யாராவது மதிக்கிறார்களா ? ஆனாலும் நான் ஒருவர் ஃபேக் ஐடியாக இருந்தாலும் என்னருமை வாசக நண்பர்களுக்காக எழுதிக்கொண்டிருக்கிறேன்.
இரட்சிப்பு மாத்திரமே இலவசம். ஆனால் இரட்சிப்பு நிறைவேற உதவும் பைபிள் இலவசமல்ல. விலையில்லா கணிணி என்று சொல்லி கொடுக்கும் அரசும்கூட அதை இலவசமாகத் தருகிறதில்லை. அதற்கு இன்னொருவர் யார் யாரோ விலைகொடுத்திருக்கிறார். அனைத்தையும் இலவசமாகக் கொடுத்து இந்த தேசத்தில் கிறிஸ்தவம் எதையும் சாதிக்கவில்லை. எனவே இனி அனைத்துக்கும் விலை நிர்ணயம் பண்ணினாலாவது கொஞ்சம் மரியாதை மிஞ்சும் என்றே நினைக்கிறேன்.
/// இலவசமாய் பெற்றீர்கள் இலவசமாய் கொடுங்கள். தேவனுடைய கிருபையினாலே செய்துமுடிக்கப்பட்டவைகளை இலவசமாகவே கொடுக்க வேதம் வலியுறுத்துகிறது. தேவனுடைய கிருபையினால் உண்டாகிறவைகளையும் உலக காரியங்களையும் ஒரே விதத்தில் உங்களால் எப்படி பார்க்க முடிகிறது? ///
எதை இலவசமாகப் பெற்றீர்கள் ? அதை மாத்திரமே இலவசமாகக் கொடுக்கமுடியும். உதாரணமாக அம்மா” தண்ணி பாட்டில் இலவசமல்ல. ஆனால் லேப் டாப் இலவசம்.
சாக் பூணன் சிடி இலவசமாகக் கிடைக்கிறதா ? நியாயமான விலையில் கிடைக்கிறது அவ்வளவு தான். இங்கே எதுவும் இலவசம் இல்லை. இலவசமாக கிடைப்பது எதுவும் யோக்கியமாக இல்லை. இதுதான் நிதர்சனம்.
எக்காள சத்தம்
//அனைத்து கிறிஸ்தவர்களும் ஆதி விஸ்வாசத்துக்கு திரும்பி //
ஆமென். அப்படியே நடக்கவேண்டும். பொன்னும் வெள்ளியும் எங்களிடத்திலில்லை எங்களிடத்தில் உள்ளதை உனக்குத் தருகிறோம் இயேசுவின் நாமத்தினாலே சுகத்தைப் பெற்றுக்கொள் என சொல்லும்காலம் வரவேண்டும்.
அதெல்லாம் இனி சாத்தியமில்லை. பழைய ஏற்பாட்டின் காலத்துக்கும் புதிய ஏற்பாட்டின் காலத்துக்குமே ஏகப்பட்ட வித்தியாசங்கள் இருக்கிறது. உதாரணமாக பழைய ஏற்பாட்டில் ரபீ என்று யாரும் இல்லை. இதேபோல ஒவ்வொரு கால மாற்றத்துக்கும் ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டும் சபையானது தொடர்ந்து வளர்ந்துகொண்டுதானிருக்கிறது. அதேநேரத்தில் இந்த உலகப் பொருள் மேட்டரை வைத்துக்கொண்டு எழுப்புதல் என்ற பெயரில் திருச்சபையை சிதைக்க சிலர் புறப்பட்டிருப்பதும் தெரியும். அவர்கள் பேசுவதெல்லாம் ஆதி சபை விஸ்வாசம்............ பயன்படுத்துவதெல்லாம் ஹைடெக் சமாச்சாரங்கள்............அவன் கண்ணுக்கு வெண்ணெய்யாம், எதிரி கண்ணுக்கு சுண்ணாம்பாம். :)
/// புத்தகமானாலும் சிடிக்களானும் பைபிள் காலேஜானும் எதுவானாலும் பணம் பெற்றுகொண்டு செய்யும் விஷயங்களை கர்த்தருக்கு ஊழியம் செய்கிறோம் என்று சொல்லாமலிருந்தாலே போதும். ///
இது தவறான கருத்தாகும். இரட்சிப்பு மட்டுமே இலவசமாகும். அப்பமும் ரசமும் இலவசமில்லை. அப்படியானால் அனைத்து கிறிஸ்தவர்களும் ஆதி விஸ்வாசத்துக்கு திரும்பி தேசாந்தரிகளாகப் போய்விடவேண்டும்.
இந்த நாட்டில் கல்வி,மருத்துவம் உட்பட்ட அனைத்தும் தகுந்த விலைகொடுத்தே பெறப்படுகிறது. அவ்வாறே ஒரு தனி மனுஷன் தானும் தன் குடும்பமும் கொண்ட நாலு பேர் வாழ 40 லட்சம் ரூபாய் வரை செலவிட்டு வீடு கட்டுகிறான். 80 லட்சம் வரை செலவுசெய்து தன் பிள்ளைகளைப் படிக்கவைக்கிறான். ஆனால அவன் வாழ்நாள் முழுவதும் கணக்கிட்டால் கூட மொத்தமாக 10 லட்சம் ரூபாய் ஆண்டவருக்காக கொடுத்திருந்தால் அது அதிகமாகவே இருக்கும்.
ஆக, நாம் பெறும் எந்தவொரு சேவைக்குமுரிய விலையைக் கொடுபப்து என்பது அந்த சேவையை அனுபவிக்கும் நமக்கும் ஒரு கௌரவமாகும். எல்லாவற்றையும் ஓஸியில் கொடுத்துவிட்டால் அதன் அருமை தெரியாதும் போகலாம். அது அருமையானதா இல்லையா என்பதை தீர்மானிக்கும் அவரவரையே சாரும். :)
எல்லோருக்கும் எல்லோருடைய அக்கிரமும் தெரிந்தும் நாகரீகம் கருதி இலைமறை காய்மறையாக உணர்த்த முயற்சித்து தோற்றுப்போனோம். அவரவருக்கு தனி இமேஜும் வாழ்க்கையும் இருப்பதால் பதுங்கியிருந்தோம். இனி நேருக்கு நேர் முகதாட்சண்யமின்றி கண்டிக்கும் காலமாகும். நாத்தான் தாவீதைக் கண்டித்ததுபோல நீயே அவன் என்று கண்டிக்கும் துணிச்சல் இருந்தால் மாத்திரமே இதுபோன்ற அக்கிரமங்கள் அடக்கப்படும்.
Jasmine Golda /// ஜெப மாநாடு என்றாலும் செலவு இருக்குமே. ///
ஜெப மாநாடு நடத்தும்படி பைபிளில் இருக்கா ? இதை நண்பர் Jeyakumar Hosanna சொல்லுவார் என்று நினைக்கிறேன்.
எல்லாம் வெளிப்படையாகவே இருக்கிறது. 5 நாட்கள் தினமும் மாலையில் 5 மணி நேரம்.... நோக்கம் நிச்சயமாகவே தங்கள் சபையின் பெலத்தைக் காட்டுவதாகவே இருக்கலாம். பெங்களூரில் இருப்போருக்கு ரூபாய் 850 பெரிய விஷயமல்ல.
இதில் கலந்துகொள்ளுவோரில் பென்னி ஹின் மற்றும் பால் தினகரன் ஆகியோர் மட்டுமே எனக்கு தெரிந்திருக்கிறது. ஆனால் எல்லோரையும் மோசடி ஊழியர்கள் என்று சொல்லிவிடமுடியாது.
கடைசியாக இதுபோன்ற ப்டைமுயற்சி தேவையா என்று கேட்டால் தற்காலத்தில் கிறிஸ்தவ சமுதாயம் இருக்கும் நிலைமையைப் பார்க்கும்போது ஒருவிதத்தில் தேவை தான் என்று சொல்லுவேன். இந்த ஜெப மாநாட்டு பதிவு கட்டணத்தை கத்தோலிக்கர் விற்ற பாவ மன்னிப்பு சீட்டுடன் ஒப்பிடுவது சரியாக இருக்காது.
நல்ல தரமான புத்தகங்களுக்கும் கொஞ்சம் விலை கொடுக்கவேண்டியிருக்கிறது.அதன் முதலீட்டு செலவு சந்திக்கப்பட்டாலும் இணையத்தில் இலவசமாகக் கிடைக்காது. ஆனால் யெகோவா சாட்சிகள் மற்றும் ப்ரன்ஹாம் / சாக் பூணன் அடியவர்கள் தங்கள் துருபதேசங்களை இலவசமாகவே கொடுக்கிறார்கள். தரமான இறையியல் கல்விக்கு கொஞ்சம் செலவாகும். இதுவே நிதர்சனமாகும்.
சென்னை புறநகரில் எத்தனையோ பொறம்போக்கு இடங்களும் சாலைகளும் ஆக்கிரமிக்கப்பட்டு கோபுரங்கள் வைத்து கோயில்கள் கட்டப்பட்டிருக்கிறது.ஆனால் ஒரு ஏழை மனுஷன் ஒரு சிறிய ஷெட் போட்டு ஒரு ஆராதனைக் கூடத்தைக் கட்டினால் சுற்றுவட்டாரத்திலுள்ள ஜனங்கள் அதைக் குறித்து ரிப்போர்ட் பண்ணி அதை எடுத்துவிட்டார்கள். இதனால் அந்த ஏழை ஊழியருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. இதுபோன்ற நிலையிலேயே இந்தியாவின் மதசார்பின்மை இருக்கிறது. இதனிடையே ஒரு மாடு எவன்கிட்ட அடங்குதோ அவனே பால் கறந்துகுடிக்கட்டும் என்று விட்டுவிடவேண்டியது தான். நாம் சாணி பொறுக்கினாலும் அதை ஒழுங்காக செய்வோம். அவன் பால் குடிக்கட்டும் நாம சாணியைப் பொறுக்குவோம்.
-- Edited by Yauwana Janam on Thursday 28th of November 2013 11:39:59 PM