ஒரு சிறுமி ரயில்வே பிளாட்பாரத்தில் பழங்களைக் கூடையில் சுமந்து கூவி கூவி விற்றுக்கொண்டிருக்கிறாள். மூன்று நண்பர்கள் வண்டியில் ஏற அவசரமாக ஓடியும், நடந்தும் வந்து வண்டியில் ஏறுகிறார்கள் . அதில் ஒரு நண்பர் இந்த பழம் விற்றுக்கொண்டிருந்த பெண்ணில் கூடையை தட்டிவிட்டு வண்டியில் ஏறிவிடுகிறார். பழங்கள் தரையில் விழுந்து சிதறிவிடுகின்றன. சிறுமி கீழேகுனிந்து அந்த பழங்களை தடவித் தடவி எடுத்துக்கொண்டிருக்கிறாள். இதை பார்த்த நண்பர் வண்டியிலிருந்து கீழ இறங்கி அந்த பெண்ணுடன் சேர்ந்து மற்ற பழ்ஙகளையும் பொறுக்குகிறார். இதில் பல பழங்கள் அடிபட்டு கன்னி போயிருக்க பிளாட்பாரத்தின் அடியிலும் சில விழுந்து விட்டன. கண்பார்வையற்ற சிறுமியின் மீது அனுதாபம் கொண்ட அந்த நண்பர் வேகமாக ஓடி, அந்த பிளாடபாரத்தில் உள்ள பழக கடையில், ஒருகூடை நிறைய பழங்களை வாங்கிக்கொண்டுவந்து, அந்தப் பெண்ணிடம் கொடுத்து, இவைகளை நீ விற்று பணத்தை பெற்றுக்கொள் என்றுசொல்லி மறுபடியும் வண்டியில் ஏற செல்கிறார்.