Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: உலகவரலாற்றை அறிவோம். தாய்மதம் திரும்புவோம்.


Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 10
Date:
உலகவரலாற்றை அறிவோம். தாய்மதம் திரும்புவோம்.
Permalink  
 


நண்பர்களே,

ஐரோப்பியர்கள் இந்த உலகில் செய்யாத அட்டூழியங்கள் இல்லை. அவர்கள் தற்போது இந்தியாவை குறிவைத்து அழித்து வருகின்றனர். நாம் உண்மையான உலக வரலாற்றை அறிந்து ஐரோப்பியர்களையும் ஏசு கிறிஸ்துவையும் இந்தியாவை விட்டு விரட்டியடிப்போம்.  குமரி கண்டத்தை பற்றி அறிவோம். ஆதிச்சநல்லூர் பற்றி ஆராய்வோம்.


உயிரினும் மேலான பாரத சகோதர சகோதரிகளே, இந்த செய்தியை முழுவதுமாக படிக்காமல் எறிந்துவிடாதீர்கள் !!   இது நன்கொடை கேட்பதற்கோ, விளம்பரம் செய்வதற்கோ, உங்களிடம் வேறு உதவி கேட்டோ எழுதப்பட்ட செய்தி அல்ல.  பாரத நாட்டின் நன்மைக்காக, இரண்டே இரண்டு நிமிடங்களை இதற்காக ஒதுக்கி தந்து, இதை முழுவதும் படியுங்கள் !!.

 

சகோதர சகோதரிகளே, இமயம் முதல் குமரி வரை நம் பாரதம் பரந்து விரிந்திருக்கிறது. பல்லாயிரம் ஆண்டுகள் தொடர்ச்சியான நாகரீகத்தை கொண்டுள்ளது நம் நாகரீகம். உலகில் வேறு எந்த கலாச்சாரத்தையும் நம் பாரத கலாச்சாரத்தோடு ஒப்பிடமுடியாது. வள்ளுவன் முதல் பாரதி வரை, காளிதாசன் முதல் கண்ணதாசன் வரை, நம் இந்து தர்மத்தின் மேன்மையை புகழாதவர் இல்லை. ஒரு எறும்புக்கு கூட நன்மை செய்ய சொல்லும் நம் தர்மம், ஒரு காக்கைக்கு கூட உணவு வைத்து உண்ண சொல்வது நம் தர்மம்.  அனைத்து உயிர்களும் நன்றாக இருக்க வேண்டும்,  அனைத்து உயிர்களிலும் இறைவன் இருக்கிறான் என‌  நம் வேதங்களும், புனித நூல்க‌ளும் முறையிடுகின்றன.  இடைக்காலத்தில் வந்த தீண்டாமை, உடன்கட்டை போன்ற‌ தீய பழக்கங்களை  கிட்டத்தட்ட களைந்து விட்டோம். பல்வேறு சாதி குழுக்களாக நாம் இருந்தாலும், சாதியை வைத்து ஒருவர் மற்றவரை, வேற்றுமை பார்ப்பதையும் குறைத்துக் கொண்டே வருகிறோம். இனி வரும் காலங்களில் சாதியை வைத்து வேற்றுமை பார்ப்பதை நாம் முற்றிலும் ஒழிப்போம் என்பதும் உறுதி.

 

இந்துக்களாகிய நமக்கு எத்தனையோ புனித நூல்களும், புண்ணிய நதிகளும், புனித தலங்களும் இருக்கின்றன.  நம்மை எத்தனையோ ரிஷிகள், குருமார்கள், ஞானிகள், சித்தர்கள்,  ஆழ்வார்கள், நாயன்மார்கள் வழிநடத்துகின்றனர்.  நம் பாரத பூமியே ஒரு மிகப்பெரும் திருத்தலம் தான். அதனால்தான் அது புண்ணிய பூமி என்று அழைக்கப்படுகிறது. இந்த புண்ணிய பூமியில் தான் எல்லையற்ற அந்த பரம்பொருள், முருகப்பெருமானாய், விநாயகப் பெருமானாய், மகாவிஷ்ணுவாய், மகேஸ்வரனாய் பூஜிக்கப் படுகின்றார். இந்த புண்ணிய பூமியின் ஒவ்வொரு குளங்களிலும், மரங்களிலும், நதிகளிலும், கோவில்களிலும் இறைவன் வீற்றிருக்கிறான். இத்தனை சிறப்பு மிக்க நம் தேசத்தையும் அதன் கலாச்சாரத்தையும் இன்று நம் தேசத்துக்குள் ஊடுறுவியுள்ள விஷக்காளான்கள் எப்படி சித்தரிக்கின்றன ? இவர்கள், நம் முருகனும், விநாயகனும் ,சாத்தான்கள் என்று நம் மக்களின் மனத்தில் விஷத்தை ஏற்றுகின்றனர். இந்த‌ விஷமிகள். நம் மக்களை நம் பண்பாட்டுக்கு எதிராக திருப்ப நினைக்கிறார்கள். நெற்றியில் பொட்டு இடாதே !! கோலம் இடாதே !! என்றும், இந்து பண்டிகைகளை கூட‌ மூட நம்பிக்கைகள் என்றும் இவர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள். பார்ப்பதற்கு பரம சாதுவாய் நம்மை அணுகும் இந்த நச்சுப் பாம்புகள், நாம் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய் வணங்கி வரும் தெய்வங்களை சாத்தான்கள் என்று அப்பாவி மக்களுக்கு போதிக்கிறார்கள். ஒன்றும் அறியாத அப்பாவி மக்களுக்கு பணம் கொடுப்பதாகவும், வேலை வாங்கித் தருவதாகவும், மருத்துவ உதவி செய்வதாகவும், கல்வி கற்றுத் தருவதாகவும் இவர்கள் பேரம் பேசுகின்றனர். உலக மக்களின் தன்மை தெரியாமல் இருக்கும் நம் மக்கள் இவர்களின் ஆசை வலையில் எளிதில் பலியாகி விடுகிறார்கள்.  நம் மூதாதையர்கள் எல்லாம் முட்டாள்கள் என்பது போல் இவர்கள் மூளை சலவை செய்கிறார்கள்.

 

"ஜெப வீடுகள்" என்கிற பெயரில் பல கட்டிடங்களை வாடகைக்கு அமர்த்தி, நம் மக்களை மதம் மாற்றுகிறார்கள். பலரை மதம் மாற்றி உள்ளோம், எங்களுக்கு மேலும் பணம் அனுப்புங்கள் என்று தங்கள் அமேரிக்க, ஐரோப்பிய முதலாளிகளிடம் நிதி பெறுகிறார்கள். பல அப்பாவி மக்களை உளவியல் ரீதியாக மூளை சலவை செய்து,  அவர்களை வைத்தே மேலும் பல மக்களை மாற்றுவதற்கு முனைகிறார்கள். தொலைக்காட்சி சேனல்களில் பல கோடி ரூபாய் செலவு செய்து பிரச்சாரம் செய்கிறார்கள்.  கால் இல்லாதவர் நடக்கிறார், கண் இல்லாதவர் பார்க்கிறார் என்று பல‌ பொய் பிரச்சாரங்களை இவர்கள் செய்து வருகிறார்கள். இவர்களின் பிரச்சாரங்கள் மிக நேர்த்தியாக அமேரிக்காவில் வடிவமைக்கப்பட்டவை. பல குழுக்களின் பெயரில் இவர்கள் வருகிறார்கள். பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், மருத்துவ மனைகள், அலுவுலகங்கள் என்று இந்த விஷக்காளான்கள் பல்கி பெருகியுள்ளன. நாம் இப்போது விழித்துக் கொள்ளவில்லை என்றால் பின் எப்போதும் இல்லை. இன்று நம் பாரதத்தில் லட்சக்கணக்கில் மக்களை இவர்கள் இவ்வாறு மதம் மாற்றி வருகிறார்கள். இந்திய மக்களை பெரும்பான்மையாக மதம் மாற்றிவிட்டால் அவர்களை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்து விடலாம் என்று அந்நிய சக்திகள் கணக்கு போடுகின்றன !!. நம் சகிப்பு தன்மையை இவர்கள்  பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

 

ஆகவே சகோதர சகோதரிகளே!!, இந்துக்களாகிய நாம் ஒன்று பட்டால் எந்த சக்தியாலும் நம்மை ஒன்றும் செய்ய இயலாது. நாம் சாதி வேற்றுமை பார்ப்பது பெறும் தவறு, அதை பயன்படுத்திக் கொண்டு, ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்று இந்த கூட்டங்கள் கொண்டாடுகின்றன.  மதமாற்றத்தை எதிர்த்து இந்த மாநிலம் தழுவிய இயக்கத்தில் நீங்களும் பங்கு கொள்ளுங்கள். கத்தி இன்றி, ரத்தம் இன்றி, இந்த அறப்போராட்டத்தில் நீங்களும் பங்கு கொள்ளுங்கள். அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். இந்த பதிவை நகல் எடுத்து உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு கொடுங்கள். இது தீயாக பரவட்டும். உங்களோடு இந்த தீயை அனைத்து விடாதீர்கள். மற்றவர்களுக்கும் கொண்டு செல்லுங்கள்.  இதைக் கண்டு அலட்சியமாக இருந்து விடாதீர்கள் !! அடுத்தது மதமாற்றப்படுவது உங்கள் மகனோ, மகளோ, சகோதர, சகோதரியோ கூட இருக்கலாம்.

தர்மத்தை காப்பாற்றுபவரை, தர்மம் காப்பாற்றும்  இதுஉறுதி. இது வேத சத்தியம் !!

வாழ்க பாரதம், வந்தே மாதரம்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard