ஆஸ்திரேலியாவில் பிரசவத்திற்காக கேதே ஒக் டேவிட் என்ற ஆஸ்திரேலியப் பெண்மனி சிட்னி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கருத்தரித்து 27 வாரங்களே ஆன நிலையில். அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன. குறைந்த எடையில் பிறந்த ஒரு ஆண், ஒரு பெண்.இரு குழந்தைகளையும் காக்க மருத்துவர்கள் பெரு முயற்சி செய்தனர். பெண் குழந்தை உயிர் பிழைத்தது. ஆனால்.. மருத்துவர்கள் கடைசி வரை போராடியும் ஆண் குழந்தையைக் காப்பாற்ற முடியவில்லை. குழந்தை இறந்துவிட்டதாக தாயிடம் தெரிவிக்கப்பட்டது.
அதைத் தாங்கிக் கொள்ள முடியாத, அந்தத் தாய்.. இறந்த குழந்தையை மார்போடு கட்டி அணைத்து அழ ஆரம்பித்து விட்டார். தொடர்ந்து இரண்டு மணி நேரம் தன் உடலுடன் குழந்தையை அணைத்துக் கொண்டு அழுதவாறே இருந்தார். அப்போது.. குழந்தை மெதுவாக மூச்சு விடுவதை அந்தத் தாய் உணர்ந்தார். உடன் மருத்துவர்களை அழைத்து குழந்தை மூச்சு விட ஆரம்பித்ததைக் கூறினார். மருத்துவர்கள் குழந்தைக்கு அவசர சிகிச்சை அளித்து.. இங்குபேட்டரில் வைத்து.. சகஜ நிலைக்குக் கொண்டு வந்தனர். சிறிது நேரத்தில் கண் விழித்தது குழந்தை.. அதைப் பார்த்து.. ஆனந்தக்கண்ணீர் விட்ட தாயின் விரல்களை குழந்தை பிடித்துக் கொண்டது.
இறந்த குழந்தையை உயிர் பிழைக்க வைத்தது எது.. ஆம்.. அந்த தாயின் அரவணைப்பு.. இப்போது சொல்லுங்கள், உலகத்தில் சிறந்தது தாய்மைதானே ???