”கொள்ளிகளையும் அம்புகளையும் சாவுக்கேதுவானவைகளையும் எறிகிற பைத்தியக்காரன் எப்படியிருக்கிறானோ, அப்படியே, தனக்கடுத்தவனை வஞ்சித்து: நான் விளையாட்டுக்கல்லவோ செய்தேன் என்று சொல்லுகிற மனுஷனும் இருக்கிறான்.விறகில்லாமல் நெருப்பு அவியும்; கோள்சொல்லுகிறவனில்லாமல் சண்டை அடங்கும். கரிகள் தழலுக்கும், விறகு நெருப்புக்கும் ஏதுவானதுபோல, வாதுப்பிரியன் சண்டைகளை மூட்டுகிறதற்கு ஏதுவானவன். கோள்காரனுடைய வார்த்தைகள் விளையாட்டுப்போலிருக்கும்; ஆனாலும் அவைகள் உள்ளத்திற்குள் தைக்கும்.” (நீதிமொழிகள்.26:18-22)
இப்படி சொல்லும் சத்திய வேதம்... இதற்காகப் போராடுவதாகக் கூறி இதைவைத்து பிழைப்பு நடத்தும் போஸ்டர் வியாபாரிகள்,இங்குமங்கும் கலகுமூட்டுவது உட்பட்ட இழிதொழில் மட்டுமல்லாது தொடரும் சிறுபிள்ளைத்தனமான பொய்களையும் ஊதி விளையாட்டு காட்டுவார்கள்... இது அசிங்கம்.
**இந்த செய்தியை உண்மையென நானும் ஒருகணம் நம்பியதால் வந்த கோபத்திலிருந்து வெளிப்படும் குட்டு இது.
நான் தான் அப்பவே சொன்னேனில்ல.... இந்த ஆள் ஒரு குப்பைத் தொட்டி லாரி...எங்கும் சென்று குப்பைகளை சேகரிப்பது....வழியெல்லாம் சிந்திக்கொண்டே செல்லுவது.... இந்த ஆளுக்கு பொழுதுபோக்கு....அப்படியே போஸ்டர் வியாபாரமும் பலமா நடக்கும்...!!! எங்கே ஓட்டமும் கூட்டமும் பலமா இருக்கோ அங்கே இடம்போட்டு கடைவிரிப்பது...கிடைத்ததை சுருட்டிக்கொண்டு அடுத்த ஊருக்கு ஓடுவது....இதெல்லாம் ஒரு பொழப்பா, என்ன ???
தங்களோடு இல்லாதவர்களை மறைந்திருந்து அவதூறு செய்து அற்பசுகம் காணும் இவர்களெல்லாம் நன்மை செய்வதைப் பற்றி பேசுகிறார்கள்... நாட்டு ஆமை.............தீர்ப்பை மாத்து..! மேட்டுக்குடி பொறுக்கிகளான இவர்களை எதிர்த்து நியாயமானதும் நடுநிலையானதுமான ஒரு கருத்தை வெளியிட எவ்ல்லோரும் அஞ்சி நடுங்கும் நிலையில் தான் இவர்களுடைய கண்ணியமும் யோக்கியதையும் இருக்கிறது.
ஆக்ஷன் - ரியாக்ஷன் தெரியாமலா நாம் இத்தனை வருடம் இங்கே குப்பை கொட்டுகிறோம் ? ஒரு நியாயத்தை சொன்னதற்கு சம்பந்தமே இல்லாமல் சீறும் இப்படிப்பட்டவர்களே நம் நிரந்தர விருந்தினர்கள்.... வாங்க போஸ்டர்...வாங்க...!!!
ஃபேஸ்புக் தளத்தில்பாஸ்டர்களுக்கு என்ன வேலை என்பது ஒருபுறமிருக்க அங்கே அவர்கள் செய்யும் வேலைகளிலிருந்து அவர்களுடைய மனஓட்டங்களும் ரசனையும் வெளிப்படுகிறது என்பதும் ஒரு நல்ல விஷயம் தான்... இதோ ஒரு முழுநேர பாஸ்டரின் கற்பனைத் திறன்...இதுபோன்ற அவலட்சணமான பதிவுகளில் ஆர்வங் கொண்டோர் மீன் சின்னம் பற்றிய நம்முடைய நியாயமான விமர்சனத்தை குறைகூறி கல்லா கட்டியது தனி கதை...!
4. பலவானுடைய கூர்மையான அம்புகளும், சூரைச்செடிகளை எரிக்கும் தழலுமே கிடைக்கும்.
இவர்களில் ஒருத்தன் இருக்கானே அவனுக்கு எங்க ஊரில் “டாபர் மாமா”என்று பேர். அவனோட முழு நேர ஊழியமே இங்குமங்கும் கலகம்செய்வதாம்.... பொழுதுபோக்கு போஸ்டர் விற்பது. அவனுடைய செயல்கள் மேலிடத்தில் தீவிரமாக கண்காணிக்கப்படுவதோடு அவனுடைய அனைத்து செயல்பாடுகளும் குறித்து வைக்கப்படுகிறது. விரைவில் அந்த நாள் அவன்மீது புசல்போல வந்து மோதும்....பார்ப்போம்.
இந்த ஆளுடைய போதனை என்னவென்றே இதுவரை யாருக்கும் தெரியாது. ஆனால் ஒன்றே ஒன்று தெரியும், இது ஒரு கார்ப்பரேஷன் குப்பைத் தொட்டி லாரி. இங்கும்ங்கும் ஓடி குப்பைகளை சேகரிப்பது...வழியெல்லாம் சிந்திக்கொண்டே - சிதறிக்கொண்டே செல்லுவது... அப்புறம் மொத்தமா எங்காவது கொட்டிட்டு செட்டிலாவது, இப்படியே ஒரு குப்பைத் தொட்டி லாரியின் வாழ்க்கை அமைந்திருக்கிறதல்லவா ? தான் யார் என்றே காட்டிக்கொள்ளாமல் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொருவிதமாகப் பழகி விஷயங்களை விஷங்களாகப் பரப்புவது கர்த்தருடைய பிள்ளைகளுக்கு தகுதியானது தானா ? பிறகு இப்படி உளவாளியைப் போல எதிர்முகாம்ங்களுக்குள் வியாபாரி போர்வையில் சென்று தொடர்புகளை வளர்த்துக்கொள்ளுவது. அந்த பக்கம் இராமநாதபுரம் ஏரியாவிலும் போஸ்டர் வியாபாரம்...இங்கே அவர்களுக்கு எதிரான ஏஞ்சல் டிவி முகாமிலும் போஸ்டர் வியாபாரம். இதன் நடுவே கொஞ்சம் பொழுதுபோக்காக சிண்டுமுடித்து விளையாடுவது. இரத்தம் குடிப்பது இதையெல்லாம் செய்வதற்காகவே ஒரு கேடுகெட்ட முகம். இப்படிப்பட்டவர்களால் இன்றைக்கு கிறிஸ்தவ சமுதாயம் நிரம்பியிருப்பது மிகவும் வருத்தம்.
சீக்கிரம் திருந்துங்கப்பா... எல்லோரும் எதிர்பார்த்திருக்கும் ஒருத்தர் வர்றார்..!!!
- மேற்காணும் வேத வசனமானது மிக நேர்த்தியாகவும் தெளிவாகவும் சொல்லுகிறது, கர்த்தருடைய பிள்ளைகள் பரியாசக்காரராக இருக்கக்கூடாது. அதேநேரத்தில் சிரிக்கவே கூடாது என்று இதற்கு அர்த்தமல்ல. பரியாசத்துக்கும் நகைச்சுவைக்கும் பெருத்த வித்தியாசமுண்டு. பரியாசம் செய்தாலும் அதைக் காண்போர் சிரிப்பார்கள். நகைச்சுவையினாலும் நண்பர்களுக்குள் மகிழ்ச்சி உண்டாகிறது. ஆனாலும் ஒரு ச்பைக்கு மாதிரியாக விளங்கவேண்டிய மூப்பர்கள் ஒருபோதும் பரியாசக்காரர்களாகவோ புத்தியீனமான பேச்சுகளில் ஆர்வங் கொண்டோராக இருக்ககூடாது. அதினால் பலவித வம்பும் தூஷணங்களும் பிறக்கிறது.
உதாரணத்துக்கு இங்கே ஒருவர் செய்யும் பரியாசத்தைப் பார்க்கலாமே... இதில் பொய்யும் பரியாசமும் கலந்தே இருக்கிறது. இதில் ஞானமும் விளங்கவில்லை. இது வீண்பேச்சாகவும் இருக்கிறது. இதுபோன்ற சாட்சிக்கேடான மக்களே நம்மை காரணமில்லாமல் பகைக்கிறார்கள்.
சொல்லொன்றும் செயலொன்றுமாக உலவும் ஜித்தர்களை, ஸாரி சித்தர்களை நாம் எளிதில் மறக்கமுடியாது. அப்படிப்பட்டவர்களின் கருத்துக்கள் உள்ளத்தை ஆழமாக ஊடுறுவி சிந்திக்க வைக்கிறது. இந்த திரியில் அவைகளைத் தொகுத்தளிக்கிறேன்.
நான் அவரைவிட்டு விலகி அவரை அன்ஃப்ரண்டு செய்துவிட்டேனே என்ற பொய்க் கோபத்தினால் என்னை வெறுத்துவிட்டது போல அவர் இப்படி நடித்தாலும் அவர் தன் உள்ளத்தின் ஆழத்திலிருந்து எனக்காக விண்ணப்பம் செய்கிறார். அவர் விண்ணப்பித்தபோது அவர் எனக்கு இரகசியமாக சொல்லும் சேதி இது....
அதுமாத்திரமல்ல, தன்னால் நிறைவேற்றமுடியாவிட்டாலும் தான் விரும்பும் பலபொன்மொழிகளையும் வாசித்து அதை தன் பக்கத்தில் பதித்து தான் தன் அவசரத்தினால் இழந்துவிட்ட அருமை பெருமைகளை மீட்கவும் முயற்சித்திருக்கிறார்.
அது இது...
இப்படியெல்லாம் நாம் வாசித்ததை அங்குமிங்கும் எடுத்துப்போட்டாலும் பிறருக்கு அதை எடுத்துசொன்னாலும் இதையெல்லாம் நிறைவேற்றுவது மிகவும் கடினம் என்பதையும் நண்பர்கள் சொல்லி அங்கலாய்க்கிறார்கள். டெல்லிங் செல்லிங் எல்லாம் ஈஸி தான் வாக்கிங் தானே கஷ்டம் ?! அதுவும் சரிதான். 100 வயது வரை வாழுவது எப்படி என்ற புத்தகத்தை எழுதியவன் 100 வயது வரை வாழணும் என்று கட்டாயமா என்ன ?