" தலையும் புரியலை காலும் புரியலை.." என்பார்க்ளே அதுபோல 2008-ம் வருடத்தின் இறுதியில் இதே நவம்பர் மாதத்தில் இணையத்துக்குள் நுழைந்தேன். இன்றுடன் சரியாக ஐந்து வருடம் பூர்த்தியாகியிருக்கிறது. அதற்கு முன்னர் எனக்கென்று ஈமெயில் ஐடியோ மொபைல் போனோ அல்லது எந்தவொரு நவீன கருவியோ இருந்ததில்லை. நான் எந்த ப்ரௌஸிங் செண்டருக்கும் சென்றதில்லை. அப்படிப்பட்ட நான் இணையத்தில் எழுதிய முதல் எழுத்திலிருந்தே கவனிக்கப்படத் துவங்கினேன். நான் எழுதத் துவங்கி சில வாரங்களிலேயே நண்பர் அற்புதம் (Arputharaj Samuel) என்னைத் தொடர்புகொண்டு இணையத்தில் எல்லோரும் பார்க்கும்படி இருக்கும் என்னுடைய அலைபேசி எண்ணை எடுத்துவிடச்சொன்னார். பின்னர் அவரிடமே பலர் தந்திரமாகப் பேசி எனது எண்ணையும் தனி விவரத்தையும் பெற்றது தனி கதை. ஏதுமறியாத சூழ்ச்சிகள் தெரியாத தீமைகளை துணிந்து எதிர்க்கவேண்டும் என்ற போராட்டகுணம் மாத்திரமே இருந்த என்னையும் ஆண்டவர் கிருபையாக நேசித்து நடத்தி வந்த பாதைகளைத் திரும்பிப் பார்த்து கண்ணீரோடு நன்றி செலுத்துகிறேன்.
நான் எழுதிய முதல் பின்னூட்டம் இன்றும் எனது நினைவில் இருக்கிறது, அது கிறிஸ்தவர்கள் அரசியலில் ஈடுபடலாமா, எனும் விவாதமாகும். எல்லோரும் நட்புடன் இதமாக உரையாடிக்கொண்டிருக்க திடீரென உட்புகுந்த நான் என்னை முறைப்படி தளத்துக்கு அறிமுகப்படுத்திக்கொள்ளாமலே தடாலடியாக எனது கருத்தைப் பதிவுசெய்யவும் எல்லோருக்கும் நான் ஒரு புதிராகிப்போனேன். என்னைக் குறித்து அறிமுகம் செய்ய சொன்னவர்களையும் நான் கண்டுகொள்ளவில்லை. பின்னர் தேவராஜ் எனும் நண்பரே முதன் முதலில் என்னை இணையத்துக்கு அறிமுகப்படுத்தினார். அதனை நேற்றிரவு பார்த்துக்கொண்டிருந்தபோது எனக்கே பிரமிப்பாக இருந்தது. நான் யார் என்பதையே அந்த தளத்தை பார்வையிட்டவர்களில் 13 ஆயிரம் பேருக்கும் மேலாக தேடி எனது அறிமுகம் என்று இருப்பதை பார்த்திருக்கிறார்கள்.
இவையெல்லாமே கர்த்தருடைய சுத்த கிருபையே. இனியும் எனது பயணம் இனிதே அமைய கர்த்தருடைய கிருபையை நாடி நண்பர்களுடைய ஆதரவையும் அன்பையும் வேண்டி நம்பிக்கையோடு நிற்கிறேன். கர்த்தர் நல்லவர், கர்த்தர் மாத்திரமே நல்லவர்..!!!
புலம்பல் 3:22 நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை.
இண்ட்ர்நெட் எனும் வலைத்தொடர்பு வசதி வந்ததிலிருந்து உலகமே சுருங்கி கையடக்கமாகிவிட்டது என்பது மறுக்கமுடியா உண்மையாகும். அதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரியத்தை செய்துகொண்டிருக்க எனக்கு வாய்த்ததோ இந்த எழுத்துப்ப்ணி. இந்த எழுத்துப்பணி என்பது எழுத்துப் பழியாகும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. நான் எதையும் திட்டமிட்டு செய்யவில்லை. ஆனாலும் இந்த ஐந்து வருடத்தில் நான் செய்திருப்பவை சற்று மிரள வைக்கிறது என்பதே உண்மை. ஐந்து வருடம் முடிந்து ஆறாவது வருடம் துவங்கும் இந்த நேரத்தில் தமிழ் இணையத்தில் நான் விரல்களால் ஒவ்வொரு எழுத்தாகத் தட்டி சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேல் செலவிட்டு எழுதிய முதல் வரியையும் அதன் சிந்தனையையும் இங்கே எனது நண்பர்களுக்காகப் பகிருகிறேன். எனது பலமும் பலவீனமும் நான் எதையும் மறைத்ததில்லை என்பதே. உள்ளது உள்ளபடி வெளிப்படையாக எழுதியிருக்கிறேன். நான் எழுதியதை ஒருபோதும் திருத்தியதோ மறைத்ததோ மாற்றியதோ இல்லை. என்னை ஏற்காதவர்களிடமிருந்து விலகும்போது எனது பதிவுகளை நான் நீக்கியிருப்பினும் அதன் பிரதியை எப்படியாகிலும் சேமித்து வைத்திருக்கிறேன். இது என்னுடைய இயல்பு ஆகும்.
ஐயா, நான் தளத்துக்கு ரொம்ப..ரொம்பப் புதியவன்.கிறிஸ்தவர்கள்... அரசியலில்...என்பது மையப் பொருள் என எண்ணுகிறேன்.அருமையான யோசனை., சிறப்பான கருத்துக்கள்.ஆனால் இது லஞ்சம் கொடாதோர் சங்கம்.,மற்றும் நுகர்வோர் சங்கம் போலாகி விடப்போகிறது..!?
நாம் தேசப்பிதாவையே கொலை செய்து..,மதவைராக்கியம் தூண்டி ஆட்சியைப் பிடிப்பவர்களாக்கும்..! இதனாலேயே இயேசுவும் எனது ராஜ்ஜியம் இவ்வுலகத்துக்குரியதல்ல.,என்றார்.இதனால் அவருடைய சீடர்களும் அவரை விட்டு ஓடிப்போனார்கள்.அவரைக் கொலை செய்தோம்.
அப்போஸ்தல பாரம்பரியம் (இதுவல்ல...)செழித்துவரும் காலக்கட்டத்தில் கர்த்தருடைய வருகை சமீபமாகி விட்ட நேரத்தில் சபலப்பட்டு தாழியை உடைக்கலாமா..?வெண்(எண்)ணையை இழக்கலாமா..?
நிச்சயமாகவே இந்த போராட்ட குணமும் அதிகார போதையும் ரோமர்களுக்கே(கத்தோலிக்க பாரம்பரியம்..)உரித்தானது,அவர்கள் தான் தங்களது சாம்ராஜ்யம் கலகலத்துப் போவதைத் தடுக்க...யூதர்களை ஒடுக்கக் கிறிஸ்தவர்களுக்கு சுதந்திரம் தருவது போல மாய்மாலம் செய்து கிறிஸ்துவின் மார்க்கத்தைக் கெடுத்தனர்.
யோசேப்பு சொன்னது போல.,அவர்கள் செய்ய நினைத்த தீமை நமக்கு நன்மையாக மாறி,பரிசுத்த வேதாகமம் அவர்களாலேயே பாதுகாக்கப்பட்டு நமக்குக் கிடைத்து விட்டது.
இதற்கு மேல் (பரலோகக்) காரியம் வேகப்படும், அனைத்துக்கும் முடிவு சமீபமாயிற்று. இராஜாதி இராஜா இயேசு வரும் போது மக்களாட்சி நீக்கப்படுமே.,அப்படியானால் அதன் பிரதிநிதிகள் கதி ..?மாம்சத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நான் பயப்படமாட்டேன்.2500 வருடத்துக்குப் பிறகும் யூத இனத்தால்(அது மாம்ச சந்ததி..) மீதமிருந்து சுயதேசத்தினை மீட்க முடிந்ததே...ஹிட்லரை விடக் கொடியவர் ( இனி பிறந்தால் பார்ப்போம்..)களா நமது இந்திய மதவாதிகள்..!?
இது எனக்குக் கிடைத்த முதல் வரவேற்பு...
/// ஐயா, நான் தளத்துக்கு ரொம்ப..ரொம்பப் புதியவன்..!?///
வாருங்கள் சில்சாம். வந்த உடனேயே உங்கள் பொய் மூட்டையை அவிழ்த்து விட்டீர்களே. அதெப்படி வந்த உடனேயே பழைய தொடுப்புகளை, அதுவும் அரசியல் பற்றியதை தோண்டி எடுத்து எல்லாவற்றிலும் பேஸ்ட் செய்து விட்டு சென்றிருக்கிறீர்கள்? புதியவர்கள் நீங்கள்? நாங்கள் நம்ப வேண்டும்?
/// கிறிஸ்தவர்கள்... அரசியலில்...என்பது மையப் பொருள் என எண்ணுகிறேன்.அருமையான யோசனை.,சிறப்பான கருத்துக்கள்.ஆனால் இது லஞ்சம் கொடாதோர் சங்கம்.,மற்றும் நுகர்வோர் சங்கம் போலாகி விடப்போகிறது..!? ///
அருமையான, சிறப்பான கருத்து என்று ஒப்புக் கொண்டமைக்கு நன்றி. எச்சரிப்புக்கும் நன்றி சில்சாம்.
அது என்ன சில்சாம்? இப்படி ஒரு பெயரா?
/// நாம் தேசப்பிதாவையே கொலை செய்து..,மதவைராக்கியம் தூண்டி ஆட்சியைப் பிடிப்பவர்களாக்கும்..! இதனாலேயே இயேசுவும் எனது ராஜ்ஜியம் இவ்வுலகத்துக்குரியதல்ல.,என்றார்.இதனால் அவருடைய சீடர்களும் அவரை விட்டு ஓடிப்போனார்கள்.அவரைக் கொலை செய்தோம்.///
நாமா? ஓகோ.. சங்பரிவாரக் குழுவிலிருந்து வந்துள்ளீர்களா? அதனால்தான் காந்தியைக் கொலை செய்ததைத் துணிவுடன் ஒப்புக் கொண்டுள்ளீர்கள். மத வைராக்கியத்தைத் தூண்டி இப்பவும் அதே கொலை வெறியுடன் அலைவதையும் ஒப்புக் கொண்டுள்ளீர்கள். துணிவுக்கு பாராட்டு சில்சாம்.
முதலில் சில்சாம் என்ற முகமுடியை கழட்டிவிட்டு, நீங்கள் யார் என்பதை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள் சில்சாம். அறிமுகம் என்ற பகுதியில் தான். அதைத்தாண்டித்தானே ஒரே நாளில் இந்த பதிவுகளைத் தோண்டித் துருவியுள்ளீர்கள்?
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)