அருள்நாதரின் மலை பிரசங்கத்தில் கண்...உத்திரம் .....துரும்பு....இணைத்து ஒரு ;பிரசங்கம் செய்வார்.. இது மத்..7 : 3 , 4 , 5
,......இது கொஞ்ச பேருக்கு கொஞ்சமும் பிடிக்காது....தன் கண்ணில் உத்திரம் இருப்பதை உணரவே மாட்டார்கள்...அவர்கள் குறி யெல்லாம் துரும்புதான்......உதாரணத்திற்க்கு தன் நண்பர்களில் யாரும் தப்பு செய்தால் அது தப்பே கிடையாது என்று சாதிப்பார்கள்...ஆனலும் அடுத்தவர்களை இழிவு படுத்தி பேசுவார்கள் சில பரிசுத்தவான்கள்....
ஒரு பெண் தான் மதிக்கும் ஊழியக்காரருடன் போட்டோ எடுத்துக் கொண்டால் அது அவர்கள் விதிப்படி மகா மகா தப்புங்க......ஆனால்
அநேக பெண்களுடன் அவர்கள் நண்பர் போட்டோ எடுத்தால் அது மிகவும் போற்றத்தக்கது என்பார்களே...இது தாங்க உலகம்......
JESUS IS COMING VERY SOON...... - Shunmugam VeeraKutti.
மேற்காணும் பதிவில் இவர் எழுதியிருப்பவற்றையும் பதிக்கப்பட்டிருக்கும் படத்தையும் கவனித்தால் இவருடைய தரம் இன்னதென்று விளங்கும். இதோ இந்த மாதத்துடன் இந்த பதிவுக்கு இரண்டு வயதாகிறது. அன்றே இந்த பதிவில் பின்னூட்ட நண்பர்கள் இதுபோன்ற கீழ்த்தரமான ஊழியம் உனக்கு வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனாலும் இவர் திருந்துவதாகத் தெரியவில்லை. முதல் படம் இன்னாரென்று அனைவருக்கும் தெரியும். இரண்டாவது ப்டத்தில் சுற்றிலும் பெண்கள் சூழ்ந்திருக்க வாட்ச்மென் க்ரூப்பின் திரு.விஜய்குமார் அமர்ந்திருப்பதை கேவலப்படுத்தியிருக்கிறார். இதையும் நாங்கள் அப்போதே கண்டித்தோம். ஆனாலும் இவருடைய் புத்தி மாசுபட்டிருப்பதால் இவர் அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை. இப்போது கவனிக்கவேண்டிய காரியம் என்னவென்றால் அன்றும் இன்றும் இவரோடிருப்பவர்கள் ஒரு சிலரே அவர்களிலிருந்து ஒருவர் வாட்ச்மென் முகாமுக்கு மாறியிருக்க இம்மி அம்மி மாதிரி அமுக்கி வாசிக்கிறார். முன்போல வாட்ச்மென்களோடு மோதுகிறதில்லை. பொது எதிரியாக நம்மையே குறிவைத்திருக்கிறார்கள்.
உங்களுக்கு வேற வேலையே இல்லையா .சகோதரன் Vijay Kumarஅவர்களை இழிவு படுத்தாமல் உங்களால் இருக்க முடியாதா .போங்கய்யா ,நீங்கள் எல்லாம் ஒரு போதகர் என்பது தான் கொடுமை .
போதகர் இம்மானுவேல் அபிரகாம் அவர்கள் பிறரை ஏசுவதை விட்டு பாவத்தில் அழியும் மக்களை கிறிஸ்துவின் பக்கம் அழைத்து வர வேண்டும் .போதகர் செய்யும் தனி நபர் விமர்சனம் ஊழியகரர்களுக்கு உகந்தது அல்ல .அது ஊழியத்தை கனவீனபடுதும் செயல் .
ஊழியம் என்பது பாவத்தில் அழியும் மக்களை கிறிஸ்துவினண்டை கொண்டு சேர்ப்பது .ஊழியம் செய்கிறவர் கிறிஸ்துவின் சிந்தை உடையவராக இருந்து கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் .கருத்து வேற்றுமைகள் வரும்போது கண்ணியமாக ,கவனமாக தமது கருத்தை சொல்லவேண்டும் .இவரோ தனது மாற்று கருத்துடையவர்களை வெறித்தனமாக தூற்றுகிறார். இவரெல்லாம் ஒரு ஊழியரா அல்லது வலைதள தீவிரவாதியா ?
Bro. David Joseph எப்படி இருக்கீங்க..? நலமாக இருக்கிறீர்களா? நீங்கள் நன்றாக பைபிள் வாசிக்க வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள். Arulandu Rajendran, Ma Dhava Raj, Abraham Edward.
இது இணையத்தில் எனக்கு அறிமுகமான பிரபு எனும் நண்பரின் திருமணப் படமாகும். தற்கால நவீன வாய்ப்புகள் - வசதிகள் காரணமாக கிழக்கும் மேற்கும் சந்திக்கிறது. வடக்கும் தெற்கும் உறவு கொள்ளுகிறது. இதில் ஆச்சரியம் ஏதுமில்லை. இப்படி சிலர் இணைவதற்கு என்னைப் போன்றவர்களும் காரணமாக இருப்பதை இந்த நண்பர்கள் மறந்துவிடாதிருந்தால் சரி. இதேபோன்று மற்றொரு திருமணத்தின்போது இந்த படத்தில் இடதுபுறத்திலிருந்து 2-வதாக நின்றுகொண்டிருக்கும் திரு.பால் பிரபாகர் என்பவரோடு நான் நின்றதும் நினைவுக்கு வருகிறது. நட்பு என்பது எந்தவிதமான உள்நோக்கமோ அல்லது சுயநலமோ இல்லாதிருந்தால் அது இன்பமாகவே இருக்கும். அதில் சூழ்ச்சியும் துரோகமும் முளைவிடுமானால் அந்த நட்பினால் பெருந்தீமைகள் வந்துசேரும் என்பதே பலருடைய அன்றாட அனுபவமாக இருக்கிறது. இப்படியே நட்பைக் குறித்து திரு.பால்பி சொன்னது எனக்கு நினைவுக்கு வருகிறது. எனக்கு அவர் சொன்ன ஆலோசனை ஏற்புடையதாக இல்லாத காரணத்தினால் நான் அதனை செயல்படுத்தவில்லை. அப்போது அவர் சொன்ன வசனமோ வேத வசனமானதால் அது என் நினைவில் நின்றுவிட்டது. அவர் சொன்னதன் பொருள் இப்போது தான் விளங்குகிறது.