தான் ஒரு முட்டாள் என்பதை நிரூபிக்கவும் கூட தன்னையே நம்பியிருக்கும் ஒரு மனுஷனை இங்கே பார்க்கிறோம். சம்பந்தாசம்பந்தமில்லாத ஒரு பதிலால் தன்னையே தன கேவலப்படுத்திக்கொள்ளும் இந்த மனிதன் ஒரு போலி பெந்தெகொஸ்தேகாரனாம்.
59. பிரதான ஆசாரியரும் மூப்பரும் சங்கத்தார் யாவரும் இயேசுவைக் கொலைசெய்யும்படி அவருக்கு விரோதமாய்ப் பொய்ச்சாட்சி தேடினார்கள்.
60. ஒருவரும் அகப்படவில்லை; அநேகர் வந்து பொய் சாட்சி சொல்லியும் அவர்கள் சாட்சி ஒவ்வவில்லை; கடைசியிலே இரண்டு பொய்சாட்சிகள் வந்து:
61. தேவனுடைய ஆலயத்தை இடித்துப்போடவும், மூன்று நாளைக்குள்ளே அதைக் கட்டவும் என்னாலே ஆகும் என்றான் என்று இவன் சொன்னான் என்றார்கள்.
62. அப்பொழுது, பிரதான ஆசாரியன் எழுந்திருந்து, அவரை நோக்கி: இவர்கள் உனக்கு விரோதமாய் சாட்சி சொல்லுகிறதைக்குறித்து நீ ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்றான்.
63. இயேசுவோ பேசாமலிருந்தார்.
அன்று இயேசு பேசாமலிருந்தார். ஏனென்று தெரியவில்லை. ஆனால் எனக்குள் ஒரு எண்ணம், ஒருவேளை நானும் பேசாமலிருந்தால் ? தேவனுடைய நாமம் தூஷிக்கப்பட நானே காரணமாகிவிடுவேனோ ?! நான் பேசாமலிருப்பதால் தேவ நாமம் தூஷிக்கப்படுமா அல்லது பேசாமலிருந்தால் தேவனுடைய நாமம் தூஷிக்கப்படுமா என்று பார்த்தால் இத்தனை காலம் என்மீது தொடுக்கப்பட்ட தனிப்பட்ட தாக்குதல்களின்போது நான் என்னை அவருக்குள் மறைத்துக்கொண்டு பேசாமலிருந்தேன். எனவே தங்களுக்கு நெருக்கமானவர்களை என்னிடம் உளவாளிகளாக அனுப்பி என் நிலைமையைப் பரிசோதித்தார்கள். நான் மிகமிக எளிமையாகவும் சாதாரணமான வாழ்க்கை தரத்தில் இருப்பதையும் அறிந்துகொண்டு துணிகரமாக இதுபோன்ற அக்கிரமங்களை அரங்கேற்றி வருகிறார்கள். இப்போது நான் என்ன செய்யவேண்டும் ? பேசாமலிருக்கவேண்டுமோ அல்லது பேசவேண்டுமோ ? என் ஆண்டவருடைய நாமத்தை நான் தரித்துக்கொண்டு இங்குமங்கும் திரிந்து பணம் சம்பாதிப்பதாகவோ குழப்பம் விளைவிப்பதாகவோ அவர்கள் சொன்னால் நிச்சயமாக என்னால் பேசாமலிருக்கமுடியாது. அது எனக்காக அல்லாமல் என் நிமித்தம் தேவனுடைய நாமமும் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் மீதான நம்பிக்கையும் சிதைந்துபோக நான் அனுமதிக்கமுடியாது. அப்படியானால் இரண்டு காரியங்களை செய்யலாம்; ஒன்று நான் என்னுடைய களத்தைவிட்டு ஓடிப்போகவேண்டும் அல்லது மரித்தாலும் சரி என்று துணிந்துநிற்கவேண்டும். மடியிலே கனமில்லே, வழியிலே பயமில்லை என்று சொல்வார்களே அதுபோல. என்னைக் கண்டு திருடர்களே அஞ்சவேண்டுமேயன்றி அவனைக் குறித்து துல்லியமாய் அறிந்து வெளிப்படுத்திய நானல்லவே. வருங்காலங்களில் எனது பணியானது இன்னும் வேகப்படுமே தவிர ஒருபோதும் சோர்ந்துபோய் விலகி ஓடவே மாட்டேன். எதிரிகளுக்கு துணிச்சல் இருக்குமானால் இதையும் படமெடுத்து போட்டு எழுதட்டும். நான் ஓராயிரம் ஃபேக் ஐடிக்களை உருவாக்கினாலும் கர்த்தருக்காக எழுதுவேன். இல்லாவிட்டால் என் விரல்களின் திறன் முடங்கிப்போகும். ஒரு தனி மனுஷனின் புகழ்ச்சிக்கோ நன்மதிப்புக்கோ பாதுகாப்புக்கோ ஊறுவிளைவிக்கும் வண்ணம் செயல்படமாட்டேன். என் உணர்வையும் சிந்தையையும் ஆளும் கர்த்தர் எனக்கு அடைக்கமாகவே இருக்கிறார். அவரே என் கன்மலையானவர்.
என் சத்துருக்களின் இஷ்டத்துக்கு என்னை ஒப்புக்கொடாதேயும்; பொய்ச்சாட்சிகளும் ஆக்கிரமித்துச் சீறுகிறவர்களும் எனக்கு விரோதமாய் எழும்பியிருக்கிறார்கள். -சங்கீதம் 27:12
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)