ஒரு பெந்தெகொஸ்தே பாஸ்டர் வசனத்தை எப்படி போதிக்கிறார் ? அவர் ஏன் ஒரு வார்த்தையையே மீண்டும் மீண்டும் நீட்டி முழக்கி பேசிக்கொண்டிருக்கிறார் ? ஏன் இடையிடையே அல்லேலூயா என்று கேப் ஃபில் பண்றாங்க ? காரணம், பெரியவங்க சொல்லுவாங்க, சட்டியிலே இருந்தா தானே அகப்பையிலே வரும் ? என்பதாக. இவருகிட்டே ஏதாவது கற்றுக்கொள்ளமுடியுமா என்று நானும் ஆவலோடு பார்த்துகிட்டே இருந்தேனுங்க.... தூக்கத்தைக்கெடுத்துக்கொண்டு கண்ணைக் கசக்கிக்கொண்டு....ஆனால் கடைசிவரை இவர் சப்ஜெக்டுக்கு வந்ததாக தெரியவில்லை. ஆபிரகாம் ஆசீர்வாதமாக இருக்க அழைக்கப்பட்டாலும் பரதேசியாக அலைந்து திரிந்தாராம். ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத எடுத்துக்கொண்ட வசனத்தை சாராத அதன் ஆழங்களுக்கு செல்லாத இவரும் ஒரு சபையின் போதகராம்..!!!
கொடுமை...கொடுமையிலும் கொடுமை.
I பேதுரு 3:9 தீமைக்குத் தீமையையும், உதாசனத்துக்கு உதாசனத்தையும் சரிக்கட்டாமல், அதற்குப் பதிலாக, நீங்கள் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக் கொள்ளும்படி அழைக்கப்பட்டிருக்கிறவர்களென்று அறிந்து, ஆசீர்வதியுங்கள்.
இது தான் தியானிக்க எடுத்துக்கொண்ட வசனம். அங்கிருந்து ஒரே லாங் ஜம்ப் டூ ஆபிரகாம். ஏன்னா வசனம் அத்தனை ஷார்ப்பாக இருக்கிறது. தானே உதாசீனனாகவும் தீங்கு செய்கிறவனாகவும் இருந்துகொண்டு இந்த வசனத்தை எப்படி எடுத்து போதிக்கமுடியும் ? அதான் இத்தனை தடுமாற்றம். இவருடைய் வாயைப் பார்த்தால் பல்செட்டுவைத்தது போல இருக்கிறது. அதற்காக அதைவைத்து இவரை நாம் சபிக்கமுடியுமா ? ஆனால் இவரோ இன்வெஸ்டிகேட்டிவ் ஜர்னலிஸ்ம் படித்தவரென்று நினைத்துக்கொண்டு தனக்கு சம்பந்தமில்லாதவர்களுடைய படத்தை எடுத்து திருடியெடுத்து போட்டு அதில் அவர்களை அலியென்றும் போலி பிறவி என்றும் கூறி இகழுகிறார். இப்படிப்பட்டவர்களுக்கு எச்சரிக்கையாக இருப்பது நல்லது. நீ எதை செய்கிறாயோ, அதுவே உனக்கும் செய்யப்படும். இனி உன்னுடைய வீடியோக்கள் பகுத்து திறனாய்வு செய்யப்படும்.
இந்த செய்தியைக் குறித்து என்னுடைய பக்கத்தில் வெளிப்படையான விவாதத்துக்கு இந்த மனிதர் வருவாரா என்று பார்க்கிறேன்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)