PASTOR JOSEPH BALACHANDRAN PRAYING FOR JERUSALEM FROM THE 24 HOURS PRAYER ROOM AT THE ISRAEL PRAYER TOWER. ///
இது சகோ.பால் தினகரன் அவர்களின் ஃபேஸ்புக் பக்கத்தின் செய்தியாகும். மற்றொரு சகோதரி பகிர்ந்த இதனைப் பார்த்ததும் மனதில் தோன்றியதை எழுதியிருக்கிறேன். தேர்ந்த அப்போஸ்தலர்களான ஜோசப் பாலச்சந்திரன் போன்றவர்களே இப்படிப்பட்ட செயல்களை ஊக்குவிகலாமா என்பதே என் மனதில் எழுந்த கேள்வியாகும். இவையெல்லாம் பிதாவின் கட்டளைகளில் சொல்லப்படவில்லை. உலகப் பிரகாரமான எருசலேமுக்காக நாம் ஆயத்தப்படவில்லை. பரம எருசலேம் தானே நம் இலக்கு ? மாம்சத்தின்படியான யூதரோடு நமக்கு என்ன உறவு ? நாமே ஆவிக்குரிய இஸ்ரவேலர் அல்லவா ? இந்த நவீன யுகத்தின் இதுபோன்ற கூத்துக்களை நாம் வேடிக்கை பார்த்தால் போதும். அதற்குள் கர்த்தரே வந்துவிடுவார்.
என் தேசம் இங்கே அழிகிறது............. அங்கே என்ன வேண்டுதல் ???
மத்தேயு 28:19 ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து.......
செய்யவேண்டியதை செய்யாமல் வேண்டாததையெல்லாம் செய்து...எல்லாம் வியாபார மயம்....மீடியா அட்ராக்ஷன் நாடி...
ரோமர் 11:25 மேலும், சகோதரரே, நீங்கள் உங்களையே புத்திமான்களென்று எண்ணாதபடிக்கு ஒரு இரகசியத்தை நீங்கள் அறியவேண்டுமென்றிருக்கிறேன்; அதென்னவெனில், புறஜாதியாருடைய நிறைவு உண்டாகும்வரைக்கும் இஸ்ரவேலரிலொரு பங்குக்குக் கடினமான மனதுண்டாயிருக்கும்.
சின்ன மாற்று சிந்தனை. இதுபோன்ற சிறுபிள்ளைத்தனமான செயல்கள் அவரவர் பக்திவிருத்திக்கே பயன்படும். நான் இங்கிருந்தே எருசலேமின் சமாதானத்துக்காக வேண்டுதல் செய்தல் போதுமானது. இதுபோல பெரிய கோபுரத்திலிருந்து ஜெபிக்க எங்கும் கட்டளையிடப்படவில்லையே ?! மாறாக நம் ஆண்டவர் எங்கும் சுற்றித் திரிந்தாரே ?!
Jasmine Golda இப்ப உலகம் சுருங்கி விட்டது..தூரம் ஒரு பொருட்டு அல்ல.. ///
அப்படியானால் அங்கே பல கோடி செலவில் கட்டிடத்துக்கு அவசியம் என்ன ? காரணம் ரொம்ப சிம்பிள் மனுஷன் வாழ்வதற்கு ஒரு காரணமும் இலக்கும் வேண்டும். அது இல்லாவிட்டால் அவன் அழிந்துவிடுவான். அதேபோல இதுபோன்ற புதுப்புது திட்டங்கள் இல்லாவிட்டால் ஊழியத்தில் ஒரு பரபரப்பு - ஃப்ளோ இல்லாமல் போய்விடும். அதை கடவுள் பெயரால் செய்கிறோம். அவ்வளவு தான்.
Jasmine Golda ஆபிரகாமை நான் சொல்லும் இடத்திற்கு போ என்று சொன்னாரே
தோமா இந்தியா வந்தாரே...அங்கிருந்தே ஜெபித்திருக்கலாமே..
பவுலும் பல நாடுகளுக்கு ஊழியப் பயணம் செய்தாரே ///
யெஸ். அப்படியே நாமும் செல்லுவதில் தவறில்லை. ஆனால் இப்படியல்ல. இது கம்பெனி ஸ்டைல் - எம் என் ஸி கம்பெனி ஸ்டைல். நானும் ஒரு முன்னாள் வியாபாரி தான் மேடம். சாரி.