Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பள்ளி சிறுமியின் கற்பையும் உயிரையும் பறித்த பேஸ்புக் நட்பு..!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
பள்ளி சிறுமியின் கற்பையும் உயிரையும் பறித்த பேஸ்புக் நட்பு..!
Permalink  
 


விளையாட்டாக ஆரம்பித்த 2 மாத நட்பு விபரீதத்தில் முடிந்தது பள்ளி சிறுமி உயிரை பறித்த பேஸ்புக் நட்பு

பெங்களூர் : இரண்டே மாத பேஸ்புக் நட்பு, வாழ்க்கையை புரட்டிப்போட்டது.  விபரீதத்தில் முடிந்தது; 14 வயது பள்ளிச் சிறுமியின் வாழ்க்கையை முடித்தது. செல்போன் கூட வாங்கித் தராமல் வளர்த்தோமே... எப்படி நேர்ந்தது இந்த கொடூரம்  என்று பெற்றோர் இப்போது துயரத்தின் உச்சத்தில் நொறுங்கிப்போய் விட்டனர். பெங்களூரில் ஒரு பிரபல தனியார் பள்ளியில் 9வது வகுப்பு படித்து வந்தாள் ஷிகா. வயது 14. தாய், தந்தை வேலை செய்யும் நடுத்தர குடும்பத்தில் வளர்ந்த சிறுமி. செல்போன் இல்லை. பேஸ்புக் பக்கமே போகக்கூடாது என்று கண்டிப்புடன் கட்டுப்பாடு  விதிக்கப்பட்டவள். ஆனால், பள்ளியில் பணக்கார சக மாணவிகள் நட்பால் ஷிகாவின் ஆசை மாறியது; பழக்கம் தடம் புரண்டது.

 பேஸ்புக் நட்பில் சந்தோஷம் கண்டாள். தோழிகளுடன் சேர்ந்து  அடிக்கடி நெட் சென்டருக்கு சென்று ஒரு மணி நேரம் பணம் கட்டி நெட் பார்க்கும் பழக்கம் கொண்டிருந்தாள். அதுவே, வகுப்பை கட் அடிக்கும் அளவுக்கு மாற்றியது. பேஸ்புக்கில் ஆளுக்கொரு நட்பை இந்த சிறுமிகள் தேடிக்கொண்டனர். அப்படி பேஸ்புக்கில் நட்புக்கு ‘வேண்டுகோள்’ கொடுத்தவன் தான் மனோஜ் குமார். செப்டம்பர் மாதம் பேஸ்புக்கில் நட்புக்கு அவன் வேண்டுகோள் கொடுக்க, ஷிகா சம்மதித்தாள்.  
 
பெங்களூர் யெலகங்கா பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பிகாம் படிப்பவன்; ரேஸ் பைக் ஓட்டுவதில் ஆர்வம் உள்ளவன்... என்ற பாணியில் அவனை பற்றி விவரம் பேஸ்புக்கில் கிடைத்தது. தான் நினைத்த மாதிரி அழகான வாலிபன் என்று அறிந்த ஷிகாவுக்கு அவன் சாட்டிங் பிடித்துப்போனது. அவன் வார்த்தைகள் இழுத்தது.
 இப்படி ஆரம்பித்த அடையாளம் தெரியாத நட்பு,

அடுத்து விபரீத கட்டத்துக்கு தாவியது. பெற்றோருக்கு தெரியாமல், யெலகங்காவில் உள்ள மனோஜின் அறைக்கு அடிக்கடி போக ஆரம்பித்தாள் ஷிகா. இருவரும் வகுப்புகளை கட் அடித்து விட்டு வெளியே சுற்றுவ தும், சில நேரங்களில் இரவில் தங்குவதுமாக தொடர்ந்தது. இப்படிதான் அவள் தன்னை முழுமையாக அவனுக்கு தந்தாள்.

சிறிய வயதில் இது வாழ்க்கை தவறு என்று கூட தெரியாமல் விபரீத நட்பை தொடர்ந்தாள். ஒரு நாள், ஒன்னொட பிரண்ட்ஸ் கூட பேஸ்புக்கில் இருக்காங்க இல்லே. அவங்களையும் எனக்கு பிரண்ட்டாக்கு; அவங்க செல்போன் நம்பர் வாங்கித்தாயேன் என்று ஆரம்பித்தான். அப்பாவியாக சிலரின் போன் நம்பர் வாங்கி தந்தாள். இதுவே ஷிகாவை ஒதுக்கி விட்டு, அவளின் தோழிகள் சிலருடன் மனோஜ் புது நட்பு கொள்ள காரணமாக அமைந்தது.  
 
Tamil-Daily-News_63872492314.jpg

அவர்களுடனும் மனோஜ் ஊர் சுற்ற ஆரம்பித்தான். கேட்டதற்கு, ‘ஏய், பேஸ்புக் நட்புன்னா இப்படிதான். எல்லாம் ஒரு ‘ஃபன்’ (ஜாலி) தான். இதை ஏதோ விபரீதமாக எடுத்துண்டுட்டே. இன்னும் நீ கல்லூரி போகணும். அப்புறம் வேலைக்கு போகணும். அப்போ திருமணம் செய்து யாரோடவாவது செட்டிலாகிடு. இப்படி ஜாலி நட்பெல்லாம் தப்பே இல்லேப்பா...’ என்று ‘யூத்’ தத்துவம் பேசினான்.

தலை சுற்றியது ஷிகாவுக்கு. பேசாமல் திரும்பி விட்டாள். வீட்டில் பெற்றோர் கேட்டும் கூட பேசாமல் வெறுமையை உணர்ந்தாள். சாப்பிடாமல் வாழ்க்கை வெறுத்தாள். நேற்று முன்தினம், தம்பியுடன் விளையாடி விட்டு அவன் அருகே உள்ள மாமா வீட்டுக்கு போவதாக சொல்லி போன பின், வீட்டை தாழிட்டு உள்ளே வந்தாள்.

  விரக்தியின் உச்சகட்டமாக உணர்ந்தாள் போலும். துணியை எடுத்து தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டாள். சிறிது நேரத்தில் வேலையில் இருந்து வீடு திரும்பிய தாய், கதவு பூட்டியபடி உள்ளதை அறிந்து தட்டினாள். திறக்காமல் இருக்கவே சந்தேகம் அடைந்து கதவை உடைத்து பார்த்தபோது உறைந்து போனாள். தந்தையும் பதறிப்போய் வந்து அப்படியே கண்ணீர் வற்றி முடங்கினார்.

‘இவன் தான் என் வாழ்க்கை என்று நம்பினேன். என்னையே தந்தேன். ஆனால் எல்லாம் ஒரு ‘ஃபன்’ என்று கூறி விட்டான்; என்னை ஏமாளி ஆக்கி விட்டான். எனக்கு இனியும் வாழ்க்கை  எதற்கு?’ என்பது தான் அவள் எழுதிய துண்டு காகிதத்தில் கடைசி வரிகள். விசாரணை செய்த போலீஸ், உடனே மனோஜை கைது செய்து சிறையில் அடைத்தது. அவனும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தான்.

தந்தை சொன்ன வார்த்தை: ‘பேஸ்புக் கூடாது என்று தான் அவளுக்கு செல்போன், வீட்டில் கம்ப்யூட்டரில் நெட் இணைப்பு வாங்கி தரவில்லை. அதுவே அவள் உயிரை நான் அஞ்சியதற்கு  ஏற்ப பறித்து விட்டது’ என்று உடைந்த வார்த்தைகளை உதிர்த்தார்.

நன்றி: தினகரன்

இதேபோன்ற இழிசெயலில் - ஃபேஸ்புக் நட்பை தவறாகப் பயன்படுத்தும் சமூக விரோத செயலில் - ஒருவருடைய நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் துணிகரமான செயலில் சில போலி பெந்தெகொஸ்தே ரௌடிகளும் ஈடுபட்டிருக்கின்றனர். அவர்களுடைய செயலானது தற்கொலை வரைக்கும் போகாவிட்டாலும் பெரும் மன உளைச்சலைக் கொடுத்து ஒருவருடைய இயல்பான வாழ்க்கையைக் கெடுத்து கேள்விக்குறியாக்கிக்கொண்டிருக்கிறது. இது நிச்சயம் கண்டிக்கப்படவும் நிறுத்தப்படவும் வேண்டும். கள்ளிக்குளம் பகுதியில் எழுப்புதல் அக்கினியை இறக்கி ஊரையே கொளுத்துவதாக சொல்லும் கள்ளப் போதகன் இம்மானுவேல் ஆபிரகாம் என்பவருடைய செயல்பாடுகளை அனைவருக்கும் தலைகுனிவையே ஏற்படுத்தியிருக்கிறது.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard