Sekar Sekarபரிசுத்த பிதாவே, நீர் எனக்குத் தந்தவர்கள் *நம்மைப்போல ஒன்றாயிருக்கும்படிக்கு*... அவர்களெல்லாரும் *ஒன்றாயிருக்கவும்*... நாம் ஒன்றாயிருக்கிறதுபோல அவர்களும் *ஒன்றாயிருக்கும்படி*... யோவா17ஃ11,21,22. இவ்வசனங்களில் உள்ள ஒன்றாயிருத்தலை எவ்விதம் புரிந்துகொள்கிறோமோ அவ்விதமே நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்று ஆண்டவர் சொல்வதைப் புரிந்துகொள்ளவேண்டும். ஒன்றாயிருத்தல் என்பது ஒற்றுமையோடு ஒருமைப்பாட்டோடு இருப்பதைக் குறிக்கிறதேதவிர ஒரே ஆளாக இருப்பதையல்ல. YHWH and Jesus are one in character likeness.
Sekar Sekarபிதாவின் குணங்களான அன்பு, இரக்கம், கிருபை, பரிசுத்தம் ஆகியவற்றைக்கொண்ட பரிபூரண குமாரனாக யெஷுஆ விளங்குகிறார். குமாரனின் குணாதிசயங்களில் நாம் பிதாவையே காண்கிறோம். இதையே என்னைக்காண்கிறவன் (என் பண்புகளில்) பிதாவை (பிதாவின் பண்புகளை) காண்கிறான் என கூறுகிறார். ஒருவனும் என்னைக்கண்டு உயிரோடு இருக்கமுடியாதென யாவே கூறுவதை யாத்33ஃ20ல் காணலாம். பிலிப்பு தன் மாம்சக்கண்களால் பிதாவைக் காணவிரும்பினார். இப்படி அவர் விரும்பியது தவறு என்று உணர்த்த, உங்கள் புறக்கண்களால் பிதாவைக் காண இயலாது. நீங்கள் புறக்கண்களால் என்னைக் காண்கிறீர்களே. என் குணாம்சம் பிதாவின் குணாம்சமே. எனவே என்னைக் கண்டவன் பிதாவைக்கண்டான் என்று கூறுகிறார் யோவா14ஃ7-9.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நமது மதிப்பிற்குரிய எதிரிகளான (மேசியாவின்) எதிரிகள் பக்கம் செல்லுகிறோம். இது திட்டமிட்டதல்ல, தற்செயலானதொரு நடத்துதலே. இந்த க்ட்டுரையை ஏற்கனவே நமக்கு நன்கு அறிமுகமான இக்னீஷியஸ் இளங்கோ எழுதியிருக்கிறார்.
கலாத்தியர் 4:6 மேலும் நீங்கள் புத்திரராயிருக்கிறபடியினால், அப்பா, பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாக தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார்.
தேவனை கிறிஸ்து அப்பா பிதாவே என்று கூப்பிட்டார். அந்த தேவனை நாம் அப்பா பிதாவே என்று கூப்பிட அந்த கிறிஸ்துவின் ஆவியை நமக்குள் அனுப்பினாராம் பிதா.
ஆனால் இங்கு சிலரோ, கிறிஸ்துவே தான் அப்பா, அப்பா தான் கிறிஸ்து என்று சொல்லி திரித்து வருகிறார்கள்!!
ரோமர் 8:17 நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே;
கிறிஸ்து தேவனின் சுதந்தரர்....... நாம் கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரராம்.
அப்படி என்றால் "என்னை கண்டவன் பிதாவை கண்டான்" என்கிற ஒரு வசனத்தை வைத்துக்கொண்டு திரித்துவத்தை போதிக்கும் அதி மேதாவிகளே, சுதந்தரர் என்றால் என்னவென்று தெரிந்துக்கொள்ளுங்கள்!! உங்க லோக்கல் பாஷையில் வாரிசு என்பீர்களே, அதாவது அப்பாவின் சொத்து அனைத்துக்கும் உரிமை கொண்டாடும் ஒரு நிலை. அந்த நிலையில் கிறிஸ்து இருக்கிறார், நாமும் கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரராம்!!
அப்படி என்றால் கிறிஸ்து நமக்கு அப்பா இல்லை, திரித்துவர்களே, அண்ணன் ஆகிறார்!!
யோவான் சுவிசேஷம் முழுவதும் தேவனை அப்பா, பிதாவே என்றே அழைக்கிறவரை பார்த்து இன்றைய திரித்துவர்கள் மகனையும் அப்பாவாக்கி விட்டார்கள்!!
யோவான் 20:17 இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார்.
என் பிதாவினிடத்திற்கும், உங்கள் பிதாவினிடத்திற்கும்
என் தேவனிடத்திற்கும், உங்கள் தேவனிடத்திற்கும்!!
யோவான் 8:42 இயேசு அவர்களை நோக்கி: தேவன் உங்கள் பிதாவாயிருந்தால் என்னிடத்தில் அன்பாயிருப்பீர்கள். ஏனெனில் நான் தேவனிடத்திலிருந்து வந்திருக்கிறேன்; நான் சுயமாய் வரவில்லை, அவரே என்னை அனுப்பினார்.
தேவன் வரவில்லையாம், தேவன் அனுப்பிய குமாரன் தான் வந்தார். ஆனால் திரித்துவர்கள் திரித்து தேவனே வந்தது போல் போதிக்கிறார்கள்!!
யோவான் 16:28 நான் பிதாவினிடத்திலிருந்து புறப்பட்டு உலகத்திலே வந்தேன்; மறுபடியும் உலகத்தைவிட்டு பிதாவினிடத்திற்குப் போகிறேன் என்றார்.
பிதாவிடத்திலிருந்து புறப்பட்டு வந்தார், பிதாவிடத்திற்கு திரும்ப சென்றார். அவரே இவர் என்று குழப்பவாதிகள் நிறைந்து கிறிஸ்துவத்தை குழப்பிக்கொண்டிருக்கிறார்கள்.
யோவான் 15:23 என்னைப் பகைக்கிறவன் என் பிதாவையும் பகைக்கிறான்.
என்னை பகைக்கிறவன் "பிதாவையும்" பகைக்கிறான். ஒரே ஆள் தான் என்றால் இப்படி பிதாவையும் என்கிற பதம் தேவையற்றதாக இருந்திருக்கும்!!
இயேசுவின் தெய்வத்தன்மையை மறுக்கும் கூட்டத்தைச் சேர்ந்தவரான இவரைக் குறித்து அறியாமல் இவரோடு ”உறவுகொள்ளுவோர்” தங்கள் ஆத்தும இரட்சிப்பையே இழக்கும் பரிதாப நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
தொடருவது இதில் பதிக்கப்பட்டிருக்கும் காமெண்டுகள்...
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)