”ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையாது..” என்பார்கள். சின்னப் பிள்ளைகளென்றால் அடித்து திருத்தலாம்... வயசில பெரியவங்கள என்ன பண்ணுவது ? இங்கே தோற்றமளிக்கும் மூன்று சகோதரரில் நடுநாயகமாக நிற்கும் பாஸ்டர் இம்மானுவேல் ஆபிரகாம் அவர்கள் கடந்த சுமார் நான்கு வருடங்களில் செய்துவந்த சட்டவிரோதமான செயல்பாடுகள் காரணமாக மொத்த கிறிஸ்தவத்தின்மீதே புறவின மக்கள் நம்பிக்கையிழந்துள்ளனர். ஒரு கண்ணியமான மேய்ப்பனுக்குரிய தகுதிகளை மறந்து தெருப் பொறுக்கியைப் போல எல்லோருடனும் சண்டையிட்டு அவர்களுடைய அந்தரங்கங்களைத் தோண்டித் துருவி மனமடிவாக்கி அவர்களை ஓட்டுவதே இவர் செய்து வரும் ஊழியமாகும். இப்படிப்பட்டவரோடு நட்புகொள்ள வெட்கப்படாத நண்பர்களும் இணைய உலகில் இருப்பதற்குக் காரணம் இவர் கொஞ்சம் வசதியான ஆள் என்பதோடு கொஞ்சம் அதிரடி ஆசாமி என்பதே. இப்படிப்பட்டவர்களால் தேவனுடைய நாமம் தூஷிக்கப்படுகிறதே என்ற வேதனை நம் உள்ளத்தை நாள்தோறும் வாதிக்கிறது. இவர்களும் இஸ்லாமியருடன் விவாதிக்கப் புறப்பட்டிருப்பதே இன்னும் அதிர்ச்சிகரமான செய்தியாகும். தன் சகோதரனையே பகைத்து தூஷிப்பவன் எப்படி அந்நியரை ஆண்டவருக்குள் நடத்தமுடியும் ? ஆக இவரிடம் ஏதோ ஒரு பெரிய பெலவீனம் இருக்கவேண்டும். அது என்னவாக இருக்கும் என்று யோசித்தால் உடனே ஆவியானவர் மனதில் நினைப்பூட்டும் வசனம் இதுவே...
I தீமோத்தேயு 6:4 அவன் இறுமாப்புள்ளவனும், ஒன்றும் அறியாதவனும், தர்க்கங்களையும் வாக்குவாதங்களையும்பற்றி நோய்கொண்டவனுமாயிருக்கிறான்; அவைகளாலே பொறாமையும், சண்டையும், தூஷணங்களும், பொல்லாத சம்சயங்களுமுண்டாகி,
5. கெட்ட சிந்தையுள்ளவர்களும் சத்தியமில்லாதவர்களும் தேவபக்தியை ஆதாயத்தொழிலென்று எண்ணுகிறவர்களுமாயிருக்கிற மனுஷர்களால் உண்டாகும் மாறுபாடான தர்க்கங்களும் பிறக்கும்; இப்படிப்பட்டவர்களை விட்டு விலகு.
இந்த வசனத்தின்படி விலகிச்சென்று இன்று நான்கு வருடங்களாகிறது.ஆனாலும் என்னை விடாமல் துரத்தி துரத்தி தூஷித்தால் என்ன செய்யமுடியும் ? சாகும்வரை நான் பொறுமையாக இருக்க எனக்கு சம்மதமே. ஆனால் என் மௌனத்தையே அவர்கள் சம்மதம் என்று எடுத்துக்கொண்டால் ??? அதினால் மீண்டும் ஆண்டவருக்கே அவமானம் அல்லவா ? இதோ பார் கிறிஸ்தவர்கள் எல்லாம் பணத்துக்காக எதையும் செய்வார்கள். இரட்டை வேடம் போடுவார்கள். கள்ளக் கணக்கு வைத்திருப்பார்கள். குடும்பங்களைக் கெடுப்பார்கள். இப்படியெல்லாம் புதியவர்களும் வளரும் நிலையிலிருப்பவர்களும் நினைக்கமாட்டார்களா ? எனவே இனிமேலும் நான் அமைதியாக இருப்பதால் எந்த பயனும் இல்லை என்ற தீர்மானத்துக்கு வந்தேன். இதன் முடிவு எப்படியிருந்தாலும் நியாயத்துக்காக நின்றேன், என் மீதான கறைகளைத் துடைக்கவே போராடினேன் என்ற திருப்தியுணர்வு எனக்கு கிடைக்கும். இனிமேலும் அந்த ஆள் மற்றவர்களை இப்படி கண்டபடி தூஷிக்கவும் போலி ஐடிக்களில் புறப்பட்டு கேடி வேலைகளைப் பார்த்து பேடியைப் போல ஓடி ஒளியவும் அனுமதிக்கமாட்டேன் என்பது உறுதி.
”உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக; தீமையை வெறுத்து, நன்மையைப்பற்றிக்கொண்டிருங்கள்.” (ரோமர் 12:9 )
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)