Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அவதூறு செய்வோருக்கு பதில் சொல்லுவது தவறா ?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 347
Date:
RE: அவதூறு செய்வோருக்கு பதில் சொல்லுவது தவறா ?
Permalink  
 


அழகழகான பெயர்களை வைத்துக்கொண்டு காரணமே இல்லாமல் என்னை ஏனோ பகைத்து தூஷிக்க ஒன்றுகூடுகிறார்கள். காலையில் எழுந்ததும் கர்த்தரைப் பற்றிய தியானத்தைவிட தன் எதிரியைக் குறித்த அவதூறு தான் பிரதானமாக இருக்கிறது. மதியம் சாப்பாட்டு நேர  ஓய்வுவேளையிலும் கூட தின்ற சோறு அமிலமாகிவிடுமளவுக்கு எரிச்சல் தொடருகிறது.

இதோ இந்த பையன் சொல்லுவது போல இவனுடன் நாம் எப்போது எப்படிப்பட்ட மோதலில் ஈடுபட்டோம் என்று நினைவில்லை. அது அநேகமாக டிஜிஎஸ் ஐயா போட்டோவைப் போட்டு எல்லோரும் தூஷித்தபோது என்று நினைக்கிறேன். ஆனாலும் இவனுடன் நான் மோதலைத் தவிர்க்கவேண்டி இவனை அன்ஃப்ரண்டு செய்தேன்.

உடனே தனிமடலில் என்னைத் தொடர்புகொண்டான்... அப்போது நான் எழுதியவற்றை இங்கே ஆதாரமாக பகிருகிறேன். மீண்டும் சொல்லுகிறேன், கர்த்தருடைய அன்பை அறியாதோரிடம் நாம் எதுவரைக்கும் வேண்டுமானாலும் தாழ்ந்து போவேன். ஆனால் அவரை மறுதலிப்பவரைப் பொறுத்துக்கொள்ளவேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நான் மோசமாக எழுதியதெல்லாம் கிறிஸ்துவின் தெய்வத்தன்மையை மறுத்து என்னோடு மோதியவர்களுடன் மாத்திரமே.

richard asir.JPG

Conversation started 15 December 2012

    Yauwana Janam
    15/12/2012 19:54

    Welcome... (நண்பரானதற்கு வரவேற்பு...)

    07/09/2013 08:50
    Richard Asir

    என்ன வெவரம் சார் நீங்க...ப்ரெண்ட் லிஸ்ட்ல் இருந்து என்னை கழட்டி விட்டுட்டீங்க...வேறு எந்த கமாண்ட் குடுக்கவும் முடியாதபடி என்னை ப்ளாக் பண்ணீட்டீங்க...சூப்பர் தலைவா...

    Yauwana Janam
    07/09/2013 10:41

    அப்படியல்ல தம்பி நமக்குள்ளே ஏதோ முன்விரோதம் போல நீங்கள் எழுதுவதால் அதுபோன்ற தேவையற்ற சங்கடத்தை தவிர்க்க எண்ணி நான் விலகிக்கொண்டேனே தவிர உங்களை நீக்கவில்லை.

    முதலில் நமக்குள் ஒரு புரிதல் இல்லாமல் நாம் கடவுளுடைய அன்பை மற்றவர்களுக்கு சொல்லமுடியாது அல்லவா ? நானும் ஒரு முன்னாள் நாத்திகன் தான். கம்யூனிச கொள்கையிலும் தீவிரமாக இருந்தேன். எனக்கும் கலகம் பண்ண தெரியும்.

    ஆனாலும் மரித்துப்போன ஒருவருடைய ஆன்மாவுக்கு விரோதமாக பேசுவது கடவுளுக்கே எதிரானதாகும். அது நம்மை இன்னும் இருளில் தள்ளிவிடும்.இதை மாத்திரம் புரிந்துகொள்ளுங்கள்.

    07/09/2013 18:34
    Richard Asir

    அண்ணா நமக்குள் எந்த முன் விரோதமும் இல்லை ..நான் யாரையும் முன் விரோதியாக நினைப்பதுமில்லை..ஆனால் தவரு என்று எனக்கு பட்டால் விமர்சிக்க தயங்காமல் மாட்டேன் அது என் தந்தையாக இருந்தாலும்....அப்புரம் நானும் நாத்திகனச்க இருந்தவன் தான் நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் வரை...என் தந்தை இன்னும் நாத்திக கம்யூனிஸ்ட்தான்...நாத்திகர்களின் பாசரையில் வார்க்கப்பட்டவன் நான்..இன்று கர்த்தரின் கிருபயால் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு இஸ்லாமியர்கள் மத்தியில் ஊழியம் செய்து வர கிருபை செய்தார்..../அப்புரம் கலகம் செய்வது எனக்கு வராதுங்க..../மரித்துப்போனவரை பற்றி நான் தூஷிக்கவில்லை..அவர் செய்த ஊழியம் சர்யானதா என்றுதான் கேட்கிறேன்..அவர் விட்டுச்சென்றதைதான் அவர் வாரிசுகள் செய்கிறார்கள்....என் பேச்சு உங்களை காயப்படுத்தியிருநால் மன்னித்துக்கொள்ளுங்கள்...

    07/09/2013 22:48
    Yauwana Janam

    உங்கள் அன்புக்காக நன்றி தம்பி...........ஆனாலும் நாம் விஷயம் தெரிந்துவிட்டதால் என்னவேண்டுமானாலும் பேசலாம்..........ஆனால் அடித்தட்டு மக்களுக்கு இதெல்லாம் புரியாது.

    இன்னும் நிறைய சொல்லலாம். முதலில் நிதானமாக நட்புகொள்ளுவோம்.

- இவ்வளவு தான் இவனோடு நமக்கு தொடர்பு... ஆனால் ??? வேறென்ன சொல்ல.

தன் முயற்சியில் சற்றும் தளராத போலி பெந்தெகொஸ்தே பெருச்சாளியான இம்மானுவேல் ஆபிரகாம் சற்று இடைவெளி விட்டு அடுத்த ரவுண்டுக்கு வருகிறார்.

இதோ அவருடைய சொத்தையான ஒரு அவதூறு பதிவு.... இதன் விவரத்தை என்னிடம் கேட்டிருந்தால் நானே கொடுத்திருப்பேன்... மடையன். இது யாருக்கு எங்கே எப்போது எழுதப்பட்டது என்ற அறிவுகூட இல்லாமல் மொட்டைத் தாத்தான் குட்டையிலே விழுந்தான் என்பது போல எதையோ எழுதியிருக்கிறார். அதை லைக் பண்ணவும் சில ஜந்துக்கள்... எல்லாம் ஒரே தமாஷ்..!!! biggrinfuriousbiggrin

latest for igi.jpg

 

இவருடைய அக்கிரமங்களுக்கு யாரும் துணையாக வரவில்லை போலும். எனவே தன்னைத் தானே பெந்தெகொஸ்தேகாரன் என்று பெருமையாக அறிவித்துக்கொண்ட இந்த ஆள் தனக்கு அடிவருட (மேசியாவின்) எதிரிகளைத் துணைக்கு அழைக்கிறார். பாஸ்டா, இது இயேசுவின் தெய்வத்தன்மையை மறுத்து திருச்சபையாரையும் உம்மைப் போன்ற பரிசுத்தவான்களையும் அவர்கள் அவதூறு செய்தபோது அவர்களுக்கு பதிலடியாகக் கொடுத்தது. அப்போதெல்லாம் உம்மை யாரென்று இவர்களுக்கே தெரிந்திருக்காது,பாஸ்டா..... இதன்மூலம் ஒன்று நிச்சயமாக தெரிகிறது, பேந்தெகொஸ்தேகாரன்  எப்ப வேணாலும் எந்த பக்கம் வேணுமானாலும் சாய்ஞ்சுக்குவான். அவனுக்கு தேவை அவன் வயிறு நிரம்பணும்....இல்லேன்னா அவன் வயிறு எரியுமே ??? blankstarebiggrinblankstare



Attachments
__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

நீதிமொழிகள் 10:12 பகை விரோதங்களை எழுப்பும்; அன்போ சகல பாவங்களையும் மூடும். “

-என்று வேதம் சொல்லுகிறது.அதன்படி யார் நம்மீது பகைமை பாராட்டினாலும் அதுகுறித்து தீர்க்கமாக யோசித்து நம்மை நாமே நிதானித்தறிந்து கர்த்தருக்கு பயந்து எப்போதும் அமைதி காத்து வருகிறோம். நம்முடைய அமைதியை அவர்கள் பெலவீனம் என்று கருதிவிடுகிறார்களோ என்னவோ ?  biggrin ஆனால் கர்த்தர் கிரியை செய்யவேண்டும் என்றே நாம் அமைதியாக இருக்கிறோம். இது நமக்கெதிரான தாக்குதலாக நாம் கருதினால் நாம் நமக்காகப் போராடலாம்.அதுவும்கூட ஒரு கிறிஸ்தவனுக்கு இலட்சணமாக இருக்காது. நம்முடைய ஆண்டவரே இப்படி சொல்லுகிறார்,

யோவான் 5:31 என்னைக்குறித்து நானே சாட்சிகொடுத்தால் என் சாட்சி மெய்யாயிராது. யோவான் 5:32 என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவர் வேறொருவர் இருக்கிறார், அவர் என்னைக்குறித்துக் கொடுக்கிற சாட்சி மெய்யான சாட்சியென்று அறிந்திருக்கிறேன்.

ஆகவே நாம் எப்போதும் ஒன்றுக்கும் விளக்கமோ மறுப்போ தெரிவிக்காமல் அவர்களுக்கு சமமாக நாமும் இறங்கி நம்மைக் கறைபடுத்திக்கொள்ளாமல் மௌனமாகவே இருந்தோம். ஆனாலும் இவர்களுடைய அக்கிரமங்கள் கட்டுக்கடங்காமல் செல்லும்போது மிகுந்த வேதனையும் மன உளைச்சலும் உண்டாகிறது. அவன் நம்மை ஏசவில்லை, அப்படியே ஏசினாலும் கர்த்தர் பதிலளிக்கட்டும் என்று நாம் பொறுமையாக இருக்கும் அதேநேரத்தில் இந்த அவதூறுகளுக்கு ஒரு முடிவே இல்லாமல் செல்லும்போது இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கும் சாமான்யர்களும் இன்னும் ஆண்டவரை அறியாதவர்களும் அல்லது அறிந்தும் மறுபிறப்பின் அனுபவத்தை அடையாதவர்களும் இதனால் இடறலடைவார்களே என்று ஒரு வெட்கமும் அவமானமும் உண்டாகிறது. நாம் செய்யாத ஒரு குற்றத்தை ஒருவர் செய்ததாக சொல்லும்போது நாம் அமைதியாக இருப்பதால் என்ன இலாபமுண்டு. அல்லதுசெய்யவில்லை என்று மறுக்கும்போது உண்டாகும் விளைவு என்ன ? குற்றஞ்சாட்டுபவன் ஆதாரமில்லாமல் குற்றஞ்சாட்டினாலும் அதை நிரூபிக்காமல் வெறுமனே அவதூறு செய்துகொண்டே இருந்தால் ? ஒரு நாள் இரண்டு நாள் அல்ல, பல வருடங்களாக ? அப்படியானால் மன்னிப்பு அன்பு ஒப்புரவு போன்ற தெய்வீக குணாதிசயங்களின் நடைமுறை கேள்விக்குறியதாகிவிடுகிறது.இது உடனே நிறுத்தப்படவேண்டும். முகாந்தரமின்றி தூஷிக்கும் பணியை சம்பந்தப்பட்டவர்கள் உடனே நிறுத்தவேண்டும். அவ்வாறு எழுதப்பட்டிருப்பவற்றுக்கும் தகுந்த விளக்கம் கொடுக்கப்படவேண்டும். ஆதாரமற்றவை உடனடியாக நீக்கப்படவேண்டும். இல்லாவிட்டால் இதேபோன்று ஒருவருக்கொருவர் கடித்து பட்சிக்கும் ஒரு விகாரமான சந்ததி பெருகிவிடும். பெந்தெகொஸ்தே காரன் என்றாலே கலகக்காரன் குழப்பவாதி என்பதையெல்லாம் கடந்து இப்போது சண்டைக்காரன் என்று ஆகிவிட்டது. இதுபோன்ற அவலத்தை நேருக்கு நேர் பார்த்து மனம் வெதும்பி மனம் நொந்து போய் வடிகால் தேடியே இதுபோன்ற இணையங்களில் பதிவுசெய்து வைக்கிறோம். இதில் வெறுமனே சிலருடைய அக்கிரமங்கள் மட்டுமல்லாது ஆரோக்கிய உபதேசத்தின் அடையாளங்களும் அவசியங்களும் பகிரப்பட்டுள்ளது.

கீழே தரப்பட்டிருக்கும் தொடுப்பில் சென்று பார்க்கையில் கிரிமினலான இம்மானுவேல் ஆபிரகாம் எனும் கள்ளப் போதகன் ஒரு மோசடியாளன் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. .

https://www.facebook.com/notes/prason-christopher-robin/rev-immanuel-abraham-the-copy-cat-fraud-pastor/10150335462383632

இவன் சொந்தமாக ஒன்றையும் யோசித்து எழுத அறியாதவன் எனவே இங்குமங்கும் சேகரித்தவைகளால் தன் பெட்டகத்தை நிரப்பியிருப்பது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறதும். மேலும் இந்த ஆள் நம்மை விரோதிக்கக்காரணமாக இருந்த ஆரம்ப காலத்தின் ஆதாரங்களும் அடுத்தடுத்து இங்கே பதிக்கப்பட இருக்கிறது. இந்த வாரம் ஃபேஸ்புக் தளத்தில் மெல்லும் வாய்களுக்கு நிறைய அவல் காத்திருக்கிறது. எதிரிகள் எதிர்பார்த்த அனைத்தும் அரங்கேற இருக்கிறது. ஒதுங்கிப்போனாலும் மீண்டும் மீண்டும் வம்பு சண்டைக்கு இழுத்தவர்கள் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று ஓடத்தான் போகிறார்கள். ஆனாலும் அதற்குள் பலருடைய பழைய சரக்குகள் வேகமாக அழிக்கப்படும் ஆபத்தும் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.ஆனாலும் நாம் சேகரித்துவைத்திருக்கும் ஆதாரங்களே இவர்களை தோலுரிக்கப்போதுமானதாகும். துணிந்தவனுக்கு தூக்கும் மேடையும் ஆனந்த ஊஞ்சலாக மாறிவிடும், இது எனக்காக நான் செய்யும் யுத்தமாக இல்லாமல் நான் ஒரு தவறானவனாக இருந்தாலும் என் தேவனுடைய நாமம் என்னால் தூஷிக்கப்படக்கூடாதே என்று தான் களத்தில் இறங்குகிறேன்.

சங்கீதம் 118:13

நான் விழும்படி நீ என்னைத் தள்ளினாய்; கர்த்தரோ எனக்கு உதவிசெய்தார்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard