மேற்காணும் படத்திலுள்ள சகோதரன் ரவி லெனின் ஸ்டான்லி இன்று நம்மிடையே இல்லாதுவிட்டாலும் இன்றும் நம்மோடு பேசிக்கொண்டிருக்கின்றன இந்த வார்த்தைகள். இவர்மீது அபிமானமும் அன்பும் கொண்டவர்கள் பலரை நானும் அறிவேன். அப்படிப்பட்ட கண்ணியமான ஒருவர், யாருக்கும் எதற்கும் அடங்காமல் வெறியாட்டம் போட்டுக்கொண்டிருக்கும் இம்மானுவேல் ஆபிரகாம் எனும் கள்ளப் போதகனின் முறைகேடான செயல்பாடுகளைக் கண்டித்து அன்போடு அனுப்பிய மடல் ஒன்றை அண்மையில் பார்க்க நேரிட்டது. அதன் ஸ்க்ரீன் ஷாட் இங்கே தரப்படுகிறது.
மெய்யான அக்கறையோடும் உள்ளன்போடும் வைக்கப்பட்ட இதுபோன்றதொரு வேண்டுகோளையே புறக்கணித்து அதையும் பரியாசம் பண்ணுவது போல தனி தலைப்பில் கட்டுரையாகப் பதித்து எகத்தாளம் செய்ததுடன் தொடர்ந்து தன்னுடைய அக்கிரமங்களை அரங்கேற்றிக்கொண்டிருக்கும் கிரிமினலான இம்மானுவேல் ஆபிரகாம்எனும் கள்ளப் போதகனுடைய தவறான போக்குகளை ஒருவரும் கண்டிக்க முன்வராவிட்டாலும் எல்லாவற்றையும் கண்காணித்துக்கொண்டிருக்கும் ஆண்டவருக்காகவது இந்த ஆள் பயப்படவேண்டும். அந்த ஆளுடைய தூஷணங்களுக்கு அஞ்சியே இன்னும் பலர் அந்த ஆளுக்கு விரோதமாக ஒன்றும் சொல்லமுடியாமல் ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தன் அழுக்கையே ஒழுங்காக கழுவிக்கொள்ள வக்கில்லாத இவன் இஸ்லாமியர்களோடு மோதிக்கொண்டிருக்கிறான். அறிவுபூர்வமாகவும் நிதானமாக்வும் இஸ்லாமிய நண்பர்களோடு சத்தியத்தை விவாதிக்கும் சில நண்பர்களுடன் ஒட்டிக்கொண்டு அற்ப விளம்பரம் தேடிக்கொண்டிருக்கிறான். இவனுடைய அரைவேக்காட்டுத் தனமான செயல்பாடுகளால் தமிழ் இணைய உலகில் கிறிஸ்தவத்துக்கு தலைகுனிவு ஏற்பட்டிருக்கிறது என்பதே சகிக்கமுடியாத உண்மையாகும். இதுபோதாதென்று (ஃபேஸ்புக் தளத்தில் ) வேறு சில போலி கணக்குகளிலிருந்தும் தனது மதியீனத்தை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறான். அதுகுறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.