Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: விழித்துக்கொண்ட ஜாமக்காரர்கள் ?!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 347
Date:
விழித்துக்கொண்ட ஜாமக்காரர்கள் ?!
Permalink  
 


விழிப்பதில் இருவகை உண்டு; தூங்கிவிழிப்பதும் உண்டு, தூங்கியெழுந்து திருதிரு’வென்று விழிப்பதும் உண்டு. (வகைதொகையறியாமல் மாட்டிக்கொண்டு விழிப்பது இன்னொரு வகை.. :) ) இவ்விரண்டையும் ஒரே நேரத்தில் சாதிக்கக்கூடிய திற்ன்படைத்தோரே ”காவாங்கறை காவாக்காரங்க..” என்று அழைக்கப்படுகிறார்கள். அவர்களை தனது சீறிய தலைமையில் வழிநடத்திக்கொண்டிருக்கும் “ப்ளாக் ஷீப்” விஜய்  ஏஞ்சல் டிவியைக் குறித்து திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார்கள். உடனே அவரது அடிப்பொடிகள் பரபரவென்று லைக் சத்தம் எழுப்பியிருக்கின்றனர். அப்படியானால் நாம் இத்தனை காலம் சொல்லி வந்தது என்ன ம்புலிமாமா கதையா என்று யோசிக்கவேண்டியிருக்கிறது. அதுகுறித்த தொகுப்பு...

1175699_417668035017173_1957245276_n.jpg

 

Peter Samuel S

நீங்கள் அங்கே வேலை பார்த்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்கள் அதை மறுத்ததும் இல்லையென எண்ணுகிறேன். நீங்கள் அங்கே வேலை பார்த்தது உண்மையானால் உங்களுக்கு அவர்களைப்பற்றி, ஜெயக்குமார் ஓசன்னா சகோதரரை விட நன்றாகத் தெரிந்திருக்குமே. நீங்கள் இப்படிச் சொல்ல என்ன காரணம் என்று சற்று விளக்கமாக சொல்லலாமே... நீங்கள் அங்கே இருந்தபோது நடந்தவை என்ன, நீங்கள் வெளியேறக் காரணம் என்ன, நீங்கள் இப்போது இப்படிக் கூறக் காரணம் என்ன என்பதைப் பற்றியெல்லாம் அறிய சிறு ஆவல் தூண்டிவிட்டீர்கள். சொல்ல விரும்பினால் சொல்லலாமே..
18 hours ago · Like · 2

Vijay Kumar

/// உபதேச கோளாறு தவிர வேறு எந்த தனிப்பட்ட பிரச்சனையும் இல்லை சகோ. Peter Samuel S. ///

இதைப்போன்றதொரு பொறுப்பில்லாத ஸ்டேட்மெண்ட் வேறொன்று இருக்குமா என்று தெரியவில்லை. உபதேசரீதியான கோளாறு தவிர வேறு தனிப்பட்ட பிரச்சினை இல்லையென்றால் ஒரு கிறிஸ்தவனுக்கு வேறு என்ன பிரச்சினை இருக்கமுடியும் ? அல்லது இத்தனை தாமதமாக மெத்தன்மாகவும் மென்மையாகவுமே ஒரு பிரச்சினையை அணுகமுடியுமா ?

இரகசியம் என்னவென்றால் இவர்களும் இன்னொரு கல்ட் பிரிவைச் சேர்ந்தவர்களாவர். இவர்களுக்கு மற்றவர்களைக் குறித்து ஒன்றும் தெரியாது. ஆனாலும் எம்மைப் போன்றவர்களைப் பார்த்து கொஞ்சம் கொஞ்சம் தெரிந்துகொண்டு அடடா, இதுதான் பிரச்சினை போலிருக்கிறது, என்று திடீரென விழித்தது போல நடிக்கிறார்கள்.

இவர்களுக்கு இவற்றையெல்லாம் மிக ஆரம்பத்திலேயே நாங்கள் சொல்லிக் கொடுத்திருக்கிறோம். ஆனாலும் இவர்களுடைய தற்பெருமையும் ஈகோவும் மாத்திரமே எல்லா குழப்பங்களுக்கும் பிரிவினைக்கும் காரணமாக இருக்கிறது.

ஒரு குறிப்பிட்ட சொத்தை எத்தனை பாகமாக பிரித்தாலும் அதில் திடீரென பங்கு கோருபவருக்கு துடிக்கப்போவதில்லை. அவரைப் பொறுத்தவரையிலும் அவருக்கு கிடைத்தவரை லாபம் என்பதே. அப்படியே தமிழ் கிறிஸ்தவத்தில் இயன்றமட்டும் குழப்பம் ஏற்படுத்தி எல்லோரையும் சலிப்புக்குட்படுத்திவிட்டு திக்கற்று நிற்போரை தள்ளிக்கொண்டு போகவே இந்த “ப்ளாக் ஷீப்” விஜய் போன்றவர்கள் காத்திருக்கிறார்கள் என்பது வெளிப்படையாகும்.

ஏனெனில் நாம் ஏற்கனவே மொத்த கிறிஸ்தவத்தையும் இரண்டாகப் பிரித்து அதனிடையே ஆரோக்கிய கிறிஸ்தவத்தின் உபதேசங்கள் நசுக்கப்படுவதை கடந்த ஐந்து வருடமாக ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கிறோம். ஒன்று (மேசியாவின்) எதிரிகளான யெகோவா சாட்சிகள். அடுத்தது மீடியா மிருகங்களான ப்ரன்ஹாம் விசுவாசிகள். இவ்விரு தரப்புமே திரித்துவத்தை ஏற்கிறதில்லை. இதுவே எல்லா குழப்பத்துக்கும் காரணமாகும்.

இப்படி குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கவே சாக் பூணன் போன்ற சில்லறைகள் தோன்றினார்கள். எப்படி சார்லஸ் டேஸ் ரசல் மற்றும் ப்ரன்ஹாம் ஆகியோர் காலத்தில் அவர்கள் மாபெரும் சீர்திருத்தவாதிகளாகவும் அற்புதமான பிரசங்கியார்களாகவும் நேர்மையாளர்களாகவும் போற்றப்பட்டர்களோ அப்படியே தற்காலத்தில் சாக் பூணன் போன்றோரும் இந்த “ப்ளாக் ஷீப்” விஜய் போன்ற இளம்தலைமுறை அறிவுசீவிகளால் போற்றப்படுகின்றனர். அன்று அவர்களைப் பின்பற்றியோர் வழிதப்பிய ஆடுகளானது போலவே இவர்களும் தன்னில்தான் திருப்தி கொண்டு விரைவில் முடங்கிப்போவார்கள்.

ஏஞ்சல் டிவியை (மேசியாவின்) எதிரிகளான வேதமாணாக்கரும் யெகோவா சாட்சியினரும் இன்னும் இந்த சாக்கு பூனை கும்பலும் தீவிரமாக எதிர்த்தாலே தங்களை வளர்த்துக்கொள்ளமுடியும் என்ற இக்கட்டான நிலையில் இருக்கிறார்கள். எனவே பொருந்தா கூட்டணியாக ஒன்றுபட்டிருக்கிறார்கள். அதற்கேற்ப “ப்ளாக் ஷீப்” விஜய் எழுதும் அனைத்து சரக்குகளும் இன்னொரு ஆதாரத்திலிருந்து தருவிக்கப்படுவது அண்மைய காலம் வரையிலும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

பரிசுத்தாவியானவரின் பணியை இவர்களெல்லாம் அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளும்வரையிலும் இந்த குழப்பங்கள் தொடரும். அவர் ஒருவரே நல்ல போதகராவார். அவருக்கு இணையான போதகர் யாருமில்லையே ?! இவர்களோ அவரை குண்டலினி சக்தி என்று சொல்லி துணிகரமாக இகழுகிறார்கள். இவர்களைப் பொறுத்தவரையிலும் ஆவியானவரை ஆள்தத்துவமுடையவராக ஏற்கிறதில்லை. எனவே என்னைப் போன்றவர்களை காரணமில்லாமலே பகைக்கிறார்கள்.

  • யோவான் 16:13 சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.

 



-- Edited by Yauwana Janam on Thursday 22nd of August 2013 11:37:00 AM

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard