சென்னை வியாசர்பாடி பி.வி.காலனியைச் சேர்ந்த 14 வயது சிறுமி அபர்ணா. இவரை அதே பகுதியில் ஆசிரமம் வைத்து குறி சொல்லி வந்த அறவழி சித்தர் (48) என்பவர் போதை மருந்து கொடுத்தும், போதை ஊசி போட்டு பல முறை கற்பழித்து உள்ளார். இதற்கு அபர்ணாவின் தாயாரும் உடந்தையாக இருந்துள்ளார்.
அபர்ணாவுடன் தனது காம பசியை தீர்த்து அலுத்து போன அறவழி சித்தர் பின்னர் அந்த அப்பாவி சிறுமியை விபசார கும்பலிடம் விற்பனை செய்து விட்டார். அந்த கும்பலிடம் இருந்து தப்பிய அபர்ணா திருப்பதி சென்று அங்கு மாங்காய் வியாபாரம் செய்து வந்தார். சந்தேகம் அடைந்த ஆந்திர போலீசார் சிறுமியை பிடித்து விசாரித்த போது, அவர் தனது கடந்த கால சோகங்களை கூறினார்.
சிறுமியை தமிழக போலீசாரிடம் ஒப்படைத்தனர். சென்னை போலீஸ் டி.ஜி.பி. ராமானுஜம் உத்தரவின் பேரில் வியாசர்பாடி போலீசார் அறவழி சித்தரையும், சிறுமியின் தாயார் சிறுமலரையும் கைது செய்தனர். அறவழி சித்தரின் 2 அறைகள் கொண்ட ஆசிரமத்தில் போலீசார் சோதனையிட்ட போது ஆபாச சி.டி.க்கள் சிக்கியது. விபசாரகும்பலை சேர்ந்த குமார், செல்வம் மற்றும் மேலும் 2 பெண்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
அபர்ணாவின் கற்பை சூறையாடிய காமுகர்களான திருவான்மியூரைச் சேர்ந்த சதீஷ், வடசென்னையை சேர்ந்த குமார், அப்பு, கணேஷ், பப்புலு ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் சிறுமி அபர்ணாவிடம் உல்லாசம் அனுபவிக்க விபசார புரோக்கர் செல்வத்துக்கு ரூ.10 ஆயிரம் கொடுத்து உள்ளனர். மீட்கப்பட்ட சிறுமி அபர்ணா தற்போது குழந்தைகள் நல கமிட்டி பராமரிப்பில் காப்பகத்தில் உள்ளார். அவர் உடல் முழுவதும் போதை ஊசி போடப்பட்ட தழும்புகள் உள்ளது. அவர் கூறும் போது,
"விபசார கும்பலிடம் என்னை போல் மேலும் 2 சிறுமிகள் சிக்கி உள்ளனர். ஒருத்தி தி.நகரை சேர்ந்தவள் என்றும், இன்னொருத்தி மூலக்கடையை சேர்ந்தவள்'' என்றும் கூறினார். 7-ம் வகுப்பு வரை படித்துள்ள அவர் தொடர்ந்து படிக்க விரும்புவதாகவும் தெரிவித்தாள். அவரது விருப்பத்தை நிறைவேற்ற குழந்தைகள் நல கமிட்டி திட்டமிட்டுள்ளது. கைதான அறவழி சித்தர் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளனர். சித்தரிடம் ஏமாந்த பெண்கள் பற்றியும் விசாரணை நடக்கிறது.
மேலும் தலைமறைவான விபசார பெண் புரோக்கர் லதா, ஜெயா ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள்.
கோவை ரத்தினபுரி எம்ஜிஆர் நகரை சேர்ந்த கட்டிட தொழிலாளியின் மகன் ரவி(25), மகள் கல்பனா(20). ரவி கட்டட தொழிலாளியாக வேலை செய்து வந்தார். கல்பனா டெய்லரிங் படித்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் தனியாக இருந்த கல்பனா இறந்து கிடந்தார். ரத்தினபுரி போலீசார் வழக்கு பதிந்து ரவியிடம் நடந்த விசாரித்ததில், ''சாப்பாடு போடாமல் செல்போனில் பேசியதால் அடித்ததில் இறந்திருக்கலாம்'' என கூறினார்.
ஆனால், பிரேத பரிசோதனையில், கல்பனா பலாத்காரம் செய்யப்பட்டு மூச்சுத்திணறடிக்கப்பட்டு கொலையானது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், தங்கை யை பலாத்காரம் செய்து கொலை செய்ததை, ரவி ஒப்புக் கொண்டார். அவரை கைது செய்தனர். போலீசில் அவர் அளித்த வாக்குமூலம்: நானும், எனது தங்கையும் ஒரே கட்டிலில் படுத்து தூங்குவோம். தங்கை தூங்கிய பிறகு சில்மிஷங்களில் ஈடுபடுவேன். சம்பவத்தன்று வீட்டிற்கு வந்த நான், செல்போனில் ஆபாச படம் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது வந்த கல்பனாவிடம் தவறாக நடக்க முயன்றேன்.
அவள் என்னை துடைப்பத்தால் தாக்கினாள். இருப்பினும் நான் கீழே தள்ளியதில், மயக்கமடைந்தாள். பின்னர் பலாத்காரம் செய்தேன். உயிருடன் விட்டால் பிரச்னை என்று எண்ணி, தலையணையை எடுத்து அவளது முகத்தில் வைத்து அமுக்கி கொன்றேன் என கூறினார். ரவியை போலீசார் சிறையில் அடைத்தனர்.
சிறுமியை பலாத்காரம் செய்த சிறுவர்கள்:
நாகை மாவட்டம் சீர்காழி அருகே பொறையார் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த 16 வயது மதிக்கத்தக்க 2 பேர் மிரட்டி பலமுறை பலாத்காரம் செய்துள்ளனர். மகளின் உடலில் ஏற்பட்ட மாற்றத்தால் அவரது தாய், மருத்துவமனையில் பரிசோதித்தார். அப்போது கர்ப்பமானது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் சீர்காழி அனைத்து மகளிர் போலீசார் சிறுவர்கள் 2 பேரையும் கைது செய்து, தஞ்சை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.
II தீமோத்தேயு 3:1 மேலும், கடைசிநாட்களில் கொடியகாலங்கள் வருமென்று அறிவாயாக.
சென்னை: சென்னையில் 14 வயது சிறுமியை ஒரு சாமியார் பாலியல் பலாத்காரம் செய்து சீரழித்துள்ளார். இந்த கொடும் செயலுக்கு அந்த சிறுமியின் தாயாரும் உடந்தையாக இருந்தது அதிர்ச்சியை பரப்பியுள்ளது. சாமியார் மற்றும் தாயார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த சிறுமி மேலும் சீரழிந்து போக காரணமாக இருந்த 4 பேர் தலைமறைவாகி விட்டனர். பெரம்பூரைச் சேர்ந்தவர் அந்த சிறுமி. 14 வயதாகிறது. அவரது தந்தை பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார். தாயார் சசிகலாவுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு பெரம்பூரில் உள்ள ஒரு ஆசிரமத்திற்கு மகளை அழைத்துச் சென்றார் சசிகலா. அங்கு அறவழி சித்தர் என்ற குறி சொல்லும் சாமியாரிடம் அறிமுகப்படுத்தினார். அந்த சாமியாருக்கு வயது 48 ஆகிறது. அந்த சாமியார், சசிகலாவிடம் இரவு பூஜை செய்தால் எல்லாம் சரியாகி விடும் என்று கூறியுள்ளார். இதையடுத்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நள்ளிரவில் பூஜைக்கு ஏற்பாடு செய்தார் அந்த சாமியார். அன்று இரவு பூஜைக்குப் பதில் சிறுமியை தனது காம இச்சைக்குப் பயன்படுத்தி கற்பழித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த சிறுமி, தனது தாயாரிடம் வந்து கதறியுள்ளார். அதற்கு அந்தத் தாயார், சாமியார் எது செய்தாலும் அது நல்லதுக்குத்தான் என்று கூறி சமாதானப்படுத்தியுள்ளார் மகளை. சிறுமியின் தாயாரே இதைக் கண்டுகொள்ளாமல் விட்டதால் சாமியார் பலமுறை சிறுமியை வரவழைத்து வெறியாட்டம் போட்டுள்ளார். அத்தோடு நில்லாமல் தனது நண்பரான குமார் என்பவரிடம் சிறுமியை ஒப்படைத்து விபச்சாரத்திலும் ஈடுபடுத்த கூறியுள்ளார். குமார் சிறுமியை சீரழித்தார். பின்னர் செல்வம் என்பவரிடம் அனுப்பப்பட்டார் சிறுமி. இதையடுத்து செல்வம், அவரது மனைவி ஜெயா, ஜெயாவின் தோழி லதா ஆகியோர் அடங்கிய கும்பலிடம் சிக்கிக் கொண்டார் சிறுமி. இந்தக் கும்பல், சிறுமியை வைத்து விபச்சாரத்தில் இறங்கியது. தினசரி 10 பேர் வரை அந்த சிறுமி பந்தாடப்பட்டுள்ளார். இதில் கிடைத்த பணத்திலிருந்து சிறு பகுதியை சிறுமியின் தாயாரிடமும் கொடுத்துள்ளனர். அவரும் வாங்கிக் கொண்டு அமைதியாக இருந்துள்ளார். கடந்த பல மாதங்களாக இப்படி சித்திரவதைப்பட்ட சிறுமி கடந்த மாதம் செல்வம் வீட்டிலிருந்து தப்பி வெளியேறினார். எங்கு போவது என்று தெரியாமல் திருப்பதிக்குப் போனார். அங்கு மாங்காய் வாங்கி வி்ற்றுப் பிழைக்க ஆரம்பித்தார். இரவில் சாமி தரிசனம் செய்யும் கியூவில் சென்று அந்த பக்தர்களுடன் சேர்ந்து தூங்கி சமாளித்துள்ளார். ஆனால் தினசரி இப்படி அந்த சிறுமி வருவதைப் பார்த்த சிலர் சந்தேகப்பட்டு போலீஸாருக்குத் தகவல் கொடுத்து அவர்களிடம் சிறுமியை ஒப்படைத்தனர். பின்னர் போலீஸார், அந்த சிறுமியை சைல்ட் ஹெல்ப்லைன் ஊழியர்களைத் தொடர்பு கொண்டு அவர்களிடம் ஒப்படைத்தனர். விசாரணையில்தான் நடந்த கொடுமை அம்பலத்திற்கு வந்தது. இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். சிறுமியின் தாயார், சாமியார் ஆகியோர் உடனடியாக கைது செய்யப்பட்டனர். செல்வம், குமார், லதா, ஜெயா ஆகியோரைத் தற்போது போலீஸார் தேடி வருகின்றனர். சாமியாரின் ஆசிரமத்தில் போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது அதில் பல்வேறு இளம் பெண்களின் படங்கள் சிக்கியதாக தெரிகிறது. அவர் எத்தனை பேர் வாழ்க்கையை இப்படி சீரழித்தார் என்பதை கண்டுபிடிக்க அவரை தீவிரமாக விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.