தனக்கு எதிர்கருத்து எழுதுவோரை ஃபேக் ஐடி என்று குற்றஞ்சாட்டி உதாசீனம் செய்து உலக ஞானமான தர்க்கங்கள் மூலமாக மனதை வேதனைப்படுத்தி தனிமைப்படுத்தி கடைசியில் ப்ளாக் பண்ணுவது என்பது காவாங்கறை காவாக்காரர்களுக்கே உரிய தனி கலாச்சாரமாகும். அவர்களுடைய சீறிய தலையாக வலம்வரும் “ப்ளாக் ஷீப் விஜய்யை ஒரு அப்பிராணியாக சித்தரிக்க அவரைச் சுற்றிலும் ஒரு பட்டாளம் உருவாக்கப்பட்டு அவர தன்னிகரில்லாத மாமனிதர் ரேஞ்சுக்கு தூக்கிவைத்து கொண்டாடுகிறார்கள். ஆனால் உண்மையில் அவரும் எல்லாரைப் போல பெலவீனமானவரே என்பது அவருடைய குழந்தைத்தனமான சில ஸ்டேட்மெண்டுகளிலிருந்தும்அவர் ரசித்து லைக் போடும் சிலருடைய பின்னணியிலிருந்தும் அறிகிறோம்.ஆனாலும் பொய்யாகவேனும் அவரோடு நாங்கள் வாதிடமுடியாமல் ஓடிப்போய் அவரை ப்ளாக் பண்ணியதாகப் பொய்ப் புகார் ஒன்றை ஒருவர் பாடியிருக்கிறார். அதனை மறுக்கும் வண்ணமாக பழைய பதிவுகளைக் கிளறியபோது நாம் அல்ல அவரே நம்மை பகைத்து வெளியேற்றியது வெளிப்படையாகவே தெரிகிறது. இது அவருக்கும் கூட தெரியும்.ஆனாலும் மனசாட்சியை விற்றுவிட்டு நம்மோடு மோதுகிறார்கள். இவர்களோடு மோதும் பலம் நமக்கு இல்லாவிட்டாலும் பெலவீனரான நமக்கு ஆதரவாக ஆண்டவர் நிற்கிறார் என்ற நம்பிக்கையினாலே திருச்சபை அமைப்பை சிதைக்கப் புறப்பட்டிருக்கும் இந்த கயவர்களுக்கு எதிராக உறுதியுடன் களத்தில் நிற்கிறோம். பின்வரும் ஸ்டேடஸ் மற்றும் தொடரும் காமெண்டுகள் கடந்த 2012 வருடத்தின் ஆரம்பத்தில் செய்யப்பட்டதாகும். அப்போது முதலே இந்த பிரிவினைக்கான வித்து ஊன்றப்பட்டதென்பதையும் பகையின் வேர் அங்கே முளைவிட்டதென்பதையும் அனைத்து வாசக நண்பர்களுடைய கவனத்துக்கு தருகிறோம்.
Vijay Kumar
18 February 2012 via Mobile
நாங்கள் திருச்சபையை பாபிலோன் என்றழைக்கவில்லை பாபிலோனைத்தான் பாபிலோன் என்கிறோம். பரிசுத்த ஆவியை குண்டலினி என்பது தேவதூஷணம், நாங்கள் அந்நிய அக்கினியைத்தான் குண்டலினி என்றழைக்கிறோம். நாங்கள் ஊழியங்களை வியாபாரம் என்று சொல்லவில்லை, வியாபாரத்தைத்தான் வியாபாரம் என்கிறோம். உண்மையில் பாபிலோனை திருச்சபை என்பவர்களும், குண்டலினியை பரிசுத்த ஆவி என்பவர்களும், வியாபாரத்தை ஊழியம் என்பவர்களுமே தேவதூஷணம் செய்வோர் ஆவர்.
/// உண்மையில் பாபிலோனை திருச்சபை என்பவர்களும், குண்டலினியை பரிசுத்த ஆவி என்பவர்களும், வியாபாரத்தை ஊழியம் என்பவர்களுமே தேவதூஷணம் செய்வோர் ஆவர்.///
பழக்கதோஷத்தில் எதற்கு ^லைக்^ போடுகிறோம், ஏன் ^லைக்^ போடுகிறோம் என்றே புரியாமல் ^லைக்^ போட்ட பரிதாப ஜீவன்களுக்காக அனுதாபப்படுகிறேன். பெற்ற தாயைக் கூட தூஷிக்க அஞ்சாத இவருடைய கடைசி வரிகளில் தான் இருக்கிறது, பாபிலோனின் சூழ்ச்சி. தானே பாபிலோனின் ஊழியனாக இருந்து கிறிஸ்துவின் சரீரமாகிய சபைக்கு விரோதமாக இரவும் பகலும் வழக்குகளைப் பிணைத்துக்கொண்டிருக்கும் இவர் மிகத் தந்திரமாக தன்னை எருசலேம் வாசியாகவும் ஏனைய கிறிஸ்தவர்களை பாபிலோனிய வேசி மக்களாகவும் சித்தரிக்கிறார்.
இங்கே லைக் போட்டு பாபிலோனின் மதுவை ரசித்து ருசித்தவர்கள் நாளைக்கு இதையெல்லாம் மறந்துவிட்டு இவர்களால் தூஷிக்கப்பட்ட அதே பீடத்தில் முழந்தாளிட்டு அப்பத்துக்காகவும் ரசத்துக்காகவும் கையேந்தி நிற்போமே, அப்போது நம்முடைய மனசாட்சி உறுத்தாதா..? ஒரு மனிதனிடமா அப்பத்தையும் இரசத்தையும் வாங்குகிறோம் ? ஒரு அமைப்புக்காகவா காணிக்கை கொடுக்கிறோம் ? நாட்டில் எடுத்துப்போராட எத்தனையோ பிரச்சினை இருக்க ஓயாமல் திருச்சபையை நோக்கி வரும் இதுபோன்ற தாக்குதல்களை தேவ பெலத்தால் முறியடிப்போம். இவர் பாபிலோனை பாபிலோன் என்கிறார், நாங்கள் பாபிலோனை திருச்சபை என்கிறோம்,அடடா என்னே சாமர்த்தியம்..!
ஸ்தாபனத்துக்கு எதிராக பேசியே உபதேசக் குழப்பத்தைக் கொண்டு வந்து சபைகளை சிதறடித்த இரண்டே நபர்கள் உண்டு.ஒருவர் சார்லஸ் டேஸ் ரசல்.இன்னொருவர் வில்லியம் மரியம் பிரன்ஹாம். இந்த இரண்டு பேருடைய உபதேசமே அனைத்து சபைகளையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது.அந்த சர்ப்பங்களின் விஷத்தையே இந்த ஆட்கள் உமிழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
மந்தையாகக் கூட்டப்பட்ட தேவனுடைய சபையை மீண்டும் வனாந்தரத்துக்கு விரட்ட நினைக்கும் இவர்களுடைய எண்ணம் ஈடேறப்போவதில்லை. வஞ்சிக்கப்படும் ஆடுகளின் நிலைமை.ஏற்கனவே நான் ஒருமுறை எழுதியதுபோல பணம் போனால் போகட்டும், இரட்சிப்பு போனால் வரவே வராது.ஆம்,திருச்சபைகளைக் கலைக்க நினைக்கும் யாராக இருந்தாலும் அவர்கள் பாபிலோனின் ஊழியரே,எதிர் கிறிஸ்துவின் சீஷரே.
”அந்நாளில் ஏழு ஸ்திரீகள் ஒரே புருஷனைப் பிடித்து நாங்கள் எங்கள் சொந்த ஆகாரத்தைப் புசித்து, எங்கள் சொந்த வஸ்திரத்தை உடுப்போம்; எங்கள் நிந்தை நீங்கும்படிக்கு உன்பேர்மாத்திரம் எங்கள்மேல் விளங்கட்டும் என்பார்கள்.” (ஏசாயா.4:1)
திருச்சபையை விட்டு அலைந்து திரியும் சோரம்போன ஸ்திரீயின் பிள்ளைகள் இப்படியே நாங்களே உழைத்து, சாப்பிட்டு, கொண்டு, கொடுத்து வாழுவோம்.யாருக்கும் துரும்பைக் கூட கிள்ளிப் போடமாட்டோம், எச்சை கையாலும் காக்கா ஓட்டமாட்டோம்.ஆனால் எங்களுக்கு கிறிஸ்துவே மணவாட்டி என்பார்கள்.
திருச்சபையின் விசுவாசப் பிரமாணத்திலேயே தெளிவாக அச்சடிக்கப்பட்டு வாரந்தோறும் அறிக்கையிடுகிறோம், ”உலகளாவிய ஒரே திருச்சபையை விசுவாசிக்கிறேன்” என்பதாக.வேறென்ன குழப்பம்..??? அதான் குழப்பம்..!!!
/// Golda, Why dont you ask about Sadhu and Vincent Selvakumar too.! Why you purposely exclude these two??? ///
உங்க பழைய முதலாளிகள் என்பதால் இருக்குமோ ??? அன்றைக்கு இனித்தது, இன்றைக்கு கசக்குது ..? ஒரு சிலையைப் பார்த்து கட்டித் தழுவி அழுவது போல அழுது நடித்தபோது நீங்கள் பாபிலோனுக்கா, எருசலேமுக்கா யாருக்கு ஊழியம் செய்தீர் ஐயா..? அதைக் குறித்து ஒருநாளாவது வருத்தப்பட்டதுண்டா ? சாதுவிடம் இருந்த நாட்களைக் குறித்து பெருமைப்படுவதாக ஒரு முறை சொன்ன ஞாபகம்..!
Yauwana Janam @ Vijay Kumar
/// பாபிலோனை திருச்சபை என்பவர்களும், குண்டலினியை பரிசுத்த ஆவி என்பவர்களும், வியாபாரத்தை ஊழியம் என்பவர்களுமே தேவதூஷணம் செய்வோர் ஆவர். உண்மையில் நாங்கள் திருச்சபையை பாபிலோன் என்றழைக்கவில்லை பாபிலோனைத்தான் பாபிலோன் என்கிறோம். பரிசுத்த ஆவியை குண்டலினி என்பது தேவதூஷணம், நாங்கள் அந்நிய அக்கினியைத்தான் குண்டலினி என்றழைக்கிறோம். நாங்கள் ஊழியங்களை வியாபாரம் என்று சொல்லவில்லை, வியாபாரத்தைத்தான் வியாபாரம் என்கிறோம். ///
எனக்கன்பான நண்பர் விஜய் அவர்களின் முகப்பு நிலைசெய்திக்கு ”ஓ” போட்ட பெருமக்களே,மேற்கண்ட செய்தியும் அண்ணன் எழுதியது தான்,அதற்கும் ஒரு ”ஓ” போடுங்க, பார்ப்போம்.. இவங்கல்லாம் புத்திசாலிங்களாம்... ஹலோ, நாங்கல்லாம் 1947-லேயே காது குடையும் ”பட்ஸ்” யூஸ் பண்ணவங்களாக்கும்..!
Yauwana Janam @ Alex Ander
/// போதும் விட்டுவிடுங்கள் ! நீங்கள் யாரும் ஒரு முடிவுக்கு வரபோவது இல்லை என்பது திண்ணம் ! கருத்துகள் காரமாய் இருக்கலாம் , முடிவு இனிப்பாய் இருக்கவேண்டும் , கசப்பாய் அல்ல .இங்கு கசப்பில் முடிந்தவை தான் அதிகம் ! விஜய் அண்ணா , உங்கள் கமெண்ட்ஸ...் பாக்ஸ் ஐ முடக்கி விடுங்கள் ! வெறும் கருத்தகளை மட்டும் தெரிவியுங்கள் ///
கிறிஸ்மஸ் சீஸனில் கிறிஸ்மஸ் கொண்டாடுவோர் பாபிலோனிய வேசி சபையைச் சேர்ந்தவர்கள் தூஷித்தவர் தானே...ஆமா,நீங்க கசப்பைப் பற்றி பேசறீங்களாக்கும், நல்ல ஜோக் தம்பி..!
நண்பர் விஜய்க்கு தேவையே சர்ச்சைகளும் சொறிகளும் தானே தம்பி...அவரைப் போய் காமெண்டு பாக்ஸை முடக்கச் சொல்லுகிறீர்களே...அப்புறம் அவருக்கு எப்படி பொழுதுபோகும், சொல்லுங்க...உங்கள் ஆளைக் குறித்து ஒரு வசனம் சொல்றேன்,ஃபிட் ஆகுதா பாருங்க...
I தீமோத்தேயு 6:4 அவன் இறுமாப்புள்ளவனும், ஒன்றும் அறியாதவனும், தர்க்கங்களையும் வாக்குவாதங்களையும்பற்றி நோய்கொண்டவனுமாயிருக்கிறான்; அவைகளாலே பொறாமையும், சண்டையும், தூஷணங்களும், பொல்லாத சம்சயங்களுமுண்டாகி...
நண்பர்கள் விரோதிகளாகவும் விசுவாசிகள் அவிசுவாசிகளாகவும் தாழ்மையுள்ளவர்கள் பிடிவாதக்காரர்களாகவும் மாறுகின்றனர்.
/// சகோ.அலெக்ஸ் எனது திரிகள் எப்போதும் கல்லெறியோடுதான் நிறைவுபெறும். அதைத் தவிர்க்கவே முடியாது. ஆனால் அந்தக் கல்லெறிதான் எனக்கு ஊக்கமருந்தே!! ///
நண்பரே,உங்களைப் பற்றி ரொம்ப பெரிசா கற்பனை பண்ணிக்காதீங்க... நீங்க சொன்ன கருத்துக்கு மாற்றுக்கருத்து அல்லது இன்னொரு கோணத்திலிருந்து சொல்லப்படும் கருத்து கல்லெறிவதாக ஆகாது. அப்படியானால் நீங்கள் சொல்லும் கருத்தும் ஒட்டுமொத்த கிறிஸ்தவத்தின்மீதும் கல்லெறியும் செயலாகும். அதற்காகவே இந்த போராட்டம்.சட்டம் தெரிந்த ஆளாக இருந்தாலும் சட்டத்தை கையில் எடுத்துக்கொள்ளுவதும் சட்டவிரோதமாகும்.மற்றபடி தெரு நாய்மீது கூட கல்லெறியும் பழக்கம் எனக்கில்லை,நண்பரே..!
உங்கள் பதிவுகள் ஹிட்டாக உதவிசெய்யும் உற்ற நண்பனாக என்னை நினைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் தேவ புத்திரனாக மாற எளிமையான வழி ஒன்றை சொல்லட்டுமா..? Yauwana Janam
/// நீங்கள் தேவ புத்திரனாக மாற எளிமையான வழி ஒன்றை சொல்லட்டுமா..? ///
@Vijay Kumar நண்பரே, எல்லோரையும் நிற்கவைத்து கேள்விகேட்கும் நீங்கள் உங்களிடம் கேட்கப்படும் பெரும்பாலான கேள்விகளுக்கு பதிலளிக்கிறதில்லை.
மேற்கண்ட வரிகளில் ஒரு வாய்ப்பைக் கொடுத்திருந்தேன், நீங்களோ கவனிக்காதது போல இருக்கிறீர்கள். இதற்கு என்ன அர்த்தம் உங்களுக்கு தேவபுத்திரனாக மாறவும் ஆசை இல்லையா ?
இவ்வாறு அட்ரஸ் பண்ணி எழுதும்போது அதற்கு ”லைக்” போடாவிட்டாலும் ஓரிரு வரிகளிலாவது பதிலளிப்பது பரஸ்பர புரிதலுக்கு உதவுமல்லவா ?
/// சபையிலோ அல்லது வீட்டிலோ சிலுவை வைப்பது மற்றும் இயேசு படம் வைப்பது வேதாகமத்தின்படி சரியா? /// // சபையிலோ அல்லது வீட்டிலோ // இன்னொரு முக்கியமான இடத்தை மறந்துவிட்டீர்களே,மனைவியின் கழுத்திலோ...???
இதுகுறித்து எனது கருத்தை கட்டுரையாக எழுதியிருக்கிறேன். வந்து பாருங்கள், தேவைப்பட்டால் விவாதிப்போம்.