Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஜாமக்காரனையே ஏமாற்றிய (மேசியாவின்) எதிரிகள்


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 347
Date:
ஜாமக்காரனையே ஏமாற்றிய (மேசியாவின்) எதிரிகள்
Permalink  
 


போலி முகம் தெரிந்தது

"பூரண சற்குணராக இருங்கள்" என்ற பத்திரிக்கை ஆசிரியர் திரு.ஞானப்பிரகாசம் என்பவரின் மறுப்பு விளக்கம் ஜாமக்காரன் ஜுன் 2013 இதழில் வாசித்து அதிர்ந்துப்போனோம். ஞானப்பிரகாசம் சி.எஸ்.ஐ சபையை சார்ந்தவன் என்று தன் பத்திரிக்கையில் பச்சை பொய் கூறியிருக்கிறார்.

அவர் திரித்துவத்தை மறுக்கிறவர். இயேசுகிறிஸ்துவை தெய்வமாக ஏற்றுக்கொள்ளாமல் இயேசுவை மறுதலிக்கிறவர்களின் கூட்டத்ததை சேர்ந்தவர் என்பது இப்போது வெளிப்படையாக அறியமுடிந்தது.

ஜாமக்காரன்: மேலே எழுதியபடி ஏராளமான வாசகர்கள் அவர் தன் பத்திரிக்கையில் எழுதிய பழைய செய்திகளை அனுப்பி பல ஆதாரத்துடன் அவரைப்பற்றி எழுதி எனக்கு இ-மெயில் மூலமாகவும், கடிதமும் எழுதியுள்ளனர்.

அவர் யெகோவாப்பற்றி எழுதிய பழைய கட்டுரைகளை எனக்கு அனுப்பியுள்ளனர்.

சகோ.ஞானப்பிரகாசம் இப்படி பொய் பேசுவார் என்று நான் எதிர்ப்பார்க்கவேயில்லை.

திருநெல்வேலி மகாராஜா நகரிலிருந்து பலர் கடிதங்கள் எனக்கு எழுதியுள்ளனர்.

பொதுவாக யெகோவா சாட்சி சபையினர் தங்களை பைபிள் லவ்வர்ஸ் அசம்பளி என்றும் பைபிள் ஸ்டுடண்ட்ஸ் என்றும் நாங்களும் கிறிஸ்வர்கள்தான் என்றும் பொய் சொல்லிதான் தங்களை அறிமுகப்படுத்திக்கொள்வார்கள்.

நானும் அவர் எழுதிய நல்ல கட்டுரைகளை வாசித்து ஏமார்ந்துபோனேன். ஆனால் எழுதிய அந்த கட்டுரையை பொருத்தவரை உபதேசத்திலோ, சத்தியத்திலோ பிழை ஏதும் இல்லை.

ஆனால் 2013 ஜூலை மாதம் அவர் என்னைப்பற்றி தாக்கி ஜாமக்காரன் ஆசிரியருக்கு எதன்மீது நம்பிக்கை என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையை வாசித்தபோதுதான் அவரின் உண்மை சொரூபம் தெரிந்தது. ஆதாம் - ஏவாளை பாம்பு ரூபத்தில் பிசாசு ஏமாற்றியதுபோல தன் தவறான உபதேசத்தை வேத வசனம் மூலம் மறைத்து தன் கட்டுரையில் பலரை ஏமாற்றிவிட்டார்.

என்னை தாக்கி எழுதிய கட்டுரைக்கு அடுத்த பக்கத்தில் அவர் எழுதிய கட்டுரைமூலம்தான் அவர் முழு முகமும் தெரிந்தது. (பக்கம் 12).

பரிசுத்த ஆவியானவரை ஆள்தத்துவம் இல்லாதவர் என்றும் ஆவியானவருக்கு காற்றின் விசைஎன்பதுதான் பிரதான அர்த்தம் என்று எழுதியுள்ளார்கள்.

கிரேக்க மொழியான PNEUMA எனும் வார்த்தைத்தான் தமிழில் ஆவி என்றும் ஆவியானவர் என்றும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட வார்த்தையை தேவதூதன், பிசாசு, தேவன் ஆகியவர்கள் ஆள்தத்துவங்களாக இருந்தாலும் இவர்களை குறிப்பிட மட்டுமே PNEUMA என்ற வார்த்தையை பயன்படுத்தலாம்.

மற்றெல்லா சந்தர்ப்பத்திலும் ஆள்தத்துவமில்லாத விசை அல்லது ஆவியாகவே அர்த்தம் கொள்ளவேண்டும்.

இயேசு குறிப்பிடும் சத்திய ஆவி என்பது தூதனுமல்ல, பிசாசுமல்ல, தேவனுமல்ல. எனவே சத்திய ஆவி என்று இயேசுவால் கூறப்பட்டதை அந்த சத்திய ஆவி என்பதை ஆள்தத்துவம் எனக்கூறமுடியாது. ஆகவே யோவான் 16ல் இயேசு கூறுகிற சத்தியஆவியும் ஓர் ஆள்தத்துவமல்ல என்று எழுதியுள்ளார்.

ஆகவே என் வாசகர்கள் என்னைவிட மிக எச்சரிக்கையாக இருப்பதை நினைத்து தேவனை துதிக்கிறேன்.

மற்றவர் செய்தியை எடுத்து ஜாமக்காரனில் வெளியிடும் விஷயத்தில் என்னையே எச்சரிக்கை செய்து உணரவைத்த என் அன்பு ஜாமக்காரன் வாசக குடும்பத்தினருக்கு நன்றி கூறுகிறேன்.

மேலும் ஒரு வாசகர் ஞானப்பிரகாசத்துக்கு இ-மெயில் மூலம் அருமையான பதில் எழுதியுள்ளார். இடமில்லாததால் அதை வெளியிட முடியவில்லை. எச்சரிக்கையாக இருப்போம்.

 

எனக்கு அருமையான நண்பர்களே,

ஆனானப்பட்ட ஜாமக்காரனையே வஞ்சிக்கும் ஆட்களோடு க்டந்த ஐந்து வருடங்களாகப் போராடிக் கொண்டிருக்கும் அடியேனை நீங்களெல்லோரும் பாராட்டாவிட்டாலும் எனது உணர்வுகளைப் புரிந்துகொண்டாலே போதும். இப்படிப்பட்டவர்களோடு கள்ள உறவு பாராட்டும் “ப்ளாக் ஷீப்” விஜய் கும்பலின் டிஸர்ன்மெண்ட் திறனும் இப்போது கேள்விக்குறியதாகியிருக்கிறது. அவர்கள் கொஞ்சம் கௌரவம் பார்க்காமல் அடியேனைப் புரிந்துகொண்டால் எப்போது வேண்டுமானாலும் நேசக் கரம் நீட்ட ஆயத்தமாக இருக்கிறேன். நீ அறியாதவனாக இருந்தால் சில அடிகள் மாத்திரமே..... வஞ்சங்கொண்டால் உன்னைக் காப்பாற்ற யாராலும் கூடாது. ஜாமக்காரனை பெரியவர் ஞானப்பிரகாசம் ஏமாற்றியது போலவே ஜாண்சன் கென்னடி மற்றும் வியாசர் லாரன்ஸ் ஆகிய மொத்த பேருடைய சூழ்ச்சிகளும் தெரியவரும்போது காவங்கறை காவாக்கார கும்பல் திருதிரு’வென்று  விழிக்கக்கூடாது என்றே இப்போதே எச்சரிக்கிறோம்.

  • லூக்கா 12:48 அறியாதவனாயிருந்து, அடிகளுக்கு ஏதுவானவைகளைச் செய்தவனோ சில அடிகள்அடிக்கப்படுவான். எவனிடத்தில் அதிகங் கொடுக்கப்படுகிறதோ அவனிடத்தில் அதிகங் கேட்கப்படும்; மனுஷர் எவனிடத்தில் அதிகமாய் ஒப்புவிக்கிறார்களோ அவனிடத்தில் அதிகமாய்க் கேட்பார்கள்

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard