Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அற்பநாதனுக்கு ஒரு அவசர பட்டாபிஷேகம்..!?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 347
Date:
அற்பநாதனுக்கு ஒரு அவசர பட்டாபிஷேகம்..!?
Permalink  
 


பின்வரும் செய்தியைக் குறித்து நம்முடைய கருத்தை நடுநிலையுடன் எடுத்து வைப்பதற்கு முன்பாக ஒரே ஒரு வசனத்தின் மூலம் இவர்களுடைய நிலைமையை அறிந்துகொள்ள வேண்டுகிறோம்.

  • யோவான் 8:44 நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்.

நண்பர்களே, இது பதவிப் போட்டியோ சாதி சண்டையோ அல்லவென்பதையும் இவர்கள் பேசியும் எழுதியும் வரும் காரியங்களின் பின்னணி இன்னதென்பதையும் ஏற்கனவே எழுதியிருக்கிறோம். விரைவில் அவை தனி பக்கத்தில் தொகுக்கப்படும்போது அனைத்து நண்பர்களுக்கும் இவர்களைக் குறித்த காரியங்களை நிதானிக்கவும் தங்கள் பாதை இன்னதென்று தீர்மானிக்கவும் எளிதாக இருக்கும். அதுவரை பொறுமை காக்க வேண்டுகிறேன்.

மேற்காணும் வசனத்தின்படி சகஜமாகவும் சந்தோஷமாகவும் போகவேண்டிய இந்த தமிழ் கிறிஸ்தவ இணையத்தை ரசாபாசமாக்கி நண்பர்களுக்கும் மோதல்களை உருவாக்கி நண்பர்களை சிதறடித்து பகைத்து தூஷிக்கும் வேலையை மாத்திரம் இந்த ஜந்துக்கள் செய்துவருகின்றன. எனவே இவர்கள் மனுஷ கொலைபாதகர் எனும் வசனம் இவர்களுக்கு பொருந்துகிறது. ஏனெனில் அப்.யோவான் எழுதும்போது,

  • I யோவான் 3:15 தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; மனுஷ கொலைபாதகனெவனோ அவனுக்குள் நித்தியஜீவன் நிலைத்திராது என்று அறிவீர்கள்.

என்கிறார். மேலும்

  • I யோவான் 3:18 என் பிள்ளைகளே, வசனத்தினாலும், நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம்.

என்றும் சொல்லியிருக்கிறார். இவர்களோ வாயினால் சகோதரரே என்று சொன்னாலும் அத்ல் ஒரு வஞ்சகமும் சூழ்ச்சியும் இருப்பதை அனைவரும் அறிவோம். இவர்கள் இவ்விரு வசனங்களுக்கும் விரோதமாக இந்த கால்ங்களில் செயல்பட்டு வருவதை அனைவரும் அறிவோம். மேலும் இவர்களுடைய உபதேசமானது இவர்களே உட்கார்ந்து ஆராய்ச்சி செய்தவை அல்ல, அதற்குரிய வயதும் அனுபவமும் இவர்களுக்குக் கிடையவே கிடையாது. இவர்களுடைய எல்லா அலப்பறைகளுக்கும் பின்னணியில் வேறு சில துருபதேசவாதிகள் இருக்கிறார்கள். முக்கியமாக திருச்சபை சம்பந்தமாக இவர்கள் எடுத்துரைக்கும் காரியங்களின் பின்னணியில் ஏழாம் நாள்காரர்களின் வாதமும் யெகோவா சாட்சிகளின் பிதாமகனான ரசலின் உபதேசமும் இன்னும் தன்னையே ஒரு வேதப் புருஷனாக அறிவித்துக்கொண்ட கள்ளத் தீர்க்கதரிசியான ப்ரன்ஹாமும் இருக்கிறார்கள். இவர்களுக்கு அவர்களுடன் நேரடி தொடர்பு இல்லாவிட்டாலும் அவர்களுடைய உபதேசத்தில் ஊறியவர்களின் தொடர்பு நிச்சயமாக இருந்திருக்கிறது. அவர்களில் தற்காலத்தில் மேட்டுக்குடியான அறிவுஜீவிகளால் பெரிதும் மதிக்கப்படும் சாக் பூணன் அவர்களும் அடங்குவார். இதைப் பற்றியெல்லாம் விரிவான ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருக்கிறது.எங்கெல்லாம் பிரிவினையுண்டாகிறதோ அங்கெல்லாம் தேவ ஆவியானவரும் சாத்தானின் ஆவியும் மாத்திரமே கிரியை செய்யும். நான் எடுத்துசொல்லுவதெல்லாம் கிறிஸ்துவின் உபதேசத்தைக்குறித்த விழிப்புணர்வை உண்டாக்குவதன் அடிப்படையில் இருப்பதாலும் எனக்கென்று தனி இயக்கமோ சுயநல நோக்கமோ தற்பெருமையோ பேர் புகழோ இல்லாததால் என்னைக் குறித்து யாரும் கவலைப்படாமல் நான் சொல்லுவதை மாத்திரம் சிந்தித்து பார்க்கவும். இந்த காவாங்கறை காவாக்காரர்களின் கேவலமான கூட்டணி விரைவில் முடிவுக்கு வந்துவிடும். ஏனெனில் அவர்கள் நான் அவர்களைக் குறித்து எடுத்து சொல்லும் காரியங்களுக்கு பதில் சொல்லாமல் என்னைக் குறித்து ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறார்கள். எங்க பாட்டி சொல்லுவாங்க, குழந்தை செல்லம் தான், அதோட மலத்தை வீட்டிலே வெச்சுக்க முடியுமா ? என்று. நாங்கள் வறிய நிலையில் வாழ்ந்த காலத்தில் வெளியே இருக்க போவதை மைதானத்துக்கு போறது என்று சொல்லுவோம்... இந்த பிரகஸ்பதிகள் நான் மைதானத்தில் இருந்துவிட்டதை ஆராய்ச்சி செய்து அதை நுகர்ந்துகொண்டிருக்கிறார்கள் என்கிறேன். நீங்களெல்லாம் உண்மையிலேயே இயேசு எனும் அற்புதரைத் தொழுவோராக இருந்தால் என்னை வெறுத்திருக்கவே மாட்டீர்கள்... அந்த ஒரு அடையாளமே போதும் நீங்களும் (மேசியாவின்) எதிரிகளே....(என் கணக்கு இதுவரை மிஸ்’ ஆனதே இல்லையென்று அந்த கேடுகெட்ட அடிப்பொடியான் முந்தி அறியட்டும்.)

  • தீத்து 1:16 அவர்கள் தேவனை அறிந்திருக்கிறோமென்று அறிக்கைபண்ணுகிறார்கள், கிரியைகளினாலோ அவரை மறுதலிக்கிறார்கள்; அவர்கள் அருவருக்கப்படத்தக்கவர்களும், கீழ்ப்படியாதவர்களும், எந்த நற்கிரியையுஞ்செய்ய ஆகாதவர்களுமாயிருக்கிறார்கள்.

இனி............”ப்ளாக் ஷீப்” விஜய் பேசுகிறார், நாம் கேட்போமாக. :)

 

சமீபத்தில் தந்தி டிவியின் ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் சுதந்திரம் பற்றி ஒரு விவாதம் நடைபெற்றது. அதில் ஒரு காங்கிரஸ்காரர், ஒரு பா.ஜ.க காரர் மற்றும் ஒரு சமூக ஆர்வலர் ஆகியோர் விவாதித்தார்கள். யாராவது அந்த நிகழ்ச்சியை இனி இணையத்தில் பதிவேற்றம் செய்தால் நான் அந்த லிங்க்கை தருகிறேன்.

அந்த சமூக ஆர்வலர் சுதந்திரத்தை வெள்ளையர்களிடம் பெற்று கொள்ளையர்களிடம் கொடுத்துவிட்டோம் என்று கூறினார். உடனே காங்கிரஸ்காரர் கொதித்தெழுந்து எப்படி எங்கள் எல்லோரையும் கொள்ளையர்கள் என்று சொல்லலாம் என்று வாக்குவாதம் பண்ண ஆரம்பிக்க, பா.ஜ.க சார்பில் வந்திருந்த பெண்மணியும் காங்கிரஸ்காரருக்கு ஆதரவாக களத்தில் குதிக்க சளைக்காமல் விவாதித்த சமூக ஆர்வலரின் கேள்விக்கணைகளை இவர்கள் இருவராலும் சமாளிக்க முடியவில்லை. "ஒங்கள யாரு எங்களுக்கு ஓட்டுப்போடச்சொன்னா?" என்ற அளவுக்கு காங்கிரஸ்காரர் நிதானமிழந்து பேசும் நிலைக்கு சென்றுவிட்டார்,

"நாங்கள்ளாம் மோசம்னா நீங்கள்ளாம் அரசியலுக்கு வரவேண்டியதுதானே?" என்று பா.ஜ.க பேச்சாளார் சவால் விட்டார், அதுவரை ஒழுங்காக பேசிக்கொண்டிருந்த சமூக ஆர்வலர் ஒரு பெருந்தவறை அங்கு செய்துவிட்டார், " அந்த குறையை போக்கத்தானே இன்று ஆம்ஆத்மி கட்சி (அரவிந்த் கெஜ்ரிவாலின் கட்சி) அரசியலுக்கு வந்திருக்கிறது என்று சொல்லிவிட்டார்."

அதுவரை சுருங்கியிருந்த இரண்டு அரசியல்வாதிகளின் முகமும் உடனே மலர்ந்துவிட்டது. அதுவரை அவரிடம் சிக்கிக்கொண்டு விழித்த அவர்கள் அதற்குபிறகு மகிழ்ச்சியோடு சிரித்துக்கொண்டே அவரை கிண்டலடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். காரணம் ஆத்மி கட்சியும் ஒரு அரசியல் கட்சிதானே, நீயும் எங்களில் ஒருவன்தானே, உங்க கட்சி மாத்திரம் என்ன பெரிய ஒழுங்கா? நீ சமூக ஆர்வலராக அல்ல உங்க கட்சி பிரச்சாரகனாகத்தானே இங்கே வந்திருக்கிறாய்? என்று அதற்குப்பின் அவரை வறுத்தெடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

எனக்கு என்னிடம் நீ எந்த சபைக்கு போகிறாய்? உன் மேய்ப்பர் யார்? என்று விடாமல் கேட்டுக்கொண்டே இருப்பவர்களின் தந்திரம்தான் உடனே நினைவுக்கு வந்தது

எங்கள் எழுத்துக்களை ஏற்றுக்கொள்பவர்கள் யாருமே இதுவரை இந்தக் கேள்விகளை எங்களிடம் கேட்டதிலை. கேட்டாலும் அதை தனிமையில் கேட்டிருக்கிறார்கள் பொதுவில் அறிவிக்கச்சொல்லி கேட்டதே இல்லை. காரணம் நாங்கள் சொல்லுவது வேதத்திற்கு 100% உட்பட்டது என்று அவர்களுக்கு தெரியும். எங்களிடம் எந்தசபை என்று கேட்பது அர்த்தமற்றது என்பதும் அவர்களுக்கு தெரியும்.

எங்கள் எழுத்தாயிதத்தை எதிர்கொள்ள முடியாதவர்களும், எங்கள் பிரசங்கங்களால் ஆன்மீக வியாபாரத்தில் நஷ்டப்பட்டவர்களுமே இந்த கேள்வியை எங்களிடம் கேட்கிறார்கள். நாங்கள் எந்த சபை என்று சொன்ன மாத்திரத்தில் (அது எவ்வளவு நல்ல சபையாக இருந்தாலும் கூட) "அந்த சபை மாத்திரம் ஒழுங்கா? அதை முதலில் சரிபடுத்து பின்னர் வந்து மற்ற சபைகளுக்கு ஆலோசனை கூறு, உன்சபையை வளார்க்கத்தானே எங்கள் சபைகளை அழிக்கப்பார்க்கிறாய்" என்றெல்லாம்தான் சொல்லப்போகிறார்கள். எங்கள் நிமித்தம் எங்கள் சபை தலைவர்களையும் மேய்ப்பர்களையும் தேவையில்லாமல் தொந்தரவும் அவதூறும் செய்யப்போகிறார்கள். இதை புரிந்துகொள்ளும் சிற்றறிவுகூட எங்களிடம் இல்லையா?

அவர்களுக்கு எப்படியாகிலும் எங்களை நிறுத்தியாகவேண்டும், எங்கள் வாயை அடைக்க வேண்டும். பிசாசின் தந்திரங்கள் நாங்கள் அறியாதவைகள் அல்ல…நீங்கள் உங்கள் காவல்காரர்களை வேவுபார்க்கும் வேலையை தொடருங்கள்.

-வாட்ச்மென்



-- Edited by Yauwana Janam on Saturday 17th of August 2013 06:02:17 PM

__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 347
Date:
Permalink  
 

1095079_412859955497981_726711703_n.jpg

 

https://www.facebook.com/photo.php?fbid=412859955497981&set=a.387384074712236.1073741834.100003219394080&type=3&permPage=1

 

970517_412865058830804_708319519_n.jpg

நான் கண்ணியமானவனாக இருந்தால் எனது பக்கத்தில் ஒருவர் இதுபோன்ற அருவருப்பான கருத்தைப் பதிக்கும்போது அதை உடனுக்குடன் கண்டித்து அதுபோன்ற கருத்தை நீக்கி கிறிஸ்துவின் சுபாவத்தை வெளிப்படுத்தவேண்டும். இவர்களோ அலங்கத்தை கட்ட அல்ல, அதை தரைமட்டமாக்கவே புறப்பட்டிருப்பதால் ஆகாதவனை ஆள்வைத்து அடிப்பதைப் போல இதுபோன்ற இழிவான கருத்துக்களை எழுதுவோருக்கு சிவப்பு கம்பள வரவேற்பைக் கொடுக்கிறார்கள். இது தெரியாமல் நானும் ஒரு காலத்தில் இவர்களுடைய சூழ்ச்சிக்கு பலியாகினேன். விழித்துக்கொண்டபோதோ காலால் எத்தி உதைத்து துரத்தினார்கள். இவர்கள் ஜாமக்காரர்களா என்று தமிழ் கிறிஸ்தவ உலகம் சிந்திக்கட்டும்.

https://www.facebook.com/photo.php?fbid=412865058830804&set=a.387384074712236.1073741834.100003219394080&type=3&permPage=1



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard