/// வெள்ளையுடை உடுத்த சபையாரை கட்டாயப்படுத்துவது கூட மறைமுகமாக விக்கிரககாராதனைக்கு வித்திடும்.விக்கிரகாராதனை எந்த வடிவத்தில் வந்தாலும் முறியடிப்போம்.திருவிருந்தில் பங்கெடுக்க வெள்ளை உடையில் வர வேண்டுமென்பதும் கூட சடங்கு! ///
அவங்களோட பாஸ்டர் கிட்ட பேசமுடியாததையெல்லாம் பாவம் பசங்க இங்க வந்து கொட்டறாங்க... அவங்களை சொல்லி குத்தமில்லே.... வெண்ணுடை என்பது ஒரு தெய்வீக ஒழுங்கு மாத்திரமே. அது ஒருபோதும் விக்கிரகாராதனை ஆகாது. ஒரு திருச்சபையின் மேய்ப்பர் அதனை கட்டாயப்படுத்துவதிலும் தவறேதும் இல்லை. மாணவர்களுக்கு யூனிஃபார்ம் என்பது எப்படி ஒரு உணர்வையும் ஈடுபாட்டையும் தருகிறதோ அதுபோலவே இதுவும். இதுபோன்ற தான் தோன்றித்தனமான கருத்துக்களுக்கு வேதத்தில் ஆதாரமில்லை என்பதால் உடனே புறக்கணித்துவிடலாம். வெண்ணுடை தரித்தோரெல்லாம் நீதிமான்கள் என்றும் சொல்லமுடியாது. அதற்காக கறுப்பு நிறத்தில் வேண்டுமென்றே உடுத்திக்கொண்டு வந்தால் அது முரட்டாட்டத்தின் அடையாளமாகும். இப்படியே தந்தை பெரியார் போன்றவர்கள் புரட்சி என்ற பெயரில் பூணூல் அறுப்பு போராட்டமெல்லாம் நடத்தினார்கள்.
I கொரிந்தியர் 16:14 உங்கள் காரியங்களெல்லாம் அன்போடே செய்யப்படக்கடவது.