கிறிஸ்துவின் ஆயிரம் வருட அரசாட்சி என்பது ஏற்கனவே நிறைவேறிவிட்டது என்று சொல்லுகிறார்கள்... இப்படிப்பட்ட புரட்டு உபதேசத்தை உடையவர்களோடு தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று சாதிக்கும் திரு.ஜாண்சன் கென்னடி என்பார் இந்த கட்டுரையை தனது ஃபேஸ்புக் டைம் லைனில் ஏன் விட்டு வைத்திருக்கிறார். அவர் சொல்லட்டும், நான் இதையெல்லாம் ஏற்றுக்கொள்ளவில்லை, இதற்கும் எனக்கு சம்பந்தமில்லை, அவர்கள் என்னுடைய நண்பர்கள், ஆனாலும் அவர்கள் எழுதியதையெல்லாம் ஏற்றுக்கொண்டதாக சொல்லமுடியாது, ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்றும் சொல்லமுடியாது...” என்பதாக. இவர்களோடு கள்ளத் தொடர்பு வைத்திருக்கும் “ப்ளாக் ஷீப்” விஜய் என்பாரைக் குறித்து இதற்கு மேலும் விளக்கவேண்டிய அவசியமென்ன ?
இயேசு கிறிஸ்துவின் ஊழியம் என்பது தான் சாத்தானை கட்டியதாகும்.
லூக்கா 10:18அவர்களை அவர் நோக்கி: சாத்தான் மின்னலைப்போல வானத்திலிருந்து விழுகிறதைக் கண்டேன்.
மத்தேயு 12:29அன்றியும்பலவானை முந்திக் கட்டினாலொழியப்பலவானுடைய வீட்டுக்குள் ஒருவன் புகுந்து, அவன் உடைமைகளை எப்படிக் கொள்ளையிடக்கூடும்?கட்டினானேயாகில், அவன் வீட்டைக் கொள்ளையிடலாம்.
இயேசு கிறிஸ்துவின் பாடுகள், அப்போஸ்தலர்கள் பாடுகள் என்பது சாத்தான் கட்டவிழ்க்கப்பட்டதாகும்
யோவான் 13:2சீமோனின் குமாரனாகிய யூதாஸ்காரியோத்து அவரைக் காட்டிக்கொடுக்கும்படி பிசாசானவன் அவன் இருதயத்தைத் தூண்டினபின்பு, அவர்கள் போஜனம்பண்ணிக்கொண்டிருக்கையில்;
ரோமர் 8:17நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே; கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும்.
எபிரெயர் 13:12அந்தப்படியே, இயேசுவும் தம்முடைய சொந்த இரத்தத்தினாலே ஜனத்தைப் பரிசுத்தஞ்செய்யும்படியாக நகர வாசலுக்குப் புறம்பே பாடுபட்டார்.
I பேதுரு 3:18ஏனெனில், கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்; அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்.
கட்டவிழ்க்கப்பட்ட சாத்தான் ரோம பேரரசை கொண்டு இஸ்ராயலரை அழிக்கிறது
லூக்கா 21:20எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும்போது, அதின் அழிவு சமீபமாயிற்றென்று அறியுங்கள்.
இதுவே நியாயத்தீர்ப்பு.............
நியாயத்தீர்ப்பு யூதர்களுக்கு நியமிக்கப்பட்டிருந்தது. இறுதி வரை நிலைத்திருந்தவன் கிறிஸ்துவின் வலது பக்கத்திலும், கிறிஸ்துவை கொலை செய்தவர்கள் இடது பக்கத்தில். இடது பக்கத்தில் இருந்தவர்கள் பிதாவின் கோபத்திற்கு ஆளானவர்கள் (இரண்டாம் மரணம்).
I யோவான் 5:16மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைத் தன் சகோதரன் செய்ய ஒருவன் கண்டால், அவன் வேண்டுதல்செய்யக்கடவன், அப்பொழுது அவனுக்கு ஜீவனைக் கொடுப்பார்; யாருக்கென்றால், மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைச் செய்தவர்களுக்கே; மரணத்துக்கு ஏதுவான பாவமுண்டு, அதைக்குறித்து வேண்டுதல்செய்ய நான் சொல்லேன். 17 அநீதியெல்லாம் பாவந்தான்; என்றாலும் மரணத்துக்கு ஏதுவல்லாத பாவமுமுண்டு.
இந்த கட்டுரை மிக அண்மையில் பதிக்கப்பட்டது என்பதை கவனிக்கவும்.
அப்படியானால் கிபி 28-30-ல் சாத்தான் கட்டப்பட்டது எனலாம். சாத்தான் கட்டப்பட்டவுடன் கிறிஸ்துவின் 1000 வருட ஆட்சி துவங்கியது. முதலாம் உயிர்த்தெழுதலில் உயிர்த்தெழுந்த பரிசுத்தவான்கள், கிறிஸ்துவோடுகூட ஆண்டார்கள் (வெளி. 20:4-6). அந்த பரிசுத்தவான்கள் யார் என இக்னேஷியஸ் சொல்வது:
//கிறிஸ்துவுடன் பாடுகள் பட்ட சீஷர்கள் அரசாண்டார்கள்//
கிறிஸ்துவின் சீஷர்களில் எவரும் கிபி 30-ல் மரிக்கவில்லை. எனவே அவர்களில் எவரும் கிபி30-ல் உயிர்த்தெழ வாய்ப்பில்லை. மரித்து உயிர்த்தெழுந்த பரிசுத்தவான்கள்தான் கிறிஸ்துவோடு அரசாண்டவர்கள். எனவே இக்னேஷியஸ் சொல்வதுபோல், கிறிஸ்துவின் சீஷர்களில் எவரும் கிறிஸ்துவோடு அரசாளவில்லை.
2 தீமோத்தேயு நிருபத்தில் பவுல் இப்படிச் சொல்கிறார்.
கிபி 67-ல் இந்த நிருபம் எழுதப்பட்டது. எனவே கிறிஸ்துவோடு ஆளுகை செய்வதென்பது, கிபி 67-க்குப் பின்னர்தான் துவங்கியிருக்க வேண்டும். ஆனால் இக்னேஷியஸோ, கிபி 30-லேயே கிறிஸ்துவின் ஆளகை துவங்கிவிட்டதாகக் கூறுகிறர். இரு ஒரு மாபெரும் முரண்பாடு.
Ignatius Elangoஇயேசு கிறிஸ்து சொல்லுவதை நம்புகிறவன் நான்!! அவர் தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறது என்று அவர் ஊழியத்தின் காலத்தில் சொன்னார், நான் நம்புகிறேன்.
லூக்கா 17:21 இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும் சொல்லப்படுகிறதற்கும் ஏதுவிராது; இதோ, தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே என்றார்.
தன் ஊழியத்தை துவங்கியதே,
மாற்கு 1:15 காலம் நிறைவேறிற்று, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று; மனந்திரும்பி, சுவிசேஷத்தை விசுவாசியுங்கள் என்றார்.