எதிரொலி : இவர்களுக்கு ரொம்ப புத்திசாலிகள் என்று நினைப்பு. வான்கோழிகள் கூட மூடு வந்துவிட்டால் தன்னை மயில் என்று நினைத்துக்கொள்ளுமாம். நாங்கள் கூட உண்மையான ஜாமக்காரர்களை குறைகூறவில்லை. திருட்டு ஜாமக்காரர்களையும் அவசரத்துக்கு போலீஸ் வேஷம் போட்டவர்களையும் வழிப்பறி திருடர்களையுமே கண்டிக்கிறோம். கிறிஸ்துவைக் குறித்த அறிவில்லாத நீங்களெல்லாம் திருச்சபையைக் குறித்து பேசவே கூடாது. நீ யார் மற்றவர்களை விமர்சிக்க ? கர்த்தருடைய சபைக்காக நீ செய்த தியாகம் என்ன ? மேனாமினுக்கிகளும் சகோதரருக்குள்ளே பிரிவினையுண்டாக்கும் சாத்தான்களும் வேதத்தை வியாக்கியானம் பண்ண அனுமதிக்கமாட்டோம். உங்களுக்கெல்லாம் தைரியமிருந்தால் நேருக்கு நேர் விவாதம் பண்ணனும். அதைவிட்டு விட்டு இதுபோல பேடித்தனமாக கோணியிலே கல்லைக் கட்டி அடிக்கக்கூடாது.